Thursday, July 21, 2011

மறுமையை நினைவு படுத்திய மண்ணறை சந்திப்பு!

மறுமையை நினைவு படுத்திய மண்ணறை சந்திப்பு!
குவைத் சென்ற INTJ  தலைமை நிர்வாகிகள் பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொண்டனர்! அதில் மறக்க முடியாத  நிகழ்சிகளில் ஒன்று குவைத் சுலைபிகாத் எனும் இடத்தில உள்ள முஸ்லிம்களின் பொது மைய வாடிக்கு சென்று அங்கு வந்த  முகம்  தெரியாத முஸ்லிம்களுக்காக நடை பெற்ற ஜனாஸா தொழுகையில் பங்கேற்றதாகும் !  முன்னதாக மும்பையை சேர்ந்த முஸ்லிம் நண்பர் நம்முடைய பணிகளால் ஈர்க்கப்பட்டு மதிய விருந்துக்கு அழைத்திருந்தார்! அங்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே சகோதரர் ஒருவர் ஒரு நன்மையில் பங்கெடுக்க வருகின்றீர்களா? என அழைக்க  நாமும் புறப்பட்டோம்! குவைத்தின் இந்த ஆண்டின் உச்ச பட்ச வெய்யில் நாளான அன்று தகிதகிகும் 55 டிக்ரீ வெய்யிலில் அந்த மைய்யவாடியில் நின்ற போது 'அது மறுமையில் சூரியன் தலைக்கு மேல் கொண்டு வரப்படும் நாளை உணர்த்தியது! நெருப்புக் கங்கு போல் சுட்டது!  இந்த வெய்யிலை தாங்க முடியாத   நாம் மறுமை நிலையை எண்ணிப் பார்த்த போது நடுக்கமாக இருந்தது!
    
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சுகவாசிகளான  குவைத்திகள் நன்மையை நாடி கொடும் வெயிலையும் பொருட் படுத்தாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றது தான்! நாம் அவர்கள் எல்லாம் உறவினர்கள் என நினைத்தோம் ! விசாரித்ததில் பெரும்பாலானோர் நன்மையை நாடி வந்தவர் என தெரிய வந்தது!  ஆம் சாதாரண நன்மையா அது ? இரண்டு கீராத் என நபி ஸல் கூறிய 




உஹத் மலையளவு நன்மையல்ல்வா அது! அதற்காகத் தான் அந்த குவைத்திகள் 
  முகம் தெரியாத அந்த முஸ்லிமின் உடலை போட்டி போட்டு தூக்குகின்றனர்!  சொந்த உறவினர்களின் ஜனசாவை கூட தூக்கி செல்லாமல் , அங்கு சென்றும் ஜனாசா தொழுகையை நிறைவேற்றாமல்  ஊர்க்கதை பேசும் நம்மவர்களுக்கு மத்தியில் இப்படி ஒரு மக்களா?   இப்போது புரிகிறது குவைத் ஏன் அல்லாஹ்வின் அருள் வளம் நிறைந்த பூமியாக உள்ளதென்று!  

0 comments:

Post a Comment