Monday, November 28, 2011

ரதயாத்திரை பிறமத வழிமுறை ! உணர்வில் எழுத்து வியாபாரியின் புலம்பல் .




''தானும் படுக்க மாட்டான்., தள்ளியும் படுக்க மாட்டான்' என்று பழமொழி தமிழில் உண்டு. அதைப்போல் பாபர் மஸ்ஜித் போராட்டத்தின் மூலம் இயக்கம் வளர்த்த தனிநபர் ஜமாஅத், இரண்டாண்டுகளாக இந்த போராட்டம் விசயத்தில் அலட்டிக் கொள்வதில்லை. பாபர் மஸ்ஜித் குறித்த அலகாபாத் தீர்ப்பு வந்தவுடனேயே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும்வரை பொறுமை காப்போம். பின்னர் 'டிக்ளேர்' பண்ணுவோம் என்று தனிநபர் தனது தக்லீதுகளை மூளைச்சலவை செய்து கொண்டிருந்த வேளையில், அலகாபாத் அநீதி தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற முற்றுகை நடத்தியது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.


இதைக்கண்டு பொருமிய தனிநபர், தனது அடிப்பொடிகளை ஏவி விட்டு, போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இத்தனை பேர் என்று தலையை எண்ணியது போல் இளக்காரமாக எழுதவைத்து அதில் இன்பம் கண்டார். அதோடு பாபர் மஸ்ஜிதுக்கு சம்மந்தமே இல்லாத ஜனவரியில் இதஜ'வின்  வழிமுறையை பின்பற்றி நீதிமன்ற முற்றுகை என்று ஒரு நாடகம் நடத்தி முடித்தார். 


இந்த ஆண்டு டிசம்பர் ஆறு நெருங்கிய பின்பும் எந்த போராட்டமும் இதுவரை தனிநபர் ஜமாஅத் அறிவிக்கவில்லை. ஆனால் மேலப்பாளையம் முதல் சென்னை வரை பாபர் மஸ்ஜித் மீட்பு ரதயாத்திரை என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்து, தடையை மீறி நடத்தி கைதாகினர். இதைக்கண்டும் பொறுக்காத தனிநபர், நாங்கள்தான் உண்மையான இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்று கள்ளச் சங்கத்தின் பதிவு எண்ணை போலீசில் காட்டி, நாங்கள் ரதயாத்திரை எதையும் நடத்தவில்லை  என்று நாரதர் வேலை பார்த்தும் கூட ரதயாத்திரை நடந்து விட்டதே! இதஜ'வுக்கு மக்கள் ஆதரவு கிடைத்து விட்டதே! என பொருமிய தனிநபர், தனது அபகரிக்கப்பட்ட வார இதழில் கூலிக்கு எழுதும் ஒருவரை வைத்து கூறுகெட்ட  தனமாக 'ரதயாத்திரை; அத்வானியை பின்பற்றும் முஸ்லிம்கள்' என்று ஒரு கட்டுரை எழுதச் செய்துள்ளார்.


அந்த கட்டுரையில் முதலாவதாக MNP , PFI , SDPI , என்ற பெயர்களில் இயங்கும் அமைப்பை வம்புக்கு இழுத்துள்ளனர். இப்படி பல பெயர்களில் ஏன் செயல்படுகிறீர்கள் என்றால், சங்பரிவார் பல பெயர்களில் செயல்படவில்லையா? என்று இந்த இயக்கத்தவர்கள் சொல்கிறார்களாம். எனவே இவர்கள் சங்பரிவார் வழியில் செல்கிறார்கள் என்கிறது அந்த கட்டுரை. இந்த இயக்கத்தினர் ஒரே பெயரில் இயங்கவேண்டும் என்றே நாமும் விரும்புகிறோம். அதே நேரத்தில்  பல பெயர்களில் இயங்குவதால் மட்டும் அவர்கள் சங்பரிவார் வழியில் செல்கிறார்கள் என்றால், இந்த தனிநபர், அரசியலுக்கு தமுமுக என்றும், ஆன்மீகத்திற்கு அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு என்றும் இரண்டு பிரிவாய் இயங்கினாரே! தமுமுக மேடையில் இஸ்லாம் பேச மாட்டோம் என்றும், அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் மேடையில் அரசியல் பேசமாட்டோம் என்றும் அடுக்குமொழி பேசினாரே! அப்படியாயின் இந்த தனிநபரும் சங்பரிவார் வழிமுறையை பின்பற்றினாரா? இதைத்தான் மாமியார் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் பொன் சட்டி என்பார்களோ!


அடுத்து இரண்டவதாக பாக்கர் ரதயாத்திரை நடத்துவது ஏன் என்று கேட்டால், ரதயாத்திரை அத்வானிக்கு மட்டும் சொந்தமா என்கிறாராம் பாக்கர். அதனால் பாக்கர் சங்பரிவார் வழியில் செல்கிறார் என்கிறார் இந்த கட்டுரை கைக்கூலி. சங்பரிவார் கத்தியை பயன்படுத்தி காய்கறி வெட்டுகிறார்கள். அதே போல் முஸ்லிம்களும் கத்தியை பயன்படுத்தி காய்கறி வெட்டினால் இவர்கள் சங்பரிவாரை பின்பற்றியவர்கள் என்பாரோ? ஒரு ரதயாத்திரை நடத்தி அதன் மூலம் ஒருவன் பள்ளியை இடித்தால், அதே ரதயாத்திரை நடத்தி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி பள்ளியை கட்ட முனைவது சங்பரிவார் வழியில் சென்றதாக ஆகிவிடுமோ? எதிரியின் ஆயுதத்தை எடுத்து எதிரியை வீழ்த்துவதால் அவன் எதிரியை பின்பற்றுபவன் ஆகி விடுவானா?
நாம் இந்த கட்டுரை கைக்கூலியை கேட்கிறோம். 


