Saturday, December 10, 2011

ஜனதா கட்சி தலைவர் சு.சுவாமி க்கு புகழ்வாய்ந்த ஹார்வேர்ட் பல்கலைகழகம் தனது கதவுகளை மூடியது.

ஜனதா கட்சி தலைவர் சு.சுவாமி க்கு புகழ்வாய்ந்த  ஹார்வேர்ட் பல்கலைகழகம் தனது கதவுகளை மூடியது. 

சில மாதங்களுக்கு முன்பு - இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் சில இணைய தளங்களில் மததுவேசத்தை - மதகலவரத்தை  தூண்டும் வகையில் கட்டுரை எழுதினார். இதற்கு முஸ்லிம்களும் - மனித உரிமை ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்த்தனர். மததுவேசம் தூண்டும் சு.சுவாமியை ஹார்வேட் பலகலை கழகத்துக்குள் நுழைய விடக்கூடாது என்று முஸ்லிம் மாணவர்கள் போராட்டக் களத்தில் குதித்தனர்.  

துவக்கத்தில் - பேச்சு சுதந்திரத்திற்கு (free speech) தடைவிதிக்க முடியாது என்று சு.சுவாமிக்கு வக்காலத்து வாங்கிய பல்கலை கழக நிர்வாகம் - பேச்சு சுதந்திரம் என்ற முகமூடியுடன் முஸ்லிகளுக்கெதிரான வெறுப்பை தூண்டும் பேச்சை (hate speech) அனுமதிப்பது தவறு என்று உணர்ந்தது. சு.சுவாமியை பேராசிரியராக நீடிக்க அனுமதிப்பது தொடர்பான ஓட்டெடுப்பில் பெரும்பான்மை ஹார்வேட் பல்கலை கழக பேராசிரியர்கள் - அனுமதிக்க கூடாது என்று வாக்களித்தனர்.   

0 comments:

Post a Comment