Sunday, December 4, 2011

அகிம்சை பேசும் கசாப்புக்கடைக்காரன் கத்தி!



லகமெங்கும் போர் என்ற பெயரின் அரச பயங்கரவாதம் நிகழ்த்திவரும் நாடான அமெரிக்காவே, ஒரு பயங்கரவாதி தனது நாட்டிற்கு வந்துவிடக் கூடாது என அனுமதி மறுக்கும் அளவுக்கு சிறப்பை பெற்றவர் திருவாளர் நரேந்திரமோடி. இவர் கையில் உள்ள சூலாயுதத்தில் இன்றும் முஸ்லிம்களின் இரத்தம் சொட்டிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் இவர் காந்தி பிறந்த மாநிலத்தை ஆளும் முதல்வர் என்பதால் அவ்வபோது அகிம்சை கருத்துக்களையும் அவிழ்த்து விட்டு வருகிறார். அந்த வரிசையில், போலீசார் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ள இவர்,  அவ்வாறு இல்லையெனில், மக்களுக்கு போலீசிற்கு எதிரான உணர்வு ஏற்பட்டு விடும். அதற்கு போலீசார் இடம்தரக் கூடாது'' என்றும் கூறியுள்ளார்.
 
மனிதநேயம் குறித்து இந்த மாமிசபட்சிணி அடுத்தவர்களுக்கு உபதேசிக்கும் அருகதையுண்டா?
முஸ்லிம் இனப்படுகொலையை கண்டுகொள்ளாமல் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கச் சொன்னவர், பல போலி என்கவுன்டர்களுக்கு தூண்டுகோலாக இருந்தவர், என்கவுண்டர்கள் மூலம் கொலை செய்வதை ஒரு கொள்கையாகவே குஜராத் அரசு வைத்திருக்கிறது. 2002ல் நடந்த கலவரங்கள், போலீஸ் அடக்குமுறைகள், கொலைகள் உள்ளிட்டவற்றுக்கு குஜராத் அரசே காரணம் என்று முன்னாள் குஜராத் டிஜிபி ஸ்ரீகுமார் அவர்களால் குற்றம் சாட்டப்பட்டவர் இந்த மோடி,
 
2005-ஆம் ஆண்டு சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் படுகொலை நிகழ்ந்தது. நவம்பர் 26-ஆம் தேதி அதிகாலை நரோல் க்ராஸிங்கில் இந்த போலி என்கவுண்டர் படுகொலை நிகழ்த்தப்பட்டது. சொஹ்ரபுத்தீன் ஷேக்கையும், அவரது மனைவி கெளஸர் பீயையும் இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு பேரை படுகொலைச் செய்த அதே விவசாய பண்ணை வீட்டில் வைத்து கொலைச் செய்ததாகவும், சொஹ்ரபுத்தீன் மனைவி கெளஸர் பீயை கொலைச் செய்யும் முன்பு மோடியின் போலீஸ் மிருகங்கள் அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர் என்பதும் பின்னர் நிரூபணமானது. கவுஸர் பீயை கொலைச் செய்து தீயிலிட்டு கொளுத்தியுள்ளனர். இந்த போலி என்கவுண்டர் படுகொலைக்கு சாட்சியான போலீஸ் இன்ஃபார்மர் துளசிராம் பிரஜாபதியை கடந்த 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி படுகொலைச் செய்தனர்.இவையெல்லாம் மோடியின்  மனிதநேய[!] ஆட்சிக்கு சிறு உதாரணங்கள்.
 
மேலும், போலி என்கவுண்டர்கள் மூலம் முஸ்லிம்கள் உயிரை பறிப்பது ஒருபுறம், ஏற்கனவே கொன்றுவிட்டு என்கவுண்டர் நாடகமாடிய இந்த மோடியின் முகத்திரை இஸ்ரத் ஜஹான் விசயத்தில் வெளிப்பட்டதே! “”இந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்காதீர்கள்” என்று மோடி அந்தக் கூட்டத்தில் வெளிப்படையாகவே உத்தரவிட்டதை, உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் சஞ்சீவ் பட் சாட்சியமளித்தார். அந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவும் மோடிக்கு ஆதரவாகச் செயல்படவே, தனது சாட்சியத்தையே உச்ச நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலமாக அவர் தாக்கல் செய்தார் என்பதற்காக அவரை பதவியை  விட்டு நீக்கி, பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளினாரே மோடி! இவர் மனிதநேயம் பேசுவதா?
 
என்ன செய்வது?  சவப்பெட்டி ஊழல் முதல், நில ஒதுக்கீடு ஊழல், சுரங்க ஊழல் என அத்தனை ஊழல்களையும் 'அசால்டாக' செய்து விட்டு, பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சிக் காலத்தில் (1999) தொலைத்தொடர்புத் துறையில் ரூ.43,523 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய அமைச்சர் மிலிந்த் தேவ்ரா'வால் குற்றம் சாட்டப்படும் இவர்கள், ஊழலுக்கு எதிராக ரதயாத்திரை வெட்கமின்றி, நடத்தும் போது, மனிதநேயம் பேசுவதில் என்ன ஆச்சர்யமிருக்கிறது? மோடி மனித நேயம் பேசி அதைக் கேட்கும் நிலையில் நமது நாடு உள்ளது வேதனைக்குரியதுதா

0 comments:

Post a Comment