நீங்கள் நடத்தக்கூடிய ஆர்பாட்டங்கள்-சிறை நிரப்பும் போராட்டங்கள்- முற்றுகைகள்  இறைத்தூதர்[ஸல்] நடத்திக் காட்டியதா? இல்லையே? இங்கே உள்ள கம்யூனிஸ்ட்களும், காவிக் கூட்டமும் பின்பற்றும் போராட்ட வழி முறைதானே!   இந்தியாவில் யாரோ ஒரு அரசியல்வாதி காட்டித்தந்தது தானே! அப்படியானால் நீங்கள் இந்த போராட்டங்களை அறிமுகப்படுத்திய அந்த அரசியல்வாதிகள் வழியை  பின்பற்றுவர்கள் என்று சொல்லலமா? நீங்கள் நடத்தக்கூடிய போராட்டங்களும் ஆர்பாட்டங்களும் எப்படி மார்க்கத்தில் தடுக்கப்பட்டதில்லை என்று சொல்லி செய்கிறீர்களோ, அதே போன்று ரதயாத்திரை என்பதும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டதல்ல. 


ரதயாத்திரை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை  என்றால்,  தெரிந்தவர்களிடம் கேளுங்கள். பின்பு அது மார்க்கத்தில் எப்படி தடுக்கப்பட்டது என்பதை  ஆதாரத்தோடு சொல்லிவிட்டு, பின்பு கட்டுரை எழுத கிளம்புங்கள்.

மேலும், ரதயாத்திரையின் போது அத்வானி கோயிலுக்கு போனார். அதுமாதிரி பாக்கரும் போவாரா? என்றும் கேட்கிறார் இந்த கைக்கூலி கட்டுரையாளர். ஆம்! அத்வானி பயணத்தில் அவரது வழிபாட்டுத் தலத்திற்கு சென்றது போன்று, பாக்கரும் தனது பயணத்தை தொடர்ந்து செல்லும் பட்சத்தில் எந்தெந்த ஊர்களில் எந்தெந்த பள்ளிவாசலில் எந்தெந்த தொழுகையை நிறைவேற்றுவது என்று பட்டியலும் போடப்பட்டது. கோயிலுக்கு போவது பற்றி இவ்வளவு அக்கறையாக கேட்கிறாரே இந்த கட்டுரை கைக்கூலி! ஏன் பள்ளிவாசலுக்கு போகாமல் கோயிலுக்குத் தான் போக வேண்டும் என்று தனிநபர் ஏதாவது 'லேட்டஸ்ட்' பத்வா வழங்கி விட்டாரா? என் எனில் ஏற்கனவே இவர் எந்தப் பள்ளிக்கும் போவதில்லை! 


மேலும், யூத கிறிஸ்தவர்களுடைய வழிமுறையை பின்பற்றுவது குறித்த நபிமொழியை கொண்டு வந்து போட்டு, இவர்களின் இந்த செயல் நபி[ஸல்] அவர்களின் எச்சரிக்கையை ஞாபகப்படுத்துகிறது என்கிறார் இந்த கட்டுரை கைக்கூலி. இந்த ஹதீஸ் வணக்க வழிபாடுகள் விசயத்தில் யூத, கிறிஸ்தவர்களை பின்பற்றுபவர்கள் குறித்து சொல்லப்பட்டதா? அல்லது பொதுவாக உலக விசயத்திற்கும் சேர்த்து சொல்லப்பட்டதா? உலக விசயத்திற்கும் சேர்த்து சொல்லப்பட்டது என்றால், நீங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம்-போராட்டம்- சிறை நிரப்பும் போராட்டம்- முற்றுகை இவையாவும் பிறமதத்தவர்கள் காட்டியவை-செய்தவை தானே! அப்படியானால் நீங்கள் யூத, கிறிஸ்தவ வழியில் செல்கிறீர்கள் என்று ஒப்புக்கொள்கிறீர்களா?
'
மேயுற மாட்டை நக்குற மாடு கெடுக்கும் என்பதைப் போல, இறையில்ல மீட்பு  போராட்டத்தை நீங்கள் கைவிட்டுவிட்டு, இறையில்லங்களை திருடும், இறையில்லங்களை பூட்டும் வேலையை கச்சிதமாக செய்து வருகிறீர்கள். அந்த தவ்ஹீத்[!] பணியை தொடருங்கள். அடுத்தவர்களை சீண்டிப் பார்க்காதீர்கள். சிறுமையடைந்து போவீர்கள்.
-மக்கள் ரிப்போர்ட் வாசகன்.

0 comments:

Post a Comment