











இளையான்குடியில் இ.த.ஜ. நடத்திய முகாமில்
40 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை!
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி செம்பிறை மருத்துவ மனையில் கடந்த ஞாயிறு அன்று காலை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி நகர கிளையும் மற்றும் அர்விந்த் கண் மருத்துவ மனையும் இணைந்து இலவச கண் மருத்துவ முகாமும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாமும் நடை பற்றது!
இதில் இளையான்குடி ,புதூர் , சோதுகுடி, சாத்தானி, சாலையூர் மல்லிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த சுமார் 400 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் சுமார் 40 பேர் இலவச கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப் பட்டு மதுரை அழைத்து செல்லப் பட்டனர்.இவர்கள் அனைவருக்கும் போக்குவரத்து உணவு உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு கண் புரை அறுவை சிகிச்சையும் இலவசமாக வழங்கப்பட்டது!







0 comments:
Post a Comment