Monday, April 4, 2011

குனிந்து கொடுத்த கொள்கை குன்றுகள்!



குனிந்து கொடுத்த கொள்கை குன்றுகள்!   


சரியாசனம் பெற்று சமுதாய மானம் காத்த இ.த.ஜ    




கடந்த  30.1.11 அன்று  சேலத்தில்  நடந்த  தக்லித்  ஜமாத்தின்  பொதுக்   குழு

  கூட்டத்தில் கீழ்க்கண்ட  முடிவுகளை  எடுத்த  அதே  தினத்தில்  நடை  

பெற்ற அலாவுதீன்   IAS இல்லத்  திருமணத்தில்  முதல்வர்  

முஸ்லிம்களின்  இட  ஒதுக்கேடு  பற்றி  என்ன  பேசினாரோ !   அதே 

'பரிசிலிக்கப்  படும் ' என்ற  வார்த்தையைத்தான்  தற்போது  தேர்தல்  

அறிக்கையில்  சொல்லியுள்ளாரே    தவிர , உயர்த்தி  தரப்படும்  என்று  

உறுதி    கூறவில்லை ! சேலம்  பொதுக்குழுவிற்கு  பின்  இவர்களின்  

இணைத்தளத்தில்  வெளியிட்ட செய்தியை கீழே படியுங்கள்!   

 திமுக தரப்பு நம்மை அணுக, ஒரு இயக்கமாக உங்களை ஆதரிப்பது பற்றி முடிவெடுப்பதாக இருந்தால் உங்களை எதிர்த்து வேலை செய்வதாகத் தான் முடிவெடுக்க வேண்டும்.


கையில் காசு – வாயில் தோசை:  [அண்ணன் கையிலே காசு ஜனங்கள் வாயிலே தோசை 
தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வராத நிலையில் அதற்கு இன்னும் நாட்கள் இருக்கின்ற நிலையில் 5% இடஒதுக்கீட்டை நீங்கள் உடனே அறிவித்து விட வேண்டும். நாங்கள் அடுத்து ஆட்சிக்கு வந்தால் தருவோம் என்று சொல்லக் கூடாது.
கடந்த தேர்தலின் போதே இடஒதுக்கீட்டில் ஏற்பட்ட துரோகங்களைச் சரி செய்வோம் என்று நீங்கள் எழுதித் தந்தும் அதைச் சரி செய்யவில்லை. எனவே, அப்படி சொன்னால் முஸ்லிம்கள் அதை ஏற்க மாட்டார்கள்.

இந்த நிலைப்பாட்டிற்கு பின் எதுவும் மாறி விடவில்லை! பின் எப்படி கீழே   உள்ள உங்கள் இணையத்தளத்தில்  உயர்த்தி வழங்க உறுதி அளிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டு மக்களை ஏமாற்றுகிறீர்கள் ?
  முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக உறுதியளித்துள்ளதால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.

இதில் எங்களைப் பார்த்து எங்களை பார்த்து ஜெயலலிதா எங்கே  உறுதியளித்தார்       கூறமுடியமா ? என கேள்வி வேறு?
2006 இல் எப்படி தேர்தல் பிரசாரத்தில் இட ஒதுக்கீடு பற்றி அறிவித்தாரோ அது போன்று இன்று அறிவிப்பார் என உறுதியளித்தனர் . அறிவிப்பு வரவில்லை என்றல்  ஆதரவு மறு பரிசீலனை என பாக்கர் ஜும்மாவில் அறிவித்தார் !        
வெள்ளிக் கிழமை 4  மணிக்கு அறிவிப்பதற்கு முன் இப்போது உங்கள் கோரிக்கையை அறிவிக்கப் போகிறோம் ! என கூறிவிட்டு செய்தார்கள். 
திருச்சி பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா இட ஒதுக்கீடு பற்றி கூறிய செய்தி மறுநாள் அனைத்து ஊடகங்களிலும் வந்தது! 

அது மட்டுமின்றி நேரடி சந்திப்பின் போது பாக்கர் கட்டாய பதிவு சட்ட குளறு படிகள் , மற்றும் வக்பு  சொத்து    பற்றிய   விசயங்கள i சுட்டிக் காட்ட நாளை நெல்லையில் இதற்கான அறிவிப்பு வரும் எனக் கூறப் பட்டு , சொன்னது போல் மறுநாள் நெல்லை  பிரச்ரக் கூட்டத்தில்  இரு அறிவிப்புகளையும்  ஜெயலலிதா வெளியிட்டார்.
ஜெயலலிதாவைப் பொறுத்த மட்டில் அவர் வாக்களிக்க மாட்டார். ஆனால் வாக்களித்தால் அதை நிறைவேற்றுவர் என்பது அவரை நன்கு அறிந்தவர்களுக்கு  தெரியும். 
ஆனால் கலைஞர் நம்ப வைத்து கழுத்தருப்பவர் என்பது நமக்கு மட்டுமல்ல நாட்டுக்கே தெர்யும்! 
சேலம் பொதுக் குழுவிற்கு பின் சென்னை தி,நகரில் நடந்த செயற்குழுவிலும் dஹிமுக  ஆதரவு  நிலை  எடுக்கப்  படவில்லை!    எல்லாம் தெரிந்தும் எதனால் தங்கள் முடிவை மாற்றினர் என்பது இன்னும் விளங்கத மர்மமே?  

ஒரு காலத்தில் ஏன் இவர்களுக்கு இருக்கை தரவில்லை? என தமுமுக தலைவர்களை  கேட்ட அண்ணனுக்கும் அவரது அடிப் பொடிகளுக்கும் ஏன் கலைஞர் சீட் தரவில்லை? மற்ற கட்சி நிர்வாகிகளை அமர வைத்து பேசும் கலைஞர் ஏன் இஸ்லாமிய சமுதாய தலைவர்களுக்கு அந்த மரியாதை தருவதில்லை? சில நேரங்களில் அமர வைத்தாலும் அந்தப்  படத்தை பத்திரிக்கைகளுக்கு தருவதில்லை!  நம்முடைய ஆதரவை வழங்க சென்றால் கூட மானத்தை இழந்து நின்று கொண்டே தர வேண்டுமா? அண்ணனுக்கே வெளிச்சம்!

ஆதரவு தர செல்லும் தலைவர்களுக்கே அமர இடம் தராதவர் சமுதாயதிற்கு எப்படி இடம் தருவார்.   இதில் முஸ்லிம்களின் ஒட்டு மொத்த பிரதி நிதி நாங்கள் தான் என்று செல்லும் உங்களை மரியதையை மட்டும் அடகு வைக்க வில்லை சமுதாய மர்யதையை அடகு வைக்கிறீர்கள். இந்த அளவுக்கு கீழிறங்கி  ஏன்   செல்ல வேண்டும்?  ஒரு வேளை மரியாதைக்கு பதிலாக வேறெதுவும் பெற்று விட்டதலா? 

0 comments:

Post a Comment