Tuesday, April 12, 2011

உண்மையான மாமா கட்சி நாங்களே! உறுதிப் படுத்திய பி.ஜே.பார்ட்டி யினர்.



உண்மையான மாமா கட்சி நாங்களே!
உறுதிப் படுத்திய பி.ஜே.பார்ட்டி யினர்.

கடைசி வரை மமகவை அதிமுக கூட்டணியை விட்டு வெளியேற்ற முயற்சி எடுத்து அது முடியாமல் இவர்கள் வெளியேறி வேறு வழியன்றி திமுக கூட்டணிக்கு சென்று அங்கேயும் வேறு எங்கும் பிரச்சாரத்திற்கு செல்லாமல் மமக வின் மேல் உள்ள காழ்ப்புணர்வில் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தெருத் தெருவாக பிரசாரம் செய்து வந்தனர்.

ராமநாத புரத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரசாரம் செய்ததால் தேர்தல் கமிசனால் ஆம்புலன்ஸ் பறிக்கப் பட்டு [ ஆம்புலன்ஸ் வாங்க பணம் தந்தவர்கள் இதற்காகவா தந்தனர்] ஐவர் கைதாகி அங்கு அதோடு பிரச்சாரத்தை நிறுத்தி விட்டு சென்னையில் வீடாக மாமா கட்சி மாமா கட்சி என பெண் குரலில் பிரசாரம் செய்தனர்.

இவர்களின் வெறி எல்லை கடந்து இவர்களே கடைசியில் மாமா வேலைக்கு நிகரான் வேலையே செய்துள்ளனர். தக்ளித் ஜமாத்தின் சேப்பாக்கம் கிளை நிர்வாகி ஒருவர் தன்னுடைய உறவினர் ஒருவரிடம் பூத் ஸ்லிப் கொடுங்கள் ஓட்டுக்கு பணம் வங்கித் தருகிறேன் என சொல்ல அவரும் தர அருகில் இருந்த இயக்கம் சாரா கொள்கை கொண்ட அவரின் சகோதரர் இது கேடுகெட்ட விபசாரத்திற்கு துணை போகும் செயல் போல உள்ளது' என இதைக் கண்டிக்க , இருவருக்கும் வாக்கு வாதம் முற்றி விடுகிறது. இதை பின்னர் அந்த சகோதரர் இஸ்லாத்திற்கு வந்த முஸ்தபா எனும் சகோதரரின் நல்லடக்க நிகழ்ச்சியில் இதை நம்மிடம் சொல்லி வருந்தினார். தவ்ஹீத் பேசும் இவர்களே இப்படி இருந்தால் மற்ற மக்களின் நிலையென்ன ? என கூறிய போது உண்மையிலேயே இவர்கள் எங்கு போய்க் கொண்டு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. நம்மிடம் சொன்ன செய்தி தெரிந்த உடன் அதே கிளையை சேர்ந்த சகோதரர் ஒருவர் போனில் தொடர்பு கொண்டு 'உங்கள் அண்ணன் திமுகவினரிடம் பணம் வாங்கி தருருகிறேன்' என பூத் ஸ்லிப் வாங்கியதற்கு நீங்கள் சாட்சி அப்படிதானே ? என கேட்டு ரெகார்டிங்கும் செய்துள்ளார் அந்த கிளை நிர்வாகி. இதையும் அந்த சகோதரர் நம்மிடம் சொன்னார்.

விபசாரத்திற்கு பெண்ணை விலை பேசி பணம் பெற்றுத் தரும் மாமாவிற்கும் ஓட்டிற்கு விலை பேசி பணம் வாங்கித் தரும் இந்த செயலுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? காழ்ப்புணர்வும், இயக்க வெறியும் இவர்களை எங்கே கொண்டு பொய் விட்டுள்ளது ?

இவை அனைத்தும் நேரில் கண்டு கண்டித்த அந்த சகோதரர் நம்மிடம் சொன்ன விஷயங்கள் என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறுகிறேன்.

இவண்: செங்கிஸ் கான்.

0 comments:

Post a Comment