Friday, April 15, 2011

பஞ்ச் பட்டிக்காட்டான்[26] just4jokes!





















முதல்வர் கருணாநிதி;மத்திய மந்திரி மு.க.அழகிரி டெல்லியை விட்டு விட்டு, தமிழ்நாட்டில் பணியாற்றுவதில் தான் அதிக விருப்பம் என்று சொல்லியிருப்பது அழகிரியின் தாய்நாட்டுப் பற்றைக் காட்டுகிறது.
பஞ்ச் பட்டிக்காட்டான்; அப்ப இந்தியா தாய்நாடு இல்லையா?
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா; எனக்கும் என்னுடைய கட்சிக்கும் ஊழலில் எவ்வித தொடர்பும் இல்லை; ஊழலுக்கு எதிரான ஹசாரேயின் போராட்டத்‌தை ஆதரிக்கிறேன்.
பஞ்ச் பட்டிக்காட்டான்; எல்லா ஊழல் வழக்குல இருந்ததும் நீங்க விடுவிக்கப்படும் போது இத சொன்னா அர்த்தமிருக்கும். இப்ப சொல்றது தண்ணிக்கும்- மீணுக்கும் சம்மந்தமில்லன்னு சொல்றமாதிரி தெரியுதே.
ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி; ஜனதா கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. எங்கள் கட்சியினர் 10 பேரை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெறச் செய்தால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் யாரையும் ஊழல் செய்ய விட மாட்டோம்.

பஞ்ச் பட்டிக்காட்டான்; பெரிய வித்தியாசமில்லன்னு நீங்களே சொல்லீட்டீங்க. பொறகு எதுக்கு தனிக்கடை; போயி பாஜகவுல ஐக்கியமாயிட வேண்டியதுதானே.

பாஜக மூத்த தலைவர் இல. கணேசன்; எங்கள் வேட்பாளரை ராத்திரி 12 மணிக்கு தட்டி எழுப்பினாலும்கூட நிதானத்தோடு எழுந்து பதில் சொல்வார். பாஜகவின் சின்னமான தாமரை தண்ணீரில்தான் இருக்கும். ஆனால் எங்கள் தொண்டரோ, வேட்பாளரோ எப்போதும் "தண்ணி'யில் இருக்கமாட்டார்.

பஞ்ச் பட்டிக்காட்டான்; 'எப்போதும்' இருக்கமாட்டாங்கன்னா 'எப்பவாச்சும்' ஒன்னு ரெண்டு முறை இருப்பாங்களோ. அதெல்லாம் சரி! நீங்க யாரை மனசுல வச்சுக்கிட்டு சொல்றீகளோ அவரு கூடவும் கூட்டாஞ்சோறு ஆக்க முயற்சித்ததை நீங்க மறந்தாலும் மக்கள் மறக்கலைங்கோ!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்;திமுக கூட்டணிக்குள் ஒரு கூட்டணி பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும். இந்த 2 சமுதாயக் கட்சிகளும் இணைந்து செயல்பட்டால் பி.சி.ஆரும் (வன்கொடுமை தடுப்புச் சட்டம்) இல்லை, பி.சி.க்கும் (போலீஸ் கான்ஸ்டபிள்) வேலையில்லை.

பஞ்ச் பட்டிக்காட்டான்; இப்பதான் ரெண்டு கட்சிகளும் தான் ஒரு கூட்டுக்குள்ள இணைஞ்சுட்டீங்களே! அப்ப நீங்க சொன்னதுமாதிரி, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து பண்ணீட்டு, போலீஸ் கான்ஸ்டபிள்கள் எல்லாத்தையும் வேலையே விட்டு நீக்கீடலமா?


0 comments:

Post a Comment