Monday, November 28, 2011

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் இதயம் நிறைந்த அழைப்புப் பணி!


பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம் 
    
இன்று உங்களில் நோயாளியை சந்தித்தவர் யார் ? இன்று உங்களில் ஏழைக்கு உணவளிதவர் யார்? என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தங்கள் தோழர்களிடம் கேட்பார்கள் எனும் செய்தியின் அடிப்படையில் இந்த இரு நன்மைகளோடு தஃவா எனும் நன்மையை பெற  சொல்லிலும் செயலிலும் நபிகளாரின் நடை முறைகளைப் பின்பற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மருத்துவமனை தஃவா குழு செய்து வருவது அறிந்ததே!

கடந்த வாரம் 27.11.11ஞாயிறு அன்று மாநில பேச்சாளர் முஹம்மது முஹய்யிதீன் தலைமையில் பத்துப் பேர் அடங்கிய தஃவா குழு ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்து அவர்களிடம் இறைவனைப் பற்றியும் இஸ்லாத்தை பற்றியும்  எடுத்து சொல்லி அழைப்புப் பனி செய்தனர். 

அல்லலுற்று மருத்துவமனையில் படுத்துள பல்வேறு மதங்களை சேர்ந்த நோயாளிகள் நாம் சொல்லும் செய்தியை செவி மடுத்து கேட்பதோடு இஸ்லாத்தை உள்வாங்கிக் கொள்ளும் மருத்துவ மனை தஃவா உண்மையிலேயே உள்ள நிறைவை தருகிறது.  
















இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த) ஒரு கிராமவாசியிடம், அவரை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள்,- நபி (ஸல்) அவர்கள் ஒரு நோயாளிடம் உடல் நலம் விசாரிக்கச் சென்றால் அந்த நோயாளியிடம், கவலைப்பட வேண்டாம். இறைவன் நாடினால் (இது உங்கள் பாவத்தை நீக்கி உங்களைத்) தூய்மைப்படுத்திவிடும் என்று கூறுவார்கள்.- (தமது அந்த வழக்கப்படி நபி (ஸல்) அவர்கள் கிராமவாசியிடம் கூறியபோது) அந்தக் கிராமவாசி, நான் தூய்மை பெற்று விடுவேன் என்றா சொன்னீர்கள்* (சாத்தியம்) கிடையாது. இதுவோ வயது முதிர்ந்த பெரியவரைப் பீடிக்கின்ற சூடாகித் தகிக்கின்ற காய்ச்சலாகும். இது அவரை மண்ணறைகளைச் சந்திக்கவைக்கும் என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்படியென்றால் ஆம் (அவ்வாறே நடக்கும்) என்று கூறினார்கள்.






ஹதீஸ் தொகுப்பு:  ஸஹீஹுல் புகாரி/     - 
பாகம்:   6
அத்தியாயம்:  75 - நோயாளிகள்
துணை அத்தியாயம்:   இல்லை
பாடம்:  
11 - இறைவனுக்கு இணைவைப்போரை(ச் சந்தித்து) உடல் நலம் விசாரித்தல்.
ஹதீஸ் எண்:  5657
ஹதீஸ்
  -   அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்களின் அடிமையொருவர் நபி (ஸல்) அவர்களுக்கு ஊழியம் செய்து வந்தார். அவர் நோயுற்றுவிட்டார். அவரை உடல் நலம் விசாரிக்கச் சென்ற நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள் என்று சொன்னார்கள். இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். முஸய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறியதாவது„ (தம் பெரிய தந்தை) அபூதாலிப் அவர்களுக்கு மரண வேதனை வந்தபோது நபி (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள்.
Space

0 comments:

Post a Comment