Friday, April 22, 2011

பஞ்ச் பட்டிக்காட்டான்[27] just4jokes! Inbox X


புதிய தமிழகம் கிருஷ்ணசாமி பேட்டி: தமிழகத்தில், தேர்தல் கூட்டணிகள் கொள்கை அடிப்படையில் உருவாகவில்லை. திரை மறைவு பேரங்களின் அடிப்படையில் தான் காட்சிகள் அரங்கேறியுள்ளன. தமிழகத்தில் ஓர் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்ற வெளிப்படையான கொள்கையை நிறைவேற்றும் பலம், அ.தி.மு.க., விற்கு மட்டுமே உண்டு.

பஞ்ச் பட்டிக்காட்டான்; தேர்தல் முடிஞ்ச கையோட கூட்டணி சேரும் ரகசியங்கள இப்பிடியா போட்டு உடைக்கிறது..?

ம.தி.மு.க., கொள்கை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் பேட்டி: தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் கொள்கைகளைச் சொல்லி ஓட்டுக் கேட்கவில்லை. இலவசங்களைச் சொல்லி ஓட்டு கேட்கின்றனர். ஜாதிகளை ஒழிப்போம் எனக் கூறி விட்டு, ஜாதி கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளனர்.

பஞ்ச் பட்டிக்காட்டான்; வாஸ்தவம் தான். என்னமோ இந்த தேர்தல்ல தான் முதன் முதலா ரெண்டு கட்சியும் இலவசத்தை அள்ளி வீசுனமாதிரி சொல்றீங்க; போன தேர்தல்ல நீங்க அம்மாவோட ஒட்டிக்கிட்டு இருக்கும்போது, அவங்க இலவசத்த அள்ளி வீசுனதும், ஜாதிக் கட்சிகளோட கூட்டணி வச்சதும் தெரியலயாக்கும்?

பேச்சாளர் தமிழருவி மணியன் பேட்டி : சிறப்பாக பேசத் தெரியாதவர்களும், ஒழுங்காக எழுத முடியாதவர்களும் தான் காங்கிரஸ் கட்சியில் தலைவர்களாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி.
பஞ்ச் பட்டிக்காட்டான்; ரெம்ப காலம் காங்கிரசுல குப்பை கொட்டுன நீங்க, காங்கிரசோட தத்துவத்த புரிஞ்சுக்கலையே! பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் யாருக்கு வேணும்? கோஷ்டி சேர்க்கும் ஆற்றல் இருந்தா போதாதா?


0 comments:

Post a Comment