Thursday, July 7, 2011

அல்தாபியின் வீராவேசப் பேச்சு பற்றி....

ல்தாபி!!!!!


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...



  • கேள்வி; தமுமுக தலைமையகத்தின் இரண்டாவது தளம் உணர்வு அலுவலகம் என்றும் அது ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதாகவும் கூறி அண்ணன் ஜமாஅத் நடத்திய கண்டனக் கூட்டத்தில்  பேசிய அண்ணன் ஜமாஅத்தின் மேலாண்மைக் குழு உறுப்பினர் அல்தாபி அவர்கள், ''மேலாண்மைக் குழு உறுப்பினர் என்ற நிலையை  தாண்டி ததஜவின் உறுப்பினராக சொல்கிறேன். இனி எங்களை இது போன்ற ஆர்ப்பாட்டத்திற்கு அழைக்காதீர்கள்; ஆக்கிரமிக்கப்பட்ட உணர்வு அலுவலகத்தின் பூட்டை உடைக்க வாருங்கள் என்று எங்களுக்கு  அழைப்பு விடுங்கள்' என்று பேசியுள்ளாரே! இது பற்றி உங்கள் கருத்து என்ன?

    -முஹம்மத் அலி- முஹம்மது பந்தர்.

    பதில்; கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன்  வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம் என்று ஒரு பழமொழி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது மாதிரித் தான் இதுவும். எஸ்.பி. பட்டினத்தில் ஏற்கனவே மக்களின் தொழுகைக்கு பயன்பட்டுக் கொண்டிருந்த பள்ளிவாசலை அண்ணன் ஜமாஅத் தனது பெயரில் எழுதி வாங்கி பஞ்சாயத்தாக்கி பள்ளியை பூட்டி வருஷக் கணக்காச்சு. ஆர்பாட்டம்-போராட்டம்-முற்றுகை என்றெல்லாம்  முக்கிப் பாத்தும் ஒன்னும் அசைக்க முடியல. எனவே அல்தாபி உண்மையிலே தனது பேச்சில் உண்மையாளராக இருந்தால் ததஜவின் பெயரில் பதியப்பட்டுள்ள எஸ்.பி. பட்டினம் பள்ளிவாசல் பூட்டை உடைத்து அங்கு தொழுது காட்டிவிட்டு பிறகு தமுமுக தலைமையகத்தின் இரண்டாவது தளம் பூட்டை உடைக்க  வரட்டும். இதெல்லாம் ஆகுற கதையா? எதோ நாலு  தலைகளை கண்டவுடன் உணர்ச்சி வசப்பட்டு பேசுனதைப் போயி நீங்க வேற கேள்வின்னு கேக்குறீங்களே!



    --
    7/06/2011 09:42:00 AM அன்று இயக்கங்களின் மறுபக்கம். இல் abdul muhaimin ஆல் இடுகையிடப்பட்டது

    0 comments:

    Post a Comment