Friday, April 1, 2011

ததஜவின் தரங்கெட்ட அரசியல் நிலைப்பாடு!!

ததஜவின் தரங்கெட்ட அரசியல் நிலைப்பாடு!!
தேர்தல் நேரம் நெருங்கும் பொழுதெல்லாம் உங்கள் ஒட்டு யாருக்கு? அல்லது சமுதாய ஒட்டு யாருக்கு? என்ற தலைப்பில் ஒரு கூட்டத்தை கூட்டி, சத்தியத்திற்க்காகவும் தங்களின் ஜீவாதார உரிமைக்காகவும் எந்த சுயநலமும் இல்லாமல் அநியாயக்கார அரசனை எதிர்க்கும் முகமாகவும் பெரும் திரளாக திரளும் மக்கள் சக்தியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அரசியல் அரக்கர்களிடம் அடகு வைப்பதும் அதற்க்கு ஈடாக பெறவேண்டியதை பெற்று 'பெட்டிப் பாம்பாக' அவர்களின் காலை சுற்றுவதும் தனி நபர் ஜமாத்தின் தரங்கெட்ட நிலை என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இதை மெய்பிக்கும் முகமாக சமீபத்திய அவர்களின் அரசியல் நிலைபாடும் அமைந்துள்ளது.

எதிர்வரும் வரும் சட்ட சபை தேர்தலில் தங்களின் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் ஆளும் திமுகவுக்கு தான் என்ற ஒரு அவல நிலைப்பாட்டை எடுத்து இருக்கின்றனர்.

இவர்கள் இந்த நிலைப்பாட்டிற்கு ஆளாக என்ன காரணம்?காரணம் வேறாக இருந்தாலும் அடிப்படை காரணமாக இவர்கள் கூறுவது "ஆளும் திமுக அரசு இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக உறுதியளித்துள்ளது. அதுவும் தனது தேர்தல் அறிக்கையில்.எனவே தான் நாங்கள் திமுக ஆதரவு நிலைபாட்டை எடுத்திருக்கின்றோம்" என்பதுதான்.

இதோ! ததஜ வின் கொள்ளைபுரத் தலைவருமான, அதிகாரபூர்வத்தலைவருமான அதேநேரத்தில் ஆயுட்கால தலைவருமான பொய்யர் பீஜே கூறுவதை பாருங்கள்..
.
"தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இந்த இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக அறிவித்திருக்கிறார்கள். அ.தி.மு.க. கூறாமல் சென்றுவிட்டது. தேர்தல் அறிக்கையில் கூறாமல் பிரசாரங்களில் கூறுவதை நாங்கள் உறுதியாக எடுத்துக்கொள்ள முடியாது.
அதன் அடிப்படையில், ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கோரிக்கை அடிப்படையில் தி.மு.க.வை ஆதரிப்பது என்று எங்கள் மாநில பொதுக்குழுவில் முடிவெடுத்திருந்தோம். அந்த முடிவினை முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து தெரிவித்தோம். பொதுக் குழுவில் எடுத்த முடிவுப்படி முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்றும் நாங்கள் அவரிடம் கூறியிருக்கிறோம்"

ஆளும் திமுக அரசு இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக தனது தேர்தல் அறிக்கையில் எந்த இடத்தில் கூறியுள்ளது என்பதை இந்த பொய்யர் பீஜே விளக்குவாரா? மாறாக ஆளும் திமுக அரசு இஸ்லாமியர்களின் இடவொதுக்கீட்டை கூடுதலாக அதிகரிப்பதற்கு "பரிசீலிக்கப்படும்" என்றுதான் கூறி இருக்கிறது.இப்படி இருக்க அதை திருத்தி கூறும் மர்மம் என்ன? சமுதாயத்தை அடகு வைத்து பெறவேண்டியதை பெற்றுவிட்டதற்க்கு தான் இந்த திரிபு நாடகமோ?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவோ இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை கூடுதலாக அதிகரிப்பதற்கு வாக்குறுதி அளித்திருப்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.

