அல்லாஹ்வின் கிருபையால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தஞ்சை மாவட்டம் சார்பாக பாபர் மஸ்ஜிதை இடித்தகுற்றவாளிகளை கைதுச்செய்ய கோரி மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு காலை 10:30 மணிக்கு நடைபெற்றது.
இந்தஆர்ப்பாட்டத்திற்கு M. S. ரஹமத்துல்லா (தஞ்சை வடக்கு மாவட்ட துணை தலைவர்) தலைமைதாங்கினார். குடந்தை ஜாஃபர் (தஞ்சை வடக்கு மாவட்டசெயலாளர்) மற்றும் சாஜித் பாட்சா (தஞ்சை தெற்கு மாவட்டசெயலாளர்) முன்னிலை வகித்தனர். கோவை ஜாஃபர் (மாநிலசெயலாளர்) மற்றும் நாச்சியார்கோவில் ஜாஃபர் (மண்டல செயலாளர்) ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
மாநில செயலாளர் கோவை ஜாஃபர் அவர்கள் பேசும்போதுமுஸ்லிம்களின் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தின்நியாயங்களை அரசு உணர்ந்து இப்போராட்டத்தின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். அதேபோல்பாபர் மஸ்ஜித் இடம் தொடர்பாக தீர்ப்பு வழங்கியஅகமதாபாத் உயர் நீதிமன்றம் மத நம்பிக்கையின்அடிப்படையில் தீர்ப்பு வழங்கியுள்ளது. சுhட்சியங்கள் மற்றும்ஆதாரங்கள் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்கவேண்டும்என்று உச்ச நீதிமன்றத்தை அனுகியுள்ளோம் என்றுகூறினார்.
மாற்றுமத சகோதரர்களும் கலந்துக்கொண்டு கண்டனஉரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பெரும் திரளானமக்கள் கலந்துக்கொண்டனர் (அல்ஹம்துலில் லாஹ்).






0 comments:
Post a Comment