Saturday, November 5, 2011

தடம் புரளும் டிஎன்டிஜே- கடைய நல்லூர் கலகம்


தடம் புரளும் டிஎன்டிஜே- கடைய நல்லூர் கலகம் !

04.11.2011 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 4.30 மணியளவில் தென்காசி கோட்டாட்சித் தலைவர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசுத் தரப்பில் தென்காசி வட்டாட்சியர், கூடுதல் வட்டாட்சியர் மற்றும் கடையநல்லூர் காவல் ஆய்வாளர் கலந்து கொண்டனர்.  மக்தூம் ஞானியார் தர்கா நிர்வாகி, டிஎன்டிஜே மாவட்ட பொருளாளர் நேசனல் சாகுல், செயலாளர் கல்பட்டான் செய்யது , கடையநல்லூர் டவுண் கிளை தலைவர் கலந்தரி அய்யூப்கான் மற்றும் மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத்தினர்  பங்கெடுத்தனர்.
      07.11.2011 அன்று காலை ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை கடையநல்லூர் காயிதே மில்லத் திட­ல் நடத்துவதற்கு மேற்சொன்ன மூன்று அமைப்பினரும் அனுமதி கோரினர். தத்தமது வாதங்களை காரசாரமாக எடுத்து வைத்தனர்.
         அல்லாஹ்விடத்தில்தான் அருள் பா­லிக்க, கிருபை செய்யக் கேட்க வேண்டும் என்று சொன்னது போக தர்கா வழிபாட்டை ஆதரிக்கிற இமாமுக்குப் பின்னால் தொழுவது கூடாது. நாங்கள் தொழமாட்டோம் என்றும் எங்கள் கொள்கைக்கு எதிரானவர்களுடைய ப்ளாட்பார்மில் (கட்டுப்பாட்டில்) மேடையேறவோ செயல்படவோ மாட்டோம் என்றெல்லாம் கொள்கை முழுக்கமிட்டவர்கள் 23.08.2011 அன்று கோட்டாட்சித் தலைவர் தலைமையில் நடந்த சமாதானக் கூட்டத்தில் கோட்டாட்சியர் (RDO) மக்தூம் ஞானியார் தர்கா டிரஸ்டி இஸ்மாயில் திடல் ஏற்பாடு செய்து தருவார். டிஎன்டிஜே நோன்புப் பெருநாள் தொழுகை நடத்திக்கொள்ளவேண்டும் என்று சொன்னபோது அதை டிஎன்டிஜே மாவட்டத் தலைவர் யூசுப் அ­ மாவட்ட பொருளாளர் நேசனல் சாகுல் ஆகியோர் ஒத்துக் கொண்டனர்.
அல்லாஹ்விற்கு அடுத்தபடியாக தர்ஹா டிரஸ்டிக்கு கட்டுப்பட்டு அடங்கிப் போனார்கள். அதன் தொடர்ச்சிதான் இன்று (04.11.2011) டிஎன்டிஜே மாவட்ட பொருளாளர் நேசனல் சாகுல் கோட்டாட்சித் தலைவரைப் பார்த்து "அய்யா பார்த்து எங்களுக்கு கிருபை செய்யுங்கள். எங்களுக்கு வேறு வழியே இல்லை" என்று கெஞ்சிக் கூத்தாடினார்.
ஆக அல்லாஹ். அவுலி­யா எல்லாம் தாண்டி RDO அய்யா பார்த்து கிருபை செய்யுங்கள் என்று கேட்கும் அளவிற்கு தடம் புரண்டு போய்க்கொண்டிருக்கிறார்கள்.
மற்றொரு சந்தர்ப்பத்தில் மூன்று அமைப்பிற்கும் பொதுவாக சீட்டுக் குலுக்கிப் போடுகிறோம். எந்த அமைப்பிற்குக் கிடைக்கிறதோ அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை காயிதே மில்லத் திட­ல் நடத்திக் கொள்ளட்டும் என்று ஆர்டிஓ சொன்ன போது டிஎன்டிஜே மாவட்டப் பொருளாளர் நேசனல் சாகுல் "சீட்டுக் குலுக்கிப் போட்டு முடிவெடுப்பதெல்லாம் இஸ்லாமிய சித்தாந்தத்திற்கு எதிரானது. ஆதலால் இதை நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம்" என்றார். மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத்தைச் சார்ந்தவர்களும் தர்கா டிரஸ்டியும் சீட்டுக் குலுக்கிப் போட்டு முடிவெடுப்பதை ஏற்றுக் கொண்டனர். போயும் போயும் தர்காவாதிக்குத் தெரிந்த (மார்க்க) அறிவு கூட தவ்ஹீத் கொள்கையின் மொத்தக் குத்தகைதாரர்களுக்குத் தெரியவில்லை.
இறைவா ! உள்ளங்களை திருப்புபவனே!  எங்கள் உள்ளங்களை உனது வழிபாட்டின் பால்  திருப்புவாயாக. (ஆதாரம்: முஸ்லிம் )
“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.) குர்ஆன் 3 : 8
அல்லாஹ் போதுமானவன் 
 என்றும் உண்மையுடன்
ஹிதாயத். 
 Reply
 Reply to all
 Forward
 Invite Hidayath Sultan to chat
Reply
More
Hidayath Sultan as.hidayath@gmail.com to pjtntjwebmasterwebmasterme
show details 7:24 AM (15 hours ago)
அஸ்ஸலாமு அலைக்கும் 

