Monday, November 21, 2011

பன்றித்தோல் போற்றிய பீ.ஜே

பன்றித்தோல் போற்றிய பீ.ஜே 

பீ.ஜே பன்றித்தொலை ஹலால் செய்தது :


அருவருப்பான பி. ஜே. யின் பன்றித் தோல் வியாபாரமும்

 பரிசுத்தமான சஹாபாக்களின் செயல்பாடுகளும்


பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் ரஹீம்,
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹுமதுல்லாஹி வ பரகாத்தஹு

பதனிட முன்பு பன்றியின் தோலை விற்க முடியாது என்று
ஏற்றுக் கொள்ளும், பி. ஜே. கும்பல், அந்த தோலை பதனிட்டால்
சுத்தமாகி விடும் எனவே விற்கலாம், பாவிக்கலாம் என்று
ஒரு வாதத்தை வைக்கிறது.


பன்றியை விற்பனை செய்வதை இஸ்லாம் தடை செய்து உள்ளது. அந்த அடிப்படையில் தான் பன்றியின் தோலை பதனிட முன்பும் விற்க முடியாது என்ற முடிவு. இதனை பி. ஜே . கும்பல் ஏற்கிறது.

இப்படி முற்றாக தடை செய்யப்பட்ட ஒன்றின் ஒரு பாகத்தை விற்பனை செய்வதற்கு விதிவிலக்காக ஒரு ஹதீஸ் அல்லது குர் ஆன் வசன அனுமதி தேவை. அதுவல்லாமல் அதனை விற்பனை செய்ய முடியாது. இது ஹதீஸ் கலை பற்றி அறிந்தவர்கள் அறிந்திருப்பார்கள்.


செத்தவைகளை ஹராமாக்கிய பின்னர், ஆட்டிட்க்கு அனுமதி
வழங்கப்படுகிறது. எனவே, உயிரோடு விற்பனைக்கு அனுமதியுள்ள பிராணிகளுக்கு , இது பொருந்தும் என்று ஹதீஸ் கலை , குறிப்பாக தடை செய்யப்பட்ட ஒன்றிற்கு முரண்படாமல் தீர்ப்பு சொல்கிறது.

உயிரோடு இருந்தாலும், செத்துவிட்டாலும் பன்றி ஹராம் என்று குறிப்பிட்டு தடுக்கப்பட்ட ஒன்றின் பாகத்தை விற்பனை செய்ய ,
பாவனை செய்ய , விதிவிலக்காக ஒரு குர் ஆன் வசனம் அல்லது ஹதீஸ் வராதவரை அதனை விற்பனை செய்ய பாவிக்க முடியாது. இது ஹதீஸ் கலை விதி.
ஏனெனில், ஒன்றுக்கு குறிப்பாக தடை வந்தால் , அதனை பொதுவான அனுமதியால் விதிவிலக்கு அளிக்க முடியாது என்பது ஹதீஸ் கலை அறிந்தவர்கள் அறிந்து இருப்பார்கள்.

குறிப்பான தடைக்கு , குறிப்பான விதி விலக்கு வர வேண்டும். இந்த விதிகளை அறியாத , படிக்காத தெரியாத பி. ஜே. கும்பல், முற்றிலும் ஹராமான பன்றியின் தோலை பதனிட்டு விற்பனை செய்ய பார்க்கிறது.

இது எப்படி என்றால், யூதர்கள் கொழுப்பை ஹராமாக்கிய பொது, அதனை உருக்கி விற்று விட்டார்கள். யூதர்களை அல்லாஹ் சபிப்பானாக என்று நபியின் பிரார்த்தனையும் உண்டு. பார்க்க புகாரி.

இவர்கள் பன்றியை ஹராமாக்கிய போது அதனை பதனிட்டு விற்க
சொல்கிறார்கள். செத்தவைகளில் ஆட்டுக்கு விதி விலக்காக
சொல்லப்பட்டதை, பன்றிக்கும் விதி விலக்கு என்று மோட்டு கியாஸ் பிடிக்கிறார்கள்.

செத்தவைகள் ஹராம் என்ற படியால் தான் அருமை சஹாபாக்கள் , செத்த ஆட்டை குறிப்பிட்டு , முடியுமா என்று கேட்கிறார்கள். அப்போது, ஆட்டுக்கு விதி விலக்கு அளித்து , பதனிட்டால் சுத்தமாகி விடும் என்று நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்.

எனவே, இந்த விதி விலக்கான சட்டத்தை , ஆட்டை போன்றவைகளுக்கு பிரயோகிக்க முடியும் என்பது ஹதீஸ் கலை முடிவு.இன்னும் பெயர் குறிப்பிட்டு அடையாளப்படுத்தி குறிப்பிடப்பட்ட ஹராமான வைகளுக்கு பிரயோகிக்க முடியாது என்பதும் ஹதீஸ் கலை முடிவாகும்.

