Saturday, November 5, 2011

முஸ்லிம் லீக் பெயரை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடாதது ஏன்?- காதர்மொய்தீன் கேள்வி. தேர்தல் ஆணையம் செயலை வரவேற்கிறோம்; தாவூத் மியாகான்., லீக்குகளின் குடுமிபிடி.


முஸ்லிம் லீக் பெயரை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடாதது ஏன்?- காதர்மொய்தீன் கேள்வி.
தேர்தல் ஆணையம் செயலை வரவேற்கிறோம்; தாவூத் மியாகான்.,
லீக்குகளின்  குடுமிபிடி.
 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தனித்து உள்ளாட்சியில் களம் கண்டது.394 இடங்களில் தனி சின்னத்தில் போட்டியிட்டு 119 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கட்சி ரீதியாக நடந்த தேர்தலில் 41 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள்.  இது பெரிய வெற்றி இல்லை என்றாலும் கணிசமான வெற்றியாகும். ஆனால் லீக்கின் இந்த வெற்றியை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலில் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பற்றிய செய்தி இடம்பெறவில்லை. இவர்களின் வெற்றியை சுயேட்சைகளோடு  சேர்த்து விட்டார்கள். இதைக் கண்டு கொதித்தெழுந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன்,
 
''உள்ளாட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 394 இடங்களில் தனி சின்னத்தில் போட்டியிட்டு 119 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். கட்சி ரீதியாக நடந்த தேர்தலில் 20 நகராட்சி கவுன்சிலர்கள், 4 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 17 பேரூராட்சிகள் என 41 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். 41 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதால் வெற்றி பெற்ற கட்சிகளின் வரிசையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 10வது இடம் கிடைத்துள்ளது. ஆனால் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலில் எங்கள் கட்சி இடம்பெறவில்லை. 35 இடங்களை பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள், 14 இடங்களை பெற்றுள்ள புதிய தமிழகம், 11 இடங்களை பெற்றுள்ள ராஷ்டிரீய ஜனதா தளம், ஒரு இடத்தை பெற்றுள்ள அகில இந்திய பார்வர்டு பிளாக், ஐ.ஜே.கே., ஆர்.எஸ்.பி. ஆகிய கட்சிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினருக்கு இது பெரும் வேதனையாக உள்ளது. எங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும் இது பெரும் அநீதியாக தெரிகிறது.இந்த குறைபாடு பற்றி தமிழக தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவோம். நியாயம் கேட்போம். அந்த உரிமையை மாநில தேர்தல் ஆணையம் நிச்சயம் வழங்கும் என்று நம்புகிறோம்''. என்று  கூறியுள்ளார்.
 
மறுபுறம்  தேர்தல் ஆணையத்தின் இந்த 'கண்டுகொள்ளாமை'யை கடுமையாக வரவேற்றுள்ளார்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தாவூத் மியாகான்.  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக உள்ளாட்சித் தேர்தலில், காதர் முகைதீனின் தலைமையில் உள்ள இயக்கத்தின் சார்பாக போட்டியிடுபவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று பதிவு செய்யக்கூடாது என, நாங்கள் அளித்த மனுவை தமிழக தேர்தல் கமிஷன் ஏற்றுள்ளதை வரவேற்கிறோம். காதர் முகைதீன் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வெற்றி பெற்ற வேட்பாளர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை பயன்படுத்தினால், அவர்களை தமிழக தேர்தல் கமிஷன் பதவி நீக்கம் செய்ய வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
 
தமிழக அரசியல் அரங்கில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசியல் கட்சிகளுக்குள் பிளவு ஏற்படுவதும், பிரிந்தவர்கள் ஒவ்வொருவரும் 'நாங்கள் தான் உண்மையான கட்சி' என்று உரிமை கொண்டாடுவதும், நாளடைவில் இந்த் உரிமை கோஷம மறைந்து அவரவர் வழியில் அரசியல் தொழிலை கவனிக்கத் தொடங்கி விடுவதும் நாம் காணும் காட்சிகளாகும். ஆனால் ஏற்கனவே முஸ்லிம் லீக் அல்ல; முஸ்லிம் 'வீக்' என்று வர்ணிக்கப்படும் இந்த கட்சியில் மட்டும் இரு பிரிவினரும் உரிமை கொண்டாடும் படலம் ஓய்ந்தபாடில்லை. என்றைக்குத்தான் திருந்துவார்களோ?-
முகவை  அப்பாஸ் 

0 comments:

Post a Comment