Tuesday, July 19, 2011

குவைத்தில் இதஜ'வின் எழுச்சி!





பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
ளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் வரலாறு காணாத  அளவுக்கு கோடை வெயிலின் தாக்கம் கிளப்பிய அனலோடு, அவதூறுவாதிகளின் அடிவயிற்றிலிருந்து கிளம்பிய பொறாமை அணல் மூச்சும் அணிசேர 50 டிகிரியை தாண்டியது வெப்பத்தின் அளவு.
 
இத்தகைய பொறமை அனலுக்கு  காரணம் என்ன? சுனாமி அலையையும் விஞ்சிய அவதூறு அலைகளில் இவர்கள் பதர்களைப் போல் அடித்து செல்லப்பட்டு  விடுவார்கள் என்று சிலர் போட்ட கணக்கு தப்புக் கணக்காகி, இந்தியா-இலங்கை மட்டுமன்றி துபாய்-குவைத் என அரபகங்களிலும் ஆலவிருட்சமாய் இதஜ வளர்ந்து நிற்பதே இதற்கு காரணம்.
 
இந்நிலையில் குவைத் மண்டலம் சார்பாக இதஜ தேசியத்தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகள் இருவர் பங்கேற்கும் மூன்று நாள் சிறப்பு நிகழ்ச்சி முறையே ஜூலை 14 -15 -16 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு மக்கள் வந்துவிடக் கூடாது என்று நினைத்த சில குறுமதியாளர்கள்,  நிகழ்ச்சிக்காக  ஒட்டப்பட்ட பிரசுரங்களில் பெரும்பகுதியை கிழித்தார்கள்.  எத்தனையோ மார்க்க விரோத நிகழ்ச்சிகள் குறித்த நோட்டீஸ்களை கண்டுகொள்ளாத இவர்கள், தவ்ஹீத் பிரச்சார நிகழ்ச்சி நோட்டீசை கிழித்தெறிந்ததன் மூலம் தங்களின் தவ்ஹீத் முகமூடியையும் கிழித்துக் கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
 
இதற்கிடையில், 14 ம்  தேதி வியாழன்று மாலை ஆறு மணி அளவில் குவைத் விமான நிலையம் வந்திறங்கிய தேசியத்தலைவர் எஸ்.எம். பாக்கர், மாநில பொருளாளர் அபூபக்கர், மாநிலச் செயலாளர் செங்கிஸ்கான் ஆகியோரை வரவேற்ற மண்டல நிர்வாகிகள், அவர்களுக்கு ஓய்வளிக்க விரும்பாமல் நேரடியாக நிகழ்ச்சியின் களத்திற்கு கொண்டு வந்தார்கள்.
 
முதல் நிகழ்ச்சி மிர்காப் சிட்டியில் அமைந்துள்ள மண்ணு-சல்வா உணவகத்தின் முதல் தளத்தில் மக்ரிப் தொழுகைக்கு பின்  மண்டலத்தலைவர் முகவை அப்பாஸ் தலைமையேற்க, மண்டல துணைத்தலைவர் ஜாஹித் பிர்தவ்ஸின் இறைமறை ஓதலுடன் தொடங்கியது. இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் அழைப்பாளர் மவ்லவி அப்துல்காதிர் மன்பஈ அவர்களின் முதல் உரையுடன் தேசியத்தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர். அவர்கள் தங்களின் உரையில், ''எங்களது தாஃவா இலக்கு என்பது முஸ்லிமல்லாத மக்களுக்கு இஸ்லாத்தை எத்திவைப்பதே. திருமறையை சேர்ப்பிப்பதே. அந்த தாஃவா களத்தில் எங்களுக்கு போட்டியாக எவரும் இல்லை கிறிஸ்தவர்களை தவிர. எனவே அவதூறுகள் குறித்தெல்லாம் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை'' என்று முத்தாய்ப்பாக முன்வைத்தார்கள்.
 
நிகழ்ச்சியில் ஐந்து பேர் கலந்து கொண்டாலே அதிசயம் என்று ஆணவம் பேசியவர்களின் முகத்தை கறியை பூசும் வகையில் அரங்கம் நிறைந்ததோடு, மக்கள் நிற்கும்  அளவுக்கு அல்லாஹ் மக்களை கொண்டுவந்தான். இறுதியாக மண்டல துணைச்செயலாளர் சாதிக்சதாம் நன்றியுரையுடன் முதல்நாள் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.
 
