Sunday, November 13, 2011

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் தடையை மீறி பாபர் மஸ்ஜித் மீட்பு ரதயாத்திரை விளக்கக் கூட்டம்.

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் தடையை மீறி 
பாபர் மஸ்ஜித் மீட்பு ரதயாத்திரை 
  விளக்கக் கூட்டம்.  

தென் சென்னை மாவட்டம் எம்.ஜி.ஆர் நகரில் ரத யாத்திரை குறித்த விளக்கக் கூட்டம் நடத்த அனுமதி கொடுக்காமல் INTJ கிளை நிர்வாகிகளை இழுத்தடித்த காவல் துறையின் போக்கை கண்டித்து நேற்று 13.11.11. அன்று மாலை தடையை மீறி பொதுக்கூட்டம் என்று INTJ  கிளை மாவட்ட நிர்வாகம் அறிவித்ததும் காவல்துறை அதிகாரிகள் போலிஸ் படையை கொண்டு வந்து குவித்து மிரட்டிப் பார்த்தது. INTJ வின் செயல் வீரர்கள்  கூட்டம் நடத்துவதில் உறுதியாக   நின்றதும் இறுதியில் வேறு வழியின்றி அனுமதி வழங்கினர்.
கூட்டத்தில் மாநிலப் பேச்சாளர்கள் மசுதா ஆலிமா, கமாலுதீன் மன்பயி ,  மற்றும் மாநில செயலர்கள்  காஞ்சி ஜாகிர் , செங்கிஸ் கான் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.  தெரு முனைக் கூட்டமாக நடக்க வேண்டிய கூட்டம் காவல் துறையின் கெடு பிடியால்  பொதுக்கூட்டம் போல் திரண்டது காவல் துறையினர் மத்தியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தொண்டர்களின் உறுதியை வெளிப் படுத்தியது.






0 comments:

Post a Comment