எனது இதற்கு முன்பு அனுப்பிய மின்னஞ்சலில் ஸலாம் சொல்ல மறந்து விட்டேன்.

என்றும் அன்புடன் 
ஹிதாயத்.
- Show quoted text -
 Reply
 Reply to all
 Forward
 Invite Hidayath Sultan to chat
Reply
More
Hidayath Sultan as.hidayath@gmail.com to sathikabdulwebmasterme
show details 10:48 PM (9 minutes ago)
அஸ்ஸலாமு அலைக்கும் 

TNTJ  மாநில தலைவரின் பதிலை உங்களுக்கு அப்படியே தருகின்றேன்.

தவறுகள் திருத்தப்பட வேண்டும்  - எனது தவறு ஸலாம் சொல்லாதது என்று எண்ணினேன். உடனே மறு மின்னஞ்சலில் ஸலாத்தினை எத்திவைத்தேன், முகமன் கூறுவதில் ஸலாம் தான் சிறந்தது என்று பிரச்சாரம் செய்யும் எங்கள் அண்ணன் ஸலாத்திற்கு பதில் கூட சொல்லமாட்டார் , இன்ஷா அல்லாஹ் நாம் அவருக்கு சொல்வதெல்லாம் ஒன்று மட்டும்தான் இறைவனை நீங்கள் அஞ்சும் விதத்தில் அஞ்சுங்கள். 

இதில் என் மீது என்ன சட்டநடவடிக்கை எடுத்தாலும் அதற்கு எனது பதில் ஒன்றுதான் அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன். ஈமானில் உறுதியுடன் தான் தவறை சுட்டிக் காட்டினேன். இன்ஷா அல்லாஹ் மீண்டும் சுட்டிக் காட்டுவோம்; இஸ்லாத்தில் மனோ இச்சைக்கு அனுமதி இல்லை தௌஹீதின் பெயரால் செய்யும் தவறுகள் சுட்டிக்கட்டச்சொன்னது உங்கள் ஆன்லைன் பி ஜே இணையதளம். 

நாம் தெளிவாக புரிந்து கொண்ட மார்க்கம் இஸ்லாம். எப்போது ஸலாமிற்கு பதில் இல்லையோ அப்போது அங்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது நாம் நன்கு அறிந்து இனியும் உங்களுக்கு மெயில் அனுப்புவேன் என்று எண்ணியது தவறு. 

மனிதன் தவறிழைப்பவன் என்ற  திருமறை வாக்கு உண்மையானது.

என்றும் உண்மையுடன் 
ஹிதாயத்.

---------- Forwarded message ----------
From: பி.ஜைனுல் ஆபிதீன் <pjtntj@gmail.com>
Date: 2011/11/5
Subject: Re: தடம் புரழும் டிஎன்டிஜே
To: Hidayath Sultan <as.hidayath@gmail.com>


எனக்கு இது போன்ற கிறுக்குத் தனங்களை இனி அனுப்பக் கூடாது. உன்னிடம் இருந்துஎந்த மெயிலும் எனக்கு வரக்கூடாது. இனி உன்னிடம் இருந்து மெயில் வந்தால் சட்டப்படி அது குற்றம் என்பதையும் சைபர் கிரைம் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றும் கண்டிப்புடம் தெரிவித்துக் கொள்கிறேன்.
- Show quoted text -

0 comments:

Post a Comment