Monday, December 19, 2011

பகவத் கீதை சம்பவத்திற்கு பிறகாவது பாடம் படிக்குமா சமுதாயம் ?

கடந்த இரண்டு நாட்களாக பாராளுமன்றம் எதிர்க் கட்சிகளால் அல்லோலகல்லோலப் படுகிறது! காரணம் ரஷ்யாவில் பகவத் கீதையை தடை செய்ய வேண்டும் ஏன் எனில் அது தீவிரவாதத்தை போதிக்கிறது என நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது தான்.  இது வரை குரானை தீவிர வாதத்தை போதிக்கிறது என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள்தான் இப்போது கீதையை பற்றி சொன்னதும் குய்யோ முறையோ எனக் குதிக்கின்றனர்.

குர்ஆனில் அன்றைய நிலையில் ஆட்சியாளராக இருந்த நபி ஸல் அவர்களுக்கு போரில் கடைப் பிடிக்க வேண்டிய , சட்டம் ஒழுங்கைக் காக்கவேண்டிய விசயங்களை அல்லாஹ் கூறும் பொது    'எதிரிகளை எங்கு கண்டாலும் வெட்டுங்கள் , கொல்லுங்கள்' என சொன்னதை தீவிரவாதம் என்பவர்கள் அதையே கீதையில் கண்ணன் அர்ச்சுனனுக்கு சொந்தங்களையே கொல்ல சொல்லும் கீதையை அது போர் தர்மம் என்றனர்.அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காக்க என்றனர்.  இவர்களுக்கு தீவிரவாதமாக தெரிந்த குரானின் வார்த்தைகள் இன்றைக்கு ரஷ்யாவுக்கு தீவிரவாதமாக தெரிந்தால் அதைக் கண்டு கொதிக்கின்றனர். ஆனால் இன்றைய உங்கள் மன நிலையில் தான் முஸ்லிம்கள் இருந்திருப்பார்கள் என்பதை இந்துத்வாவினர் புரிந்து கொள்ளவேண்டும்.

இதில் முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டியது யாதெனில் கீதைக்கு ரஷ்யாவில் தடை விதிக்கக் கோரும் வழக்குக்கே இங்கே பாராளுமன்றம் இரண்டு நாட்களாக ஸ்தம்பிக்கிறது! ஆனால் அன்றைக்கு அமெரிக்காவில் பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் என்பவனால் குரான் எரிக்கப் படும் செய்தி வந்த போது பாராளுமன்றத்தில் நமக்காக குரல் எழுப்ப எந்த நாதியும் இல்லை. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏறலமனோர் இருந்தும் குரல் எழுப்ப தோன்றவில்லை. அந்த அறிவிப்பு வந்த போது இதை எதிர்த்து குரல் கொடுக்க எந்த இஸ்லாமிய இயக்கமும் முன் வரவில்லை. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே பெருநாள் என்றும் பாராமல் அன்று போராடி சிறை சென்றது!  பகவத் கீதை சம்பவத்திற்கு பிறகாவது பாடம் படிக்குமா சமுதாயம் ?

குரான் எரிப்பை கண்டித்து INTJ தடையை  மீறி ஆர்பாட்டம் ! 300 பேர் கைது!௦   

0 comments:

Post a Comment