Monday, December 5, 2011

இளையான்குடியில் பொதுக்கூட்டம். தடுக்க புகார் அளித்த தறுதலை ஜமாஅத்!


                                இளையான்குடியில் பொதுக்கூட்டம்.
                          தடுக்க புகார் அளித்த தறுலை மாஅத்!








இளையான்குடியில் கடந்த சனியன்று மாலை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக் கூட்டம் நடை பெற்றது! மாவட்ட செயலாளர் துருக்கி ரபீக் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் மாநில செயலளர் செங்கிஸ் கான் 'இஸ்லாமிய ஆட்சியாளர்களும் இன்றைய ஆட்சியாளர்களும்' எனும் தலைப்பிலும் '19 கூட்டம் வழி கேடர்களே'    எனும் தலைப்பிலும் , எஸ்.எம்.பாக்கர் 'இந்திய முஸ்லிம்களின் இன்றைய நிலை' எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினர் .

கூட்டம் துவங்கும் முன்பே இளையான்குடியில் உள்ள வழி கேட்டுக் கூட்டமான 19 கூட்டத்தினர் போனில் சவால் விட்டனர்.உங்கள் சவாலை எழுத்துப் பூர்வமாக நேரில் தாருங்கள் எனக் கேட்டு பின்னர் முகவரி இல்லாமல் ஒரு கடிதத்தை கொடுத்துள்ளனர். பின்னர் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது போன் போட்டு தொல்லை   செய்து கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாகப் பேசிய மாநிலப் பேச்சாளர் குரான் வசனங்களைக் கொண்டே விளக்கி இப்போது இந்த மேடைக்கு வரத் தயாரா?சவால் விடுத்தார்.   அது மட்டுமில்லாமல் குரான் மட்டும் போதும் எனக் கூறும் இவர்கள் 'குரானை மட்டும் வைத்துக் கொண்டு தொழுகையை செய் முறையாக தொழுது காண்பித்தால் ஒரு லட்சம் ருபாய் பரிசு என அறிவித்த இளையான்குடியை சேர்ந்த துபாய் சகோதரர் ஜாவித் அவர்களின் சவாலும் அங்கு மேடையில் அறிவிக்கப் பட்டது !

 இத்தனை பிரச்சனைக்கு மத்தியில் நாம் இருந்து கொண்டு இருக்கும் போது தறுதலை ஜமாஅத்தின் இளையான்குடி நகர நிர்வாகி 'இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எங்களுடையது எனப் புகார் அளித்துள்ளார்.என காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு வர மாவட்ட செயலாளர் துருக்கி ரபிக் 'யார் புகார் அளித்தர்களோ அவரை இருக்க சொல்லுங்கள் அவர் தறுதலை ஜமாஅத்தின் நிர்வாகியாக இருந்தால் அவர்கள் எங்கள் விசயத்தில் தலையிடுவது கோர்ட்டை அவமதிக்கும் செயல் '  நான் கோர்ட் ஆர்டரோடு   வருகிறேன்! என  சொன்னதும் நீங்கள் வர வேண்டாம் நீங்கள் தான்  இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்பது மூன்றண்டுகளாக எங்களுக்கு தெரியும் நாங்கள் அவர்களிடம் சொல்லி விடுகிறோம் என காவல் துறை  அதிகாரிகள்   கூறியுள்ளனர் . இன்னும்  எத்தனை  நாள்  தான்  இந்த ஈனச்  செயலை  செய்வார்களோ    தெரியவில்லை .இதனால்  இவர்களுக்கு  என்ன  பலன்  என்பதும்  தெரியவில்லை .
யா அல்லாஹ் இந்த குழப்ப வாதிகளுக்கு நேர் வழி காட்டுவாயாக!   

0 comments:

Post a Comment