Tuesday, December 13, 2011

முதல்வர் ஜெயலலிதா முஸ்லிம்களுக்கு சொன்னதும்- செய்வதும்!

 முதல்வர் ஜெயலலிதா முஸ்லிம்களுக்கு சொன்னதும்- செய்வதும்!


முதல்வர் ஜெயலலிதாவிடம் முஸ்லிம்கள் வைத்த கோரிக்கைகளை விட்டு விட்டு அழும் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுப்பது போன்று 
  • உலமா ஊதியத்தை ஏற்றித் தந்துள்ளோம், 
  • ஹஜ் மான்யத்தை உயர்த்தியுள்ளோம். 
  • வக்பு வாரியத்திற்கு 3 கோடி நிதி ஒதுக்கீடு! என அறிவிப்பு செய்துள்ளார்.
தேர்தலின் போது முஸ்லிம்கள் வைத்த கோரிக்கைகள் யாதெனில் 

  • முஸ்லிம்களின்  3.5 %   இட ஒதுக்கீட்டை உயர்த்தி தரவேண்டும், 
  • அதில் உள்ள குளறுபடிகள் நீக்கப் படவேண்டும், 
  • கட்டாய திருமண சட்டத்தில் உள்ள ஷரியத் சட்டத்திற்கு எதிரான பிரிவுகள் நீக்கப் பட்டு மகல்லா ஜமாத்துகளின் பதிவு ஏற்கப் பட வேண்டும், 
  • ஆக்கிரமிக்கப்   பட்டுள்ள கோடிக்கணக்கான் வக்பு சொத்துக்கள் மீட்கப் படவேண்டும்,     
தேர்தலின் போது முஸ்லிம்கள் வைத்த இந்தக் கோரிக்கையை ஏற்று தன்னுடைய திருச்சி நெல்லை பிரசாரக் கூட்டங்களில் வாக்குறுதி அளித்த ஜெயலலிதா அதை வசதியாக மறந்து விட்டு நாம் கேட்காத விசயங்களை கொடுத்து ஏமாற்றியுள்ளார். திமுக வினரிடம் இருந்து அபகரிக்கப்பட்ட சொத்துக்களை மீட்பதில் காட்டும் ஆர்வத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட வக்பு வாரிய சொத்துக்களை மீட்போம் எனும் வாக்குறுதியில் காட்டவில்லை.

சமுதாய சொத்தான வக்பு சொத்துக்களை மீட்டால் அதில் இருந்து நாமே நிதியாதாரத்தை உருவாக்க   முடியும்!  உலமாக்களுக்கு ஊதியம், சைக்கிள், 
எல்லாம் நாமே வாங்க முடியும், விமான நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்தினால், வசதியானவர்களின் கடமையான ஹஜ்ஜுக்கு மான்யமே தேவை இல்லை . அரசியல் வாதிகளாலும், அதிகார வர்க்கத்தாலும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ள சொத்துக்களை மீட்டுக் கொடுங்கள் 
அது போதும், அதில் இருந்து நாங்கள்    அரசாங்கத்திற்க்கே   உதவ முடியும். என் எனில் இந்தியாவில் இராணுவத்திற்கு அடுத்தபடியாக . அதிக சொத்துக்களை உடையது இந்தியா இஸ்லாமிய வக்பு வாரியம் தான். 

கருணாநிதி சொன்னதை செய்வோம் ! செய்வதை சொல்வோம்! என்றார், நீங்கள் சொன்னதை விட்டு விட்டு சொல்லாததை செய்கின்றீர்கள். மக்கள்  கேட்கும் பால் விலை குறைப்பையும், பஸ் கட்டண குறைப்பையும் விட்டு விட்டு மிக்சி கிரைண்டர், மின் விசிறி என இலவசங்களை காட்டி ஏமாற்றுவது போல் இஸ்லாமிய சமுதாயத்தையும் ஏமாற்ற நினைக்காமல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள் என முஸ்லிம்கள் எதிர் பார்க்கிறார்கள்,    
  -இப்னு ஹுசைன் 

0 comments:

Post a Comment