Sunday, December 4, 2011

பஞ்ச் பட்டிக்காட்டான்





தி.மு.க., எம்.பி., டி.ஆர்.பாலு பேட்டி:"2ஜி' வழக்கில், சிறையிலிருந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களின் அதிகாரிகள் ஐந்து பேருக்கு, ஜாமின் கிடைத்துள்ளது. இதனால், இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிமொழிக்கும், ஜாமின் கிடைக்கும் என்ற எங்கள் நம்பிக்கை அதிகரித்துள்ளது; ஜாமின் மனு மீதான விசாரணைக்காக காத்திருக்கிறோம்.
பஞ்ச் பட்டிக்காட்டான்; ஒரு காலத்துல மொழிப்போர் தியாகிகள் விடுதலையை எதிர்பார்த்து காத்திருந்த கழகம், இன்றைக்கு ஊழலால் உள்ளே சென்றவர்களின் விடுதலையை எதிர்பாத்து காத்திருக்கிறது. இதை காலமாற்றம் எனபதா? இல்லை கொள்கை மாற்றம் என்பதா? 

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா; மும்‌பை பயங்கவாத தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியா, பாகிஸ்தானிடம் இதுபோன்ற பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும், இத்தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுகொள்கிறது.
பஞ்ச் பட்டிக்காட்டான்; பாகிஸ்தானுக்கு வேண்டுகோள் விடுத்த அறிக்கையை அவசரப்பட்டு கிழிச்சுப் போட்டுறாதீங்க. ஏன்னா ஒருவேளை அடுத்த வருஷமும் வேண்டுகோள் விடுக்கையில தேவைப்படுமே!

பசுமைத் தாயகம் அமைப்பின் மாநிலச் செயலர் அருள் அறிக்கை:சிறுவர்களையும், இளைஞர்களையும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக்க, "சிகரெட்' நிறுவனங்கள் முயல்கின்றன. இதற்காக, சினிமாக்களில் புகை பிடிக்கும் காட்சிகள், திட்டமிட்டு திணிக்கப்படுகின்றன. சட்டப்பூர்வமான விளம்பரங்கள் தடை செய்யப்பட்ட நாடுகளிலும், நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு, பெரும் தொகை லஞ்சமாகக் கொடுத்து, புகை பிடிக்கும் காட்சிகள் திணிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பஞ்ச் பட்டிக்காட்டான்; இதனால தாங்கள் சொல்ல வருவது என்னவோ? உங்க சின்ன அய்யா மத்திய சுகாதாரத்துறை அமைச்சரா இருந்தப்ப, சினிமாவுல சிகரெட் பிடிக்க தடை கொண்டு வந்ததுக்கு பதிலா, சிகரேட்டுக்கே தடை கொண்டு வந்திருக்கலாமே! ஏன் செய்யல?

தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி : நாம் உலகில் அசுத்தமான நாடாகவே இருக்கிறோம் என, மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். சரியான அமைச்சர்கள் இல்லாமல், அழுக்கான அமைச்சர்கள் உள்ள நாடு அழுக்காகத்தானே இருக்கும்.
பஞ்ச் பட்டிக்காட்டான்; அட என்னங்க நீங்க., இப்பிடி பொத்தாம் பொதுவா சொல்றதுக்கு பதிலா, எங்க எடியூரப்பா மாதிரி கை சுத்தமான ஆளுக அமைச்சரா இருந்தா நாடு சுத்தமா இருக்கும்னு சொல்லுங்களேன்.

பத்திரிக்கைச் செய்தி; புதிய மின் கட்டண உயர்வு குறித்து, டிசம்பர் 2ம் தேதியன்று நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட முடிவு செய்துள்ளது. கட்டண உயர்வு குறித்து எழுத்து மூலமான கருத்துக்கள் மற்றும் மறுப்புரைகளை டிசம்பர் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் ஆணையம், பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
பஞ்ச் பட்டிக்காட்டான்; பொதுமக்கள் கட்டண உயர்வு வேண்டாம்னு கருத்துச் சொன்னா விட்டுவிடவா போறீங்க? ஏத்தனும்னு முடிவு பண்ணிட்டீங்க. பிறகு இந்த  கருத்து, கணிப்புன்னு திசை திருப்புற வேலை தேவையா?

0 comments:

Post a Comment