சிறுபான்மையினருக்குத் தனி இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில், தமிழ்நாடு பிறபடுத்தப்பட்டோர் ஆணையம் மூலம் எனது ஆட்சிக் காலத்தில்தான் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டது. ஆனால், 2006-ம் ஆண்டில் கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, இஸ்லாமியர்கள் இடம் பெறாத வகையில் இந்தச் சட்டம் திருத்தப்பட்டது. மேலும் ,  கருணாநிதி தன்னிச்சையாக இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை அறிவித்தார். என்றாலும், இதுவும் முறையாக அமல்படுத்தப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு விகிதம் உயர்த்தி அறிவிக்கப்படும். மேலும், அது முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதும் கண்காணிக்கப்படும். இஸ்லாமியர்களின் இதரக் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும்

  • முதலாவதாக முஸ்லிம்களின் இடஒதுக்கீடு உயர்த்தப்படும் என்று உறுதிபடக் கூறுகிறார்.

  • இரண்டாவதாக இடஒதுக்கீடு  கொடுத்த மாதிரி கொடுத்து அதன் பயன்களை இஸ்லாமியர்கள் பெற்றுவிடக்கூடாது என்பதற்கு திமுக அரசு பார்த்த உள் வேலையை தனது கண்காணிப்பின் மூலம் உடைத்து எறிவதாகவும் உறுதிபடக் கூறுகிறார்.
  • மூன்றாவதாக இஸ்லாமியர்களின் இதர கோரிக்கைகளை "பரிசீலிக்கப்படும்" என்று கூறுகிறார் .


அதாவது முஸ்லிகளின் மற்ற தேவைகள் , கோரிக்கைகள் கலந்தாலோசித்து ஏற்றுக் கொள்ளும் விதமாக இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படும் இல்லையெனில் நிராகரிக்கப்படும்.என்ற அர்த்தத்தில் "பரிசீலிக்கப்படும்" என்று கூறுகிறார். சுருக்கமாக கூறுவதாக இருந்தால் பரிசீலிக்கப்படும் என்ற இந்த வார்த்தையானது வலுவற்ற ஒரு வார்த்தையாகும்.

இஸ்லாமியர்களின் இதர தேவைக்காக "பரிசீலிக்கப்படும்" என்று ஜெயலலிதா சொன்ன இந்த வலுவற்ற வார்த்தையை தான் இஸ்லாமியர்களின் அத்தியாவசிய அடிப்படை
கோரிக்கையான இடஒதுக்கீட்டுக்கு திமுக அரசு பயன்படுத்துவதை கவனியுங்கள்.
''இஸ்லாமிய மக்களுக்கு வழங்கப்படும் மூன்றரை சதவிகித இட ஒதுக்கீட்டினை மேலும் உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.
இடஒதுக்கீடு உயர்த்தப்படும் என்பதற்கும் பரிசீலிக்கப்படும் என்பதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தையும் வலிமையையும் அது எவ்விடத்தில் திமுக அரசால் பயன் படுத்தப் பட்டுள்ளது என்பதையும் சாதாரண சாமானியனும்  புரிந்து கொள்ளும் பொழுது இந்த சந்தர்ப்பவாதிகளுக்கு புரியாமல் போனது தான் ஆச்சரியம்.

உண்மையிலையே புரியவில்லை என்றால் புரியவைக்கலாம். புரிந்தும் புரியாதது போல் வேடமிடும் வேடதாரிகளை  என்னவென்று சொல்வது.

தரம் தாழ்ந்து சமுதாயத்தை அடகு வைத்து இவர்கள் எடுத்த தரங்கெட்ட தற்பொழுதைய அரசியல் நிலைபாட்டை தனது இணையதளம் மூலம் தண்டோரா வேறு அடிக்கின்றனர்.

நடுநிலை சமுதாயமே! குள்ளநரிகளின் கூக்குரலில் மயங்கி மாய்ந்து விடாதீர்கள்! வரும் தேர்தலில் யாருடைய வாக்குறுதிகளில் முஸ்லீம்களுக்கு முழு நன்மைகள் இருக்கிறது என்பதை ஆராய்ந்து, அறிந்து சிந்திதுனர்ந்து, வாக்களித்து வெற்றிபெற வேண்டுகிறோம்.

குறிப்பு :பச்சைப் பொய்யர் பீஜேயின் முக கவசத்தை கிழிக்கும் அடுத்த பதிவுகள் விரைவில் இன்ஷா அல்லாஹ்.....

இவன் : முபாரக்

  • குவைத் மண்டலம்

0 comments:

Post a Comment