Saturday, April 2, 2011

காணவில்லை! காணவில்லை!! காணவில்லை!!!

சமுதாய மக்கள் ரிப்போர்ட் வர இதழில் சமீபத்தில் வெளியான 'காணவில்லை' என்ற அறிவிப்பு குறித்து விமர்சனம் எழுதிய பொய்யரின் ஆசி பெற்ற பொய்யன் தளம், சம்மந்தமில்லாமல் சகோதரர் பாக்கர் படத்தை போட்டு கிண்டலடித்துள்ளது.

''இப்ப உதாரணத்திற்கு பாக்கர் காக்கா காணாமல் போய்விட்டார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு மக்கள் ரிப்போர்டில் எப்படி விளம்பரம் போடுவீர்கள்? இப்படித்தான் போடவேண்டும் என கண்ணியக்  குறைவாக  விளம்பரம்  வெளியிட்டு பொய்யர்கள்  தங்களின் தராதரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே காணவில்லை என்ற விளம்பரம் கீழ்கண்ட பிரகாரமும்  போடலாம்  என்று பொய்யர் கூட்டத்திற்கு சொல்லிக்கொள்கிறோம்.


பெயர்;முஹம்மது

வயது; காதல் செய்யும் பருவம்

பதவி; அப்பாவின்  ஆலோசனையின் பேரில் அபகரிக்கப்பட்ட இதஜவின் தலைவர்.

நீண்டகால சாதனை; இஸ்லாமிய வரம்பிற்குட்பட்டு[!] காதல் செய்தது.

அடையாளம்; இதஜவுக்கு திடீர் தலைவரானது, மாநிலத் தலைமையகத்தை  தொடந்து மூடி வைத்திருப்பது, மூன்று ஆண்டுகளாக அமைப்பு நடத்தியும் ஒரு சின்னக் கூட்டம் கூட நடத்தாதது, ரத்ததானம் போன்ற சமூக  சேவைகள் செய்யாமலேயே  பல்வேறு விருதுகளை வாங்கியது, பல்வேறு போராட்டங்கள் நடத்தி முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டின் கனியை பறித்துத் தந்தது[!].

இப்படிப்பட்ட சாதனைமிக்க, பல லட்சம் வாக்குகளை பின்புலமாக கொண்ட  தலைவர், இதஜ எனும் அரசியல் அமைப்பின்  தேர்தல் நிலைப்பாடு பற்றிய இவரின் அறிவிப்புக்காக  மக்கள் காத்திருக்கும் நிலையில், இவரைக்  காணவில்லை. கண்டுபிடித்து தருபவர்களுக்கு திடீர் பொதுச்செயலாளர் பதவியோ, அல்லது திடீர் மாநிலச்செயலாளர் பதவியோ வழங்கப்படும்.

தகவல் தரவேண்டிய முகவரி;

அபகரிக்கப்பட்ட இதஜ.
அங்கப்பநாயக்கன் தெரு,
மண்ணடி-சென்னை-1

குறிப்பு; நாகரீகம் கருதி படத்தைப் போடாமல் விட்டுள்ளோம். இனிமேலாவது பொய்யர் பீஜே, தனது கள்ள பிளாக்கிற்கு கடிவாளம் போடட்டும். பாக்கர் படத்தை அகற்றட்டும். இல்லையேல் பீஜேயின் படத்தோடு இவ்வாறு எழுதுவதற்கு எங்களுக்கும் ரெம்பநேரம் ஆகாது  என்று சொல்லி வைக்கிறோம்.
-அப்துல்முஹைமீன்.

0 comments:

Post a Comment