ஹதீஸ் கலையை முறையாக படித்திருந்தால் இப்படியான பன்றித்தோல் பிழைப்பு செய்ய வேண்டியதில்லை. மார்கத்தை முறையாக படிக்கவில்லை என்று பகிரங்கமாக சொல்லும் பி. ஜே . , பூஜையாளர்களுக்கு இது விளங்குமா என்று சொன்னால் விளங்காது என்று நான் சொல்வேன். ஏன் என்றால், இந்துக் கோயிலுக்கும் உரிமை போராட்டம் என்று இவர்கள் அண்ணன்
பச்சை ஷிர்கை சொல்லும் போது அதனை சரி காணும் இவர்களுக்கு , இந்த பன்றித் தோல் எம்மாத்திரம்.

சிலை வணக்கத்திற்கு துணை போகும் போது , பன்றி தோல் எம்மாத்திரம். அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்.

இந்த பதனிடும் முறை அன்று தொட்டு இருந்து வருகிறது. இருந்தும். எமது சஹாபாக்களோ , தாபியீன்களோ , தபஉத் தாபியீன்களோ இந்த பன்றி தோலை பதனிட்டு சுத்தமாக்கி பாவிக்க முனையவில்லை.

ஏனெனில், அவர்கள் மார்கத்தின் தடையை அறிந்து இருந்தார்கள். அவர்கள் கல்வியை முறையாக கற்றவர்கள். ஆனால் இவர்கள் குர் ஆன், ஹதீஸ் என்று சொல்லி சொல்லி, குர் ஆனும் ஹதீசும் குறிப்பிட்டு சொல்லி ஹராமாக்கியத்தை, குர் ஆன் ஹதீஸ் பெயரால் ஹலால் ஆக்க முயற்சிக்கிறார்கள் என்றால், குர் ஆன் ஹதீசுக்கு மாற்றமாக விளக்கம் சொல்கிறார்கள் என்று தெளிவாக தெரிகிறது.

இவர்களது மர மண்டையால், தர்கவியல் வழிமுறையால் மார்க்க சட்டம் கழற்றுவது தான் இவர்களின் வழிகேட்டுக்கு சிறந்த அடையாளம். இதனை இந்த தெளிவான பன்றித் தோல் மஸாயில் வெளிக்காட்டி விட்டது.

அருமை நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
மாணவர்களின் அறிவை விடவும், தனக்கு தெரியும் என்றும் புரியும் என்றும் தம்பட்டம் அடிக்கும் இந்த கும்பல் , அருமை சஹாபாக்களின் செயல் பாடு அருவருப்பாக தெரிந்தது என்று சொல்கிறது.

ஆனால், அருவருப்பான பன்றியின் தோலை , பதனிட்டு விற்று பிழைப்பு நடத்தலாம் பாவிக்கலாம் என்று அருவருப்பான தனது செயல்பாட்டை அறிவிப்பூர்வமானது என்று வாதாட்டம் நடத்துகிறது.

அன்சாரிகளை நேசிப்பது ஈமானை சேர்ந்தது என்று நபி மொழி சொல்ல , இவர்களுக்கு அது அருவருப்பான செயல்பாடு. அல்குர் ஆன் நஜீஸ் அருவருப்பு என்று சொன்ன பன்றி தோல் பதனிடும் செயல்பாடு இவர்களுக்கு சுத்தமான ஈமானை சேர்ந்த செயல் பாடு .

இது தான் இந்த பி. ஜே. பூஜையாளர்கள் கதை. இப்படி தெட்டத் தெளிவான வழிகேடு இருப்பதை நியாபடுத்தி , ஈமானின் செயல்பாட்டை தூக்கி எறிந்து, பி. ஜே. யின் அருவருப்பான செயல்பாட்டை தூக்கி பிடித்து அல்லாஹ்வின் மார்கத்தை அசிங்கப்படுத்தும் இந்த கும்பல் திருந்துவார்களா ? சிந்திப்பார்களா ? என்னை திட்டி தீர்ப்பார்களா ? அல்லாஹ் தான் அறிந்தவன்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

நன்றி: 

அவர்கள் அல்லாஹ்வை விடுத்து தங்கள் பாதிரிகளையும்துறவிகளையும் கடவுளராக ஆக்கிக் கொண்டார்கள்”(9:31)

(முன்பு கிறிஸ்தவராக இருந்தஅதிய்யுப்னு ஹாதிம் (ரழியல்லாஹுஅன்ஹுஇந்த வசனத்தை நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்அவர்கள் ஓதிடக் கேட்டபோது அந்த மக்கள் அவர்களை (பாதிரிகளையும்,துறவிகளையும்வணங்கிக் கொண்டிருக்கவில்லையே என்று கூறினார்அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்அவர்கள்சரிதான்ஆனால் அந்த பாதிரிகளும்துறவிகளும் அல்லாஹ் ஹராமாக்கியவற்றை ஹலால் என்றும்அல்லாஹ் ஹலாலாக்கியவற்றை ஹராம் என்றும் கூறும்போது அவர்களும் அவ்வாறு ஏற்றுக் கொண்டார்களேஅதுதான் அவர்களை அவர்கள் வணங்குவதாகும்." என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்அவர்கள் கூறினார்கள். (திர்மிதிபைஹகி)

0 comments:

Post a Comment