Friday, April 1, 2011

மாறியது முடிவு! மாற்றியது எதுவோ?


                                மாறியது முடிவு! மாற்றியது எதுவோ?
கடந்த 30.1.11 சேலத்தில் நடைபெற்ற த.த.ஜ. பொதுக் குழுவின் தேர்தல் நிலைப்பாடாக tntj.net இல் இன்னும் இருக்கும் தீர்மானங்களை பாருங்கள்!  போன பொதுக் குழுவிற்கும் தற்போது நடந்த பொதுக் குழுவிற்கும் நடந்தது என்ன? இடையில் சென்னையில் நடந்த செயற் குழு முடிவு இவர்களின் இணையத்தில் காணோமே ஏன்?   இடையிலே நடந்தது என்ன? வடிவேலு பாணியில் 'அது போன மாசம் இது இந்த மாசம்' என அண்ணன் சொல்வாரோ? 

TNTJ ன் தேர்தல் நிலைபாடு:
அதைத் தொடர்ந்து தவ்ஹீத் ஜமத்தின் தேர்தல் நிலைப்பாடு குறித்து, மேலாண்மைக்குழு உறுப்பினர் பீ.ஜைனுல் ஆபிதீன் பொதுக்குழு உறுப்பினர்களிடத்தில் விளக்கினார்.
ஆரம்பம் முதலே அதிமுக தரப்பு நமது ஜமாஅத்தை அணுகி ஆதரவு கேட்டதையும், கடந்த 22-01-11 சனிக்கிழமையன்று மீண்டும் நம்மை நமது அலுவலகத்தில் வந்து சந்தித்ததையும் விளக்கினார். அப்போது அதிமுக தலைவரிடம் கொடுப்பதற்காக ஜமாஅத் சார்பில் அதிமுக பிரதிநிதிகள் மூலம் கடிதம் கொடுத்து அனுப்பியதையும் விளக்கி விட்டு அந்தக் கடிதத்தை முழுமையாக வாசித்துக் காட்டினார்.
அதைத் தொடர்ந்து, திமுக தரப்பு நம்மை அணுக, ஒரு இயக்கமாக உங்களை ஆதரிப்பது பற்றி முடிவெடுப்பதாக இருந்தால் உங்களை எதிர்த்து வேலை செய்வதாகத் தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால், நீங்கள் எங்களுக்கு செய்யக் கூடிய அநியாயங்களை நாங்கள் போராட்டங்களின் வாயிலாக எதிர் கொள்கின்றோம். இனிவரும் காலங்களிலும் போராடியே பெற்றுக் கொள்வோம். ஆனால் சமுதாய மக்களுக்கு நீங்கள் நல்லது செய்ய வேண்டும். எங்கெளுக்கென்ற தனிப்பட்ட முறையில் எங்கள் நலனுக்காக நாங்கள் எதையும் ஒரு போதும் கேட்பதில்லை என்று விளக்கி கீழ்க்கண்ட இரண்டு கோரிக்கைகள் மட்டும் வைக்கப்பட்டன.
1.முஸ்லிம்களின் இடஒதுக்கீடு தமிழகத்தில் போதிய அளவாக இல்லை. அதனை 3.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
2.முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 சதவீத இடஒதுக்கீட்டில் ஏற்பட்ட துரோகத்தைச் சரி செய்யவும், எங்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு சரியாக சென்றடைகின்றதா என்பதைக் கண்காணிக்கவும் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை.
கையில் காசு – வாயில் தோசை:
தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வராத நிலையில் அதற்கு இன்னும் நாட்கள் இருக்கின்ற நிலையில் 5% இடஒதுக்கீட்டை நீங்கள் உடனே அறிவித்து விட வேண்டும். நாங்கள் அடுத்து ஆட்சிக்கு வந்தால் தருவோம் என்று சொல்லக் கூடாது.
கடந்த தேர்தலின் போதே இடஒதுக்கீட்டில் ஏற்பட்ட துரோகங்களைச் சரி செய்வோம் என்று நீங்கள் எழுதித் தந்தும் அதைச் சரி செய்யவில்லை. எனவே, அப்படி சொன்னால் முஸ்லிம்கள் அதை ஏற்க மாட்டார்கள். மேலும், ரங்கநாத் மிஸ்ரா தனது அறிக்கையில் முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார். அதனால் நீங்கள் வழங்கும் 5% என்பது அவரது பரிந்துரையின் அடிப்படையில் பார்த்தால் மிகக் குறைவு தான். எனவே உடனடியாக நாங்கள் அதை சட்டமாக்க முடியாது என்றும் நீங்கள் சொல்ல முடியாது என்று சுட்டிக் காட்டப்பட்டதையும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு விளக்கினார். 
நிலைமை சீராகாவிட்டால் செயற்குழுவில் முடிவு:
எனவே வரக்கூடிய தேர்தலில், முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கினால் திமுகவிற்கு ஆதரவு அளிப்பது, திமுக முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீட்டைச் சாட்டமாக்காமல், அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதியளித்தால் அவர்களை ஆதரிப்பது என்றும், தற்போது நிலைமை இன்னும் தெளிவாகாத காரணத்தால் தேர்தல் நெருக்கத்தில் மாநில செயற்குழுவைக் கூட்டி அதில் யாருக்கு ஆதரவு என்ற முடிவை எடுப்பதற்கு மாநில செய்ற்குழுவிற்கு இந்த பொதுக்குழு அங்கீகாரம் வழங்குகின்றதா? என ஒப்புதல் கேட்க அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் தக்பீர் முழங்கி அதை ஆமோதித்தனர்.


மஞ்சள்   நிறத்தில் அடிக்கோடிட்ட  விசயங்களை  சொன்ன  அதே  அண்ணன்  தான்  இன்று  திமுக  ஆதரவு  நிலை  எடுத்து  களமிறங்கி  பிரசாரம்  செய்யப்  போகிறார் . எலும்பில்லா  நாக்கும்  மக்களின்  மறதியும்  தான் அண்ணன் போன்ற  அரசியல்வாதிகளின்  மூலதனம் . வாயில்லா  விட்டால் ....  

0 comments:

Post a Comment