Sunday, April 3, 2011

ஜெயலலிதாவிடம் பெட்டி வாங்கியதை ஒத்துக்கொண்ட தனிநபர் ஜமாஅத்!


ஜெயலலிதாவிடம் பெட்டி வாங்கியதை ஒத்துக்கொண்ட தனிநபர் ஜமாஅத்!



எல்லோரும் சீட்டுக்காகவும்-நோட்டுக்காவும் தான் அரசியல் கட்சிகளோடு கை கோர்க்கிறார்கள். ஆனால் நாங்கள் மட்டும் தான் சீட்டு- நோட்டு என எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் சமுதாய நலனை முன்னிறுத்தி கட்சிகளிடம் கூட்டு சேர்கிறோம் என்று தங்களை தாங்களே பரிசுத்தவான்கள் என்று கூறிக்கொள்ளும் தனிநபர் ஜமாஅத், கடந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் பன்னீர் செல்வம் மூலமாக ஜெயலலிதாவிடம் பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டுள்ளதை படியுங்கள்;

''பன்னீர் செல்வம் மூலம் தேர்தல் செலவுக்காக பணம் வாங்கியது பாக்கர் அலவுத்தீன் முனிர் ஆகியோர்,  தான். அதை நிர்வகிக்கும் பொறுப்பு அலாவுத்தீனுக்கு கொடுக்கப்பட்டது. வாகனப்பிரச்சாரம், கொடிகள், துண்டுப்பிரசுரங்கள் என்று ஒவ்வொரு செலவுக்கும் முறையாக லாவுத்தீன் கணக்கு எழுதி நிர்வாகத்தில் ஒப்படைத்தார். அப்போது சுமார் ஒரு லட்சம் ரூபாய் மிச்சமிருந்தது. அந்தத் தொகையை ஜெகவீரபாண்டியன் வழியாக அதிமுகவுடன் கொடுத்து விடுவ்து என்று முடிவ்பு செய்யப்பட்டது. ஆனால் ஜெகவீர பாண்டியன் அதை வாங்க மறுத்து விட்டார், உங்கள் பணிகலூக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டார். எனவே அது ஜ்மாஅத் கணக்கில் சேர்க்கப்பட்டது. அதாவ்து தொண்டியப்பாவிடம் கொடுக்கப்பட்டது.  (பொய்யன் டிஜே)

தேர்தலில் போட்டியிடாத தனிநபர் ஜமாஅத்,ஜெயலலிதாவிடம் பெட்டி வாங்கியதை பற்றி விமர்சனம் கிளம்பும் வரை மக்களுக்கு சொன்னதுண்டா? இது அந்த தனிநபரை நம்பிய மக்களை ஏமாற்றும் செயலல்லவா?
அடுத்து ஜெயலலிதாவிடம் வாங்கிய பணத்திலிருந்து கொடிகள் தயாரித்தார்களாம். எந்தக்கொடி? அண்ணா திமுக கொடியா? இல்லையே! ததஜ கொடி தயாரிக்க ஜெயலலிதாவிடம் பணம் வாங்கியது எந்த வகை நியாயம்?
வாகனப் பிரச்சாரத்திற்கு செலவு செய்தார்களாம்! தன்னை ஆதரித்து பிரச்சாரம் செய்பவர்களுக்கு பிரச்சார வாகனத்தை சம்மந்தப்பட்ட வேட்பாளரே செய்து தருவார் என்பது அரசியலில் பச்சிளம் குழந்தையும் அறியுமே! துண்டு பிரசுரங்கள் அடித்தார்களாம்.
துண்டு பிரசுர மாதிரியை அண்ணா திமுகவிடம் கொடுத்தால் எத்தனை லட்சம் நோட்டீஸ் வேண்டுமானாலும் அடித்து தந்திருப்பார்களே! அல்லது கொட்டேஷனை கொடுத்து, இந்த தொகையை இந்த பிரஸ்ஸில் கட்டுங்கள் என்றால் அக்கட்சி கட்டியிருக்குமே! அவ்வாறு செய்யாமல் பணம் பெற்றது எதற்காக?
தனது மைத்துனருக்கு அந்த ஆர்டரை   தந்து லாபம் பார்க்கத்தானே! அதோடு இன்னொரு செய்தி என்னவெனில், அப்போது ததஜ அடித்த அந்த மூன்று வகையான பிரசுரங்களை இப்போது வெளியிட்டால், திமுகவை ஆதரிக்கும் தனிநபர் ஜமாஅத்தின் முகமூடியை அந்த பிரசுரமே கிழிக்கும் என்பது தனி விஷயம்.

இதோடு ஜெயாவிடம் வாங்கிய பணத்தை வைத்து இன்னொன்றும் செய்தார்கள். தேர்தல் நேரத்தில் பணம் வாங்கிக்கொண்டு கட்சிகளை ஆதரித்து பிரச்சாரம் செய்ய சில  நடிகர் கூட்டம் கிளம்பும்.
அதுபோல, கடந்த தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்த ததஜவின் முக்கிய  தனிநபர் பிரச்சாரகர் இருவருக்கு ஜெயலலிதாவிடம் வாங்கிய பணத்திலிருந்து ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதா இல்லையா? கூலி வாங்கிக்கொண்டு கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்யும் நடிகர்கள் சிலருக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? தனிநபருக்கு துணிவிருந்தால் ஜெயலலிதாவிடம் வாங்கிய தொகை எவ்வளவு? அது எந்தெந்த வகைகளுக்கு பயன்படுத்தப்பட்டது என்ற விபரத்தை மக்கள் மன்றத்தில் வைக்கத் தயாரா?

ஆக, சகோதரர்களே! இவற்றை எல்லாம் எழுதும் எண்ணம் எமக்கு இவ்வளவு காலமாக இல்லை. ஆனால் தொடர்ந்து தாங்கள் மட்டுமே யோக்கியர்கள் என வேஷம் போடும் இவர்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறோம். அரசியல் கட்சிகளிடம் சீட்டும்- நோட்டும் வாங்கமாட்டோம் என்று சொல்லிக்கொண்டு ஜெகவீர பாண்டியனுக்கு ஜெயலலிதாவிடம் சீட்டுக் கேட்டார்கள். அதே ஜெயலலிதாவிடம் பணமும் பெற்றார்கள் என்பதை நாம் நிரூபித்துள்ளோம். நடுநிலையோடு சிந்தியுங்கள். இன்னும் இவர்களின் வேஷங்களை நம்பாதீர்கள்.

குறிப்பு; கடந்த தேர்தலின் போது பாக்கரும் தானே அங்கு இருந்தார் என்று திசை திருப்பக் கூடாது. அந்த காலகட்டத்தில் அந்த ஜமாஅத்தில் இருந்த மாநில நிர்வாகிகள் அனைவருமே இந்த விஷயத்தில் பங்காளிகளே!
-முகவை அப்பாஸ்.

0 comments:

Post a Comment