இரண்டாம் நாள் 15 ம்  தேதி வெள்ளிக்கிழமை 'சமூகத்தீமை ஒழிப்பு மற்றும் சமுதய விழிப்புணர்வு கருத்தரங்கமாக ஏற்பாடு செய்யப்பட்ட  நிகழ்ச்சி மிர்காப் சிட்டியில் அமைந்துள்ள ஷாலிமார் உணவகத்தின் முதல் தளத்தில் மண்டலத்தலைவர் முகவை அப்பாஸ் தலைமையில், மண்டல துணைத்தலைவர் ஜாஹித் பிர்தவ்ஸின் இறைமறை ஓதலுடன் தொடங்கியது.
 
ஆரம்பமாக KIFF அமைப்பின் பிரதிநிதி அப்துல் அஜீஸின் உரையை தொடர்ந்து, தமுமுக பொதுச் செயலாளர் முஜிபுர்ரஹ்மான், இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் அழைப்பாளர் மவ்லவி அப்துல்காதிர் மன்பஈ, தமிழ்முஸ்லிம் கலாச்சார பேரவையின் காப்பாளர் முஹம்மது பாரூக் ஆகியோர் உரையாற்றினார். தொடர்ந்து தேசியத்தலைவரின் சிறப்புரையுடன் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பின்பு நிகழ்ச்சி நிறைவுற்றது.
 
இந்நிகழ்ச்சியிலும் மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டதோடு, இடமின்றி திரும்பி சென்றனர். பெண்களுக்கு தனி இடம் உண்டு என நாம் அறிவிக்காத நிலையிலும் பெண்கள் சிலர் தன்னார்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
 
மூன்றாம் நாள் நிகழ்ச்சி 16 ம் தேதி ஷுஹதா பகுதியில் அமைந்துள்ள யூசுப் அல் கலீபி மஸ்ஜிதில் மண்டல துணைச்செயலாளர் மீரான் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில நிர்வாகிகள் அபூபக்கர் மற்றும் செங்கிஸ்கான் உரையாற்றினர். இப்பகுதி தமிழ் சகோதரர்கள் கணிசமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை மண்டல நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
 
தேசியத்தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகளின் இதர நிகழ்வுகள்;
  • ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில், சுளைபிஹாத் என்ற பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய அடக்கஸ்தலம் சென்ற நிர்வாகிகள்,  அங்கு ஜனாஸா தொழுகையில் பங்கெடுத்தனர்.
  • 16 ம் தேதி மதியம் 2 மணி அளவில் குவைத்தில் இயங்கும் தமிழ் முஸ்லிம் கலாச்சார பேரவை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இதஜ நிர்வாகிகளுக்கான கவுரவிப்பு நிகழ்ச்சியில் தேசியத்தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் பாக்கர் உரையாற்றினார்.
  • 15 ம் தேதி நடைபெற்ற இதஜ'வின் கருத்தரங்கில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  1. வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக தனி அமைச்சகத்தை தமிழக அரசு ஏற்படுத்தவேண்டும்.
  2. குவைத் இந்திய தூதரகத்தில் தமிழில் வழிகாட்டியை நியமிக்கவேண்டும். அதோடு தமிழில் அறிவிப்பு பலகைகள் இடம்பெற செய்யவேண்டும்.
  3. சிறிய குற்றங்களில் ஈடுபட்டு சிறையில் வாடும் இந்தியர்களின் விடுதலைக்கு இந்திய வெளியுறவுத் துறையும்- குவைத் தூதரகமும் முயற்ச்சிக்க வேண்டும்.
  4. ஒப்பந்தப்படி இந்திய பணியாளர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறதா என்பதை இந்திய தூதரகம் நேரடியாக கம்பெனிகளுக்கு சென்று ஆய்வு செய்யவேண்டும்.
  5. மத்திய அரசு உடனடியாக முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்.
  6. தமிழகத்தில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டின் அளவு உயர்த்தப்பட வேண்டும்.
  7. தமிழகத்தில் அபகரிக்கப்பட்ட வக்பு நிலங்களை மீட்க காவல்துறையில் தனிப் பிரிவை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.
  8. தமிழகத்தில் முஸ்லிம் அமைச்சர்களை அதிகப்படுத்த வேண்டும்.
  9. இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கு அமுல்படுத்த வேண்டும்.
  10. பாபர் மஸ்ஜித் வழக்கில் விரைந்து தீர்ப்பளித்து, இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைப்பதோடு அத்வானி உள்ளிட்ட 68 குற்றவாளிகளையும் தண்டிக்கவேண்டும்.
மேலும் புகைப்படங்களை காண கிளிக் செய்க; http://kuwaitintj.blogspot.com/
 
-முகவைஅப்பாஸ்.
மண்டலத்தலைவர் இதஜ-குவைத்.
-- 

0 comments:

Post a Comment