Saturday, July 23, 2011

குழப்பம் செய்த TNTJ அமைதி காத்த INTJ ! நேரில் கண்ட சகோதரர் கடிதம்!



பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
                     இஸ்லாமிய சமுதாய இயக்கங்களுக்குள் பரஸ்பரம் கருத்து மோதல்கள் இருந்தாலும் அவைகளை வெளிப்படுத்தும் விதத்தில் ஒரு நல்ல அணுகுமுறை இருந்தது. அவரவர் மேடைகளிலும், எழுத்துக்களிலும், பேச்சுக்களிலும், வெளியீடுகளிலும் எதிரமைப்பினரை சாடினாலும், எதிர் அமைப்பினர் நிகழ்ச்சியில் குழப்பம் விளைவிக்கும் வகையில் பெரும்பாலும் நடந்து கொண்டதில்லை. அவ்வாறு மாற்றுக் கருத்துடையவர் நிகழ்ச்சியில் எதிர் அமைப்பினர் பிரசுரம் வெளியிட்டால் செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொண்டு சென்ற சம்பவங்கள் சில கடந்த காலங்களில் நடந்தேறியுள்ளன.
 
ஒன்றுபட்ட தமுமுக இருக்கின்ற காலத்தில், மதுரை தமுக்கத்தில் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக  நடைபெற்ற மாநாட்டின் போது, 'இலங்கையிலிருந்து ஒரு தூது' என்ற பிரசுரம் எதிர்தரப்பில் விநியோகித்துக்  கொன்டிருக்க, அது தவ்ஹீத் பிரசுரம் என கருதிய தமுமுக தொண்டர் அதை வாங்கி விநியோகிக்க, இதையறிந்த தவ்ஹீத் சகோதர்கள் அந்த தமுமுக தொண்டரை  நையப் புடைத்த வரலாறு உண்டு.                                                                                                                          அதேபோல் மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் முன்பாக பிரசுரம் விநியோகித்த விடியல் அமைப்பினர் மீது காவல்துறையில் லுஹா உள்ளிட்டோர் புகார் செய்த சம்பவமும் கடந்த காலத்தில் நடந்ததுண்டு. இன்றைக்கும் ததஜ சார்ந்த இடங்களில் மாற்று அமைப்பினர் ஒரு துண்டு சீட்டு கூட விநியோகிக்க முடியாது. அவ்வாறு எதிர் அமைப்பினரும் வினியோகிப்பதில்லை. காரணம் பயந்து கொண்டு அல்ல. பிரச்சினை தவிர்க்கவே.
 
      ஆனால் இந்த சுமூக செயல்பாட்டிற்கு வேட்டு வைக்கும் வகையில் 
இதஜ   லைர் பாக்கர் குவைத்தில்  கலந்து கொண்ட நிகழ்ச்சியின் அரங்க வாயிலின் முன்பாக  மாற்று அமைப்பான ததஜவினர் விமர்சன நோட்டீஸ் விநியோகித்துள்ளனர். இந்த இடத்தில் இதஜ அமைதி காக்கவே பிரச்சினை இல்லாமல் போய்விட்டது.                                                    இல்லையேல் கொள்கை சகோதர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ளும் சூழ்நிலையும், அதையொட்டி சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு எவருமே தாவா செய்ய முடியாத நிலையும் உண்டாயிருக்க கூடும். அல்லாஹ் பாதுகாத்து விட்டான். எனவே எதிர் அமைப்பு நிகழ்ச்சிகளில் இதுபோன்ற குழப்பம் விளைவிக்கும் செயலை இனியேனும் எந்த அமைப்பினரும் செய்யாமல் அவரவர் வழியில் அல்லாஹ்வின் பாதையில் அழைப்புப் பணியை மேற்கொள்ளுங்கள் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
BestRegord;
பீர் மரைக்காயர்,-
-குவைத்.

0 comments:

Post a Comment