Friday, April 22, 2011

ஒரு பீ.ஜே வின் பக்தருக்கு....

கீழ் உள்ளவை ஒரு பீ.ஜே வின் பக்தருக்கு நான் எழுதியது :


பீ.ஜே , தான் "வாழ்க" என்றுதான் சொன்னார்."வணக்கம்" சொல்ல வில்லை என்று அவர் வெப் தலத்தில் சொல்லியுள்ளார். அவர் பொய் சொல்லி இருந்தால், அவரை தண்டிக்க அல்லாஹ் போதுமானவன்.

ஆனால், இப்படிபட்ட சமாலிப்புகளை நீங்கள் எல்லாம் எப்படி கண்மூடிக்கொண்டு ஒத்துக்கொல்கிறீர்கள் ? ஒருவர் வணங்க, இரு கைகள் செய்கை செய்தாலே, அது வணக்கம் ஆகி விடும்.அவர் வாய் மூலமாக ,"வணக்கம்" என்று சொன்னாலும், சொல்லா விட்டாலும், இது வணக்கம் தான்.உதாரணமாக ,பீ.ஜே இந்த மனிதருக்கு சுஜூது செய்தால், அதை நாம் சுட்டி காட்டினால், "இல்லை .. பீ.ஜே சுஜூது செய்ய்யும்போது,' சுப்ஹான ரப்பியில் ஆலா' என்று சொல்ல வில்லை.'வாழ்க' என்று தான் சொன்னார்", என்று நீங்கள் சொன்னால், அது எப்படி முலூ பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போல் ஆகுமோ, அது போல தான் உங்கள் சமாலிப்பு இருக்கிறது.

அது மட்டும் இல்லாமல், "வாழ்க" என்று வாழ்த்துவதர்க்கு என்ன ஆதாரம் இருக்கிரது?இது இந்து கலாச்சார நம்பிக்கை.ஒரு பெரியவர் "வாழ்க" என்று வாழ்த்தியால், நல்லது நடந்து விடும் என்ற நம்பிக்கையினால் வந்த வார்த்தைகள் தான் இவை.

ஒரு முஸ்லிமின் வார்த்தை, "அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்" என்று தான் இருக்க வேண்டுமே தவிர, ஏதோ சாமியார் போல், "வாழ்க" என்று வரம் கொடுக்க இஸ்லாத்தில் எந்த அனுமதியும் இல்லை.இது தன்னை கடவுள் இடத்தில் நினைக்கும் மமதையாகும். அதனால், கண் விழித்து பாரீர். உங்கள் தலைவர் தப்பு செய்தததை உனர்வீர்.அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டட்டும்.
by massod ali

0 comments:

Post a Comment