Sunday, December 4, 2011

மனிதன் அறிவை மங்கசெய்யும் அனைத்து பொருட்களும் போதை பொருட்களே; இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் விவாத முடிவு!



ள்ளிக்கூட விடுமுறை நாட்களில் நம் வீட்டுச் சிறுவர்கள் அண்டை வீட்டு சிறுவர்களை நோக்கி, வாங்கடா! விளையாடப் போவோம்' என்று சொல்வதைப் பார்க்கிறோம். அதே போல சிலர் பொழுது போக்குக்காகவும், சிடியாக்கி பணமாக்குவதற்காகவும் தான்  விவாதம் செய்கிறார்களோ என எண்னும் அளவுக்கு விவாதங்களில் ஈடுபடுவதைப் பார்க்கிறோம். முடிவே இல்லாத இப்படிப்பட்ட விவாதங்களில் இருந்து மாறுபட்டு ஒரு பயனுள்ள அவசியமான விவாதம் ஒன்று சென்னையில் சமீபத்தில் நடந்தேறியுள்ளது.
 
கள் உணவின் ஒரு பகுதி என்றும், கள் இறக்க தமிழகத்தில் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்றும், பனை, தென்னை பொருட்களை மூலப் பொருட்களாக கொண்டு மதுபானங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு கள் இயக்கம் தொடர்ந்து போராடி வருகிறது. இதன் ஒருங்கிணைப்பாளர்  நல்லசாமி, கள்ளை காந்தி ஆதரித்தார்., மத்திய அரசு கள்ளுக்கு நிதி ஒதுக்கியது, கள் உணவுப் பொருள்தான் என்று மருத்துவம் சொல்கிறது என்றெல்லாம் பேசி வந்தார். மேலும் கள் இறக்குமதி செய்வதை வலுவாக எதிர்த்த முன்னாள் பனைவாரிய நலத்தலைவர் குமரி அனந்தனை விவாதத்திற்கும்  அழைத்தார். நல்லசாமியின் விவாத அறைகூவலை குமரி அனந்தன் ஏற்றதையடுத்து கடந்த 23  ஆம் தேதி சென்னையில் விவாதம் நடைபெற்றது.
 
கள் உணவுப் பொருள் என்ற தலைப்பில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமியும், கள் போதைப் பொருள் என்ற தலைப்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனும் பேசினார்கள். நடுவராக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஜி.எஸ்.ஆறுமுகம் கலந்து கொண்டார். 
விவாதத்தில் கள் உணவுப்போருளே என்று நிரூபிக்கவேண்டிய நல்லசாமியோ, ''திருவள்ளுவர் சொல்லிவிட்டார் இறைச்சி உண்ணக்கூடாது என்று இருக்க முடியாது. ஒரு அரசின் கடமை என்ன? சத்தான உணவு கொடுப்பது. வாழ்க்கை தரத்தை உயர்த்துவது. உடல் நலத்தை பாதுகாப்பது. இவை அனைத்தும் கள்ளில் உள்ளது. இப்போது உள்ள மதுவில் என்ன உள்ளது. ஆல்கஹாலை தவிர ஒன்றும் இல்லை. சித்த வைத்தியத்தில் கள் மருந்து. கள்ளினும் காமம் இனிது என்று திருவள்ளுவரே கூறியுள்ளார்'' என்று சொல்ல,
நல்லசாமியின் கூற்றை மறுத்த குமரி அனந்தனோ,  ''கள்ளும் இனிது, காமமும் இனிது என்று திருவள்ளுவர் கூறவில்லை. கள்ளைவிட காமம் இனிது. கள்ளை குடித்து கெட்டு போகாதீர்கள். காதலியின் காதல், காமம் இனிது என்றே திருவள்ளுவர் கூறியுள்ளார். மது என்பது மருத்துவரின் அறிவுரைப்படி மருந்தாக மட்டுமே இருக்க வேண்டும். மருந்தே விருந்தாக ஆகிவிடக் கூடாது. நம் அனைவரின் நோக்கம் முழுமையான மது விலக்காகவே இருக்க வேண்டும் என்று மடக்கி திருக்குறள் பற்றிய நல்லசாமியின் அறியாமையை விவரித்தார். 
இவ்வாறாக நடந்த விவாத முடிவில், நடுவர் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஜி.எஸ்.ஆறுமுகம், ''மக்களுக்கு சத்துணவு அளிப்பதும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், பொது சுகாதாரத்தை காப்பதும் அரசின் கடமை என அரசியல் அமைப்பச் சட்டப் பிரிவு 47 கூறுகிறது. இதன்படி, கள்ளுக்கு அரசு தடை விதித்திருப்பது சரியே. மனிதனின் அறிவை மங்கச் செய்கின்ற பொருள்கள் அனைத்தும் போதைப் பொருள்களே. அப்படியானால், கள்ளும் போதைப் பொருளே. எனவே, கள்ளுக்கும் தடை விதிப்போம், மற்ற மதுபானங்களுக்கும் தடை விதிப்போம் என்று தீர்ப்பளித்தார். 
 
இந்த விவாதத்தின் தீர்ப்பில்,  மது விசயத்தில் இஸ்லாம் கூறும் கருத்து வெளிப்பட்டுள்ளது.
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'பித்உ' குறித்துக் கேட்கப்பட்டது. அது தேனால் தயாரிக்கப்படும் மதுவாகும். யமன் வாசிகள் அதை அருந்திவந்தார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'போதை தரும் (மது)பானம் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதேயாகும்' என்று கூறினார்கள்.[புகாரி]
மேலும், இந்த விவாதத்தின் மூலம் கள் என்பது உணவுப்பொருள் அல்ல. போதைப்பொருள் தான் என்று குமரி அனந்தனால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இனியாவது கள்ளை தூக்கிப்பிடித்துக் கொண்டு திரியாமல் 'நல்ல'சாமியாக மாற நல்லசாமி முயற்ச்சிக்கவேண்டும். அரசு உடனடியாக பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும். அப்போதுதான் மக்கள் நலன் நாடும் அரசாக இருக்கமுடியும்.

0 comments:

Post a Comment