Friday, April 8, 2011

மாநிலப் பொதுக்குழுவில் கிளை உறுப்பினர்களா? அண்ணன் ஜமாஅத்தின் அலங்கோலம்!

மாநிலப் பொதுக்குழுவில் கிளை உறுப்பினர்களா?

அண்ணன் ஜமாஅத்தின் அலங்கோலம்!


தமிழகத்தில் தேர்தல் ஆதரவு முடிவை எட்ட இரு பொதுக்குழு, ஒரு செயற்ழுவைக் கூட்டி சாதனை படைத்த அண்ணன்
ஜமாஅத், அண்டை மாநிலமான சுண்டக்காய் சைசில் உள்ள
பாண்டிச்சேரியில் தேர்தல் ஆதரவு நிலைப்பாடு எடுக்க மற்றொரு பொதுக்குழுவைக் கூட்டியது.[அவருக்கென்ன! பாழாய் போவது ஏமாளிகளின் பணம் தானே!] கடந்த 30 -3 -11 அன்று காரைக்காலில் கூடிய புதுவை மாநிலப் பொதுக்குழுவில், புதுவை மாநிலத்திலுள்ள அனைத்துக் கிளைகளின் உறுப்பினர்களும் ஆர்வமாக கலந்து கொண்டார்கள்[உணர்வு 15 ;32 ] என்று அதிர்ச்சித் தகவலை கூறுகிறது அண்ணன் ஜமாஅத்.


மாநிலப் பொதுக்குழுவில் அனைத்துக் கிளைகளின் உறுப்பினர்கள் எவ்வாறு கலந்து கொள்ளமுடியும்? ஒருவேளை கூட்டம் காட்ட உறுப்பினர்களையும் குவித்தார்களா? இருந்தாலும் பைலாவை படிக்காமல் அண்ணனுக்கு
தலையாட்டுவதே
அரும்பணியாக கொண்டிருக்கும் தம்பிகளுக்காக மாநிலப் பொதுக்குழுவில் யார் யார் கலந்து கொள்ள முடியும் என்று பைலா கூறுகிறது என்பதை பதிவு செய்கிறோம்;
  1. மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர்கள்.
  2. மாநில தணிக்கைக் குழு உறுப்பினர்கள்.
  3. மாநில நிர்வாகிகள்.
  4. மாநில அணிச் செயலாளர்கள்.
  5. முன்னாள் மாநில நிர்வாகிகள்.
  6. மாவட்ட நிர்வாகிகள்.
  7. மண்டலத் தலைவர்கள்.
  8. மாநிலப் பேச்சாளர்கள்.
  9. கிளை நிர்வாகிகள்.
  10. முன்னாள் மாவட்ட நிர்வாகிகள்.
  11. மாவட்டப் பேச்சாளர்கள்.
  12. மாவட்ட அணிச்செயலாளர்கள்.
  13. கிளை அணிச்செயலாளர்கள்.
  14. மாநில நிர்வாகத்தால் தகுதியின் அடிப்பையில் பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப் பட்டவர்கள்.
இவர்கள் தான் மாநிலப் பொதுக்குழுவில் கலந்து கொள்ள முடியும். இந்த பட்டியலில் அனைத்துக் கிளை உறுப்பினர்கள் உள்ளார்களா? பிறகு எப்படி மாநிலப் பொதுக்குழுவில் அனுமதிக்கப்பட்டார்கள்? கூட்டம் சேர்க்கத்தானே!

இந்த வார்த்தைஜால வித்தகர்கள் இன்னொன்றும் சொல்வார்கள். அதாவது புதுவை மாநிலம் என்றாலும் அது அண்ணன் ஜமாஅத்தில் ஒரு மாவட்ட அந்தஸ்த்தில் உள்ளதுதான் என்று. ஒரு வாதத்திற்கு அப்படியே வைத்துப் பார்த்தாலும், மாவட்ட பொதுக்குழுவில் கிளை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள பைலாவில் வழியுண்டா? இதோ மாவட்ட பொதுக்குழுவில் கலந்து கொள்ள தகுதியுடையோர் பட்டியல்;
  1. மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள்.
  2. மாவட்ட அணிச்செயலாளர்கள்.
  3. கிளை நிர்வாகிகள்.
  4. மாவட்டப் பேச்சாளர்கள்.
  5. முன்னாள் மாவட்ட நிர்வாகிகள்.
  6. கிளை அணி பொறுப்பாளர்கள்.
  7. கிளைகளால் பொதுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். [ஒரு கிளையில் எல்லாரையும் பொதுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்க முடியாது. 10 பேர் இருந்தால் ஒருவரைத தான் தேர்ந்தெடுக்க முடியும்]
  8. தேவைக்கேற்ப மாநிலத் தலைமையால் அழைக்கப்படும் சிறப்பு அழைப்பாளர்கள்.
ஆக புதுவையை மாவட்டம் என்று அண்ணன் ஜமாஅத் கூறினாலும், மாவட்ட பொதுக்குழுவில் அனைத்து கிளை உறுப்பினர்களும் கலந்து கொள்ளலாம் என்று பைலாவில் இடமில்லை. எனவே உறுப்பினர்களை கூட்டி செயற்குழு நடத்தி விட்டது என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தை சாடிய பொய்யர் பீஜே கூட்டம், இன்றைக்கு கிளையில் உள்ள அனைவரையும்
கூட்டி பொதுக்குழு நடத்தி பைலாவுக்கு முரணாக கேவலப்பட்டு நிற்கிறது.
ஆமாம் பைலாவை பார்த்தா அண்ணனை தொடர்ந்து
நான்காவது முறையாக மாநிலப் பொறுப்புல வச்சிருக்கோம் என்று யாரோ கேட்பது காதில் விழுகிறது.
-அப்துல்முஹைமீன்.

0 comments:

Post a Comment