Saturday, November 5, 2011

அரசியல் காழ்ப்புணர்வும் அண்ணா நூலகமும்!


அரசியல்  காழ்ப்புணர்வும்     அண்ணா நூலகமும்   
சென்னை கோட்டூர்புரத்தில் 172 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புகழ்பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலகத்தை, குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்போவதாக ஜெயலலிதா திடீர் அறிவிப்பு செய்துள்ளார்.
ஜெயலலிதாவால் கல்விச் சமூகத்தின் மேல் தொடுக்கப்பட்ட இரண்டாவது பெரிய தாக்குதல் இது.
முதலில் சமச்சீர் கல்வித் திட்டத்தை எதிர்க்கிறேன் என்று சொல்லி  மூக்கு உடை பட்டது அம்மையாரின் ஞாபகத்தில் இருக்கின்றதோ - இல்லையோ..
ஆனால், வேதாளம் மறுபடியுமா  முருங்கை மரத்தில் ஏறுவது?
நவீனத்துவத்தை நோக்கிய அறிவார்ந்த நூல்களையும் படித்தால் தான் அறிவும்நன்றாக வளரும்.
இது தெரியாதா ஒரு மாநிலத்தை ஆளும் முதலமைச்சருக்கு!
ஜெயலலிதாவின் இந்த (ஆணவப்) போக்கு, அவரது பைத்தியக்காரத் தனத்தை உலகுக்கு காட்டுவதாகவே  அறிவுஜீவிகள் பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.
கருணாநிதி என்கிற கிழவன் நூலகத்தை அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார் என்ற ஒரே காரணத்தால் மாறி வரும் கம்பியூட்டர் யுகத்துக்கு இணையாகவும், உலகத் தரத்திற்கு இணையாகவும் தமிழகத்தில் நூலகம் இல்லை என்ற குறையை நீக்கும் வகையிலும் கட்டப்பட்ட மிகப்பெரிய நூலகத்தை மருத்துவமனையாக மாற்றப் போகிறாராம்.
ஒரு நூலகத்துக்கான கட்டிட அமைப்புக்கும் ஒரு குழந்தைகள் நல மருத்துவமனைக்கான கட்டிட அமைப்புக்கும் இடையிலான வேறுபாடுகளை அறியாதவர் தான் இந்த ஜெயலலிதா.
நூலகத்தை முற்றிலுமாக இடித்து தான் மருத்துவமனை அமைக்க முடியும்.
இப்படியான சிறிய விஷயங்களை தனது அடிப்பொடிசுகள் மூலமாகவாவது முதலில் ஜெயலலிதா அறிந்து கொள்ள வேண்டும்.
உணர்ச்சி வசப்படுவதால் எதையும் சாதிக்க முடியாது.


12 இலட்சத்திற்கு மேற்பட்ட அறிவார்ந்த நூல்களையும் 5000 பேருக்கு மேற்பட்டோர் ஒரே நேரத்தில் அமர்ந்து படிக்கக் கூடிய வசதியுடைய பெரிய நூலகமொன்றை தான் நினைத்த பாட்டுக்கு மாற்றப் போகிறார்.
கடந்த சில மாதத்துக்கு முன்னர் வந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரான  ஹிலாரி கிளிண்டன் (வாய் பிளந்துப்)  பார்த்து பெருமைப்பட்ட நூலகம் அது.
ஆசியாவிலேயே மிகச்ச்ச்சிறந்த நூலகங்களில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் இந்த திடீர் முடிவு குறித்து பத்திரிகையாளர்கள் கருணாநிதியிடம் கேட்டதற்கு:
'இதனை தன்மானமுள்ள தமிழர்கள், தமிழ் அறிஞர்கள் ஆகியோர் முடிவுக்கே விட்டு விடுகிறேன்; வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை’’ என்று கருத்து தெரிவித்தாராம். 
ஜெயலலிதா இம்முறை அறிவார்ந்த சமூகத்தின் எதிர்ப்பை நிச்சயம் சம்பாதிப்பார்.
ஜெயலலிதா இப்படியான சிறுபிள்ளைத் தனமான் செயற்பாடுகளை அடியோடு விட்டு விடுவது அவருக்கும் அவரது கட்சிக்கும் உகந்ததாக அமையும்.
இனியாவது கல்வியோடும் கல்விச் சமூகத்தோடும் கபடி ஆடுவதை ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இப்படியே விட்டால்  கருணாநிதியின்  கோவணத்தையும் கூட அவிழ்த்து மாத்திக்கட்டுவாரோ  என்னவோ?! அட கர்மமே!!?

--- அன்புடன் உங்கள் சகோதரன்: 
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.  

0 comments:

Post a Comment