Wednesday, November 23, 2011

மீண்டும் மூக்குடைபட்ட மஸ்ஜித் திருடர்கள்!



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் 3 வது தெருவில் மர்யம் பள்ளிவாசல்  உள்ளது.  இதன் தரை JAQH பெயரில் வாங்கப்பட்ட காரணத்தால் கடந்த 2006 ம் ஆண்டில் JAQH  அமைப்பினரால் பிரச்சினைக்கு உள்ளாக்கப்பட்டது. அதன் வழக்கு இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 


இப்பள்ளியின் நிர்வாகிகள் தங்களுடைய பொருளாதார மோசடி, திருட்டை மறைப்பதற்காக  ஒழுங்காக ஒற்றுமையுடன் செயல்பட்ட கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்களை  916 (TNPJ) ஜாமாத்தின் மாநில தலைவரை அழைத்து வந்து (2011 பிப்ரவரி 19 ம் தேதி) பல துண்டுகளாக துண்டாடியவர்கள்.  இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அப்பள்ளியின் ஆவணங்களை மாற்றுவதற்கு ஆரம்பித்தனர். யாருக்கும் தெரியாமல் பள்ளிவாசல் உள்ளுக்குள் நடத்தி வந்த மோசடித்தனம் பள்ளிவாசல் வெளிப்பகுதியில் நடைபெற்றது.  2011 ம் ஆண்டு ஹஜ்ஜூப் பெருநாளைக்குப் பின்னர் அடுத்தவன் சொத்தை கொள்ளையடிக்கும் TNTJ (பார்க்க இணைப்பு படம்) என்ற  பெயரில்  டிஜிடல் போர்டை பள்ளிக்கு வெளியே தொங்கவிட்டனர்.

முன்னர் மஸ்ஜிது மர்யம்  அல் மதரஸதுர் ரஹ்மான், நிர்வாகம்,   ரஹ்மானியபுரம் பகுதி குர் ஆன் ஹதீஸை பின்பற்றும்  மக்களுக்கு மட்டும் சொந்தமானது (பார்க்க படம்) என்று சுவரில் எழுதப்பட்டிருந்தது. பள்ளிவாசலுக்கு பெயிண்ட் அடிக்கும் போர்வையில் இதை அழித்துவிட்டு TNTJ ரஹ்மானியாபுரம் கிளை ( பார்க்க படம்) என்ற போர்டை பள்ளிக்கு வெளியே தொங்கவிட்டனர். இதை கண்டு அதிர்ந்து போன JAQH அமைப்பினர் தங்களது தலைமைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களின் தலைமையின்  வழிகாட்டுதலின் பெயரில் கடையநல்லூர் JAQH னர் கடையநல்லூர் காவல் நிலையத்தில் 20.11.2011 அன்று புகார் செய்தனர். அந்த புகாரின் பெயரில் காவல் துறையினர் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் TNPJ யினரை அழைத்து அன்று மஃரிப் தொழுகைக்கு பின் உடனடியாக பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும் முன்னர் எப்படி இருந்ததோ அப்படியே இருக்க வேண்டும். இதில் ஏதாவது மாற்றம் செய்தால் உங்கள் (TNPJ )மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும் என்று ரஹ்மானியாபுரம் TNPJ யின் மோசடி, களவாணிச் செயளாலர் புஹாரி மற்றும் உள்ளவர்களிடம் எழுதி வாங்கியுள்ளனர்.
            SP பட்டிணம், உணர்வு அலுவலகத்தை தொடர்ந்து கடையநல்லூரிலும்  TNPJ யின்  மண்டை உடைந்தது. அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்.
-ஹிதாயத் சுல்தான்.  

0 comments:

Post a Comment