Wednesday, November 9, 2011

பெண் குற்றச்சாட்டு! அண்ணன் பதவி விலகுவாரா?

                           பெண்  குற்றச்சாட்டு! அண்ணன் பதவி விலகுவாரா?





நாங்கள் பரிசுத்தமான இயக்கம் எங்கள் நிர்வாகிகள் மீது குற்றம் செய்து நிருபிக்கப் பட வேண்டியதில்லை 'குற்றம் சாட்டப் பட்டாலே பதவி விலக வேண்டும்' என கடந்த காலங்களில் சொல்லி வேண்டாதவர்களை எல்லாம் ராஜினாமா எனும் பெயரில் 'சில மாதங்கள் விலக்கி' வைத்த அண்ணன்,
மாநாடு ஒன்றில் பெண்களின் கையைப் பிடித்து கம்ப்யூட்டர் கற்றுக் கொடுத்தார் என குற்றச்சாட்டு தன் மீது வந்த போது தன் போனை அனைத்து விட்டு பொறுப்பில் இருந்து ஒதுங்கி இருந்ததாக பாக்கர் விசாரணையின் போது கிரீன் பேலஸ் ஹோட்டலில் கூறினாரே அது போல்    தற்போது பதவி விலகுவாரா? அல்லது வேறு விளக்கம் சொல்லி தலைவர் பதவியில் நீடிப்பாரா? 

ஏன் எனில் இ மெயில் லில் அந்தப் பெண் ஏழு ஆண்டுகளாக தொடர்புள்ளதாக கூறியுள்ளதும்,வரம்பு மீறி ஆபாச வார்த்தைகளை பயன் படுத்துவதன் மூலம் எந்த அளவு அண்ணனோடு நெருக்கம் என்பதும் , அண்ணன் தானே முன் வந்து தன் இ.மெயில் திருட்டு போனதாக ஒப்புக் கொண்டிருப்பதும் , அதற்காக நேற்று கமிசனர் அலுவலகம் சென்று புகார் அளித்திருப்பதும் செய்தியை உறுதிப் படுத்துகிறது. ஆனால் அண்ணன் வழக்கம் போல் நேரில் வந்து நிரூபிக்கத் தயாரா? என்பது விவகாரத்தை திசை திருப்பும் செயலாகும். உங்கள் இமெயில் இல் இருந்து அந்தப் பெண் மணிக்கும் அந்தப் பெண்ணின் இ.மெயில் இல் இருந்து உங்களுக்கும் இ.மெயில் வந்திருப்பது மறுக்க முடியாத உண்மை! மக்களிடம் இருந்து மறைத்தாலும் மறுமையில் அல்லாஹ்விடமும் நீங்கள் மறைக்க முடியாது. ஆகையால் நீங்கள் உங்கள் வாதப் படி பரிசுத்த இயக்கத்தின் பதவியை விட்டு விலகி நீங்கள் பரிசுத்தமானவர் என்பதை நிரூபிக்க வேண்டும் என மக்கள் எதிர் பார்க்கிறார்கள்.
-இப்னு ஹுசைன் 

0 comments:

Post a Comment