Sunday, September 4, 2011

இளையான்குடியில் இறைதூதரை மறுக்கும் கூட்டம் ! இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நோட்டிசால் பரபரப்பு!

இளையான்குடியில்  இறைதூதரை  மறுக்கும்  கூட்டம் !
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நோட்டிசால் பரபரப்பு! 

நபி ஸல் அவர்களை மறுத்து 'லாயிலாஹா இல்லல்லாஹ் ' மட்டுமே முஹம்மதுர் ரசூல்லுல்லாஹ் எனக் கூறுவது ஷிர்க் என மக்களை வழி கெடுத்து கொண்டிருக்கும் பொய்யன் ரஷாத்  கலிபாவை தூதர் பிதற்றி அவனை பின் பற்றும் ஒரு கூட்டம் தற்போது இளையான்குடியில் முகாமிட்டு பொருளாதாரத்தில் பின் தங்கிய முஸ்லிம்களை குறிவைத்து தங்களுக்கு ஆள் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

மக்களின் வறுமையை பயன் படுத்தி மாதம் மாற்றும் கிறிஸ்தவ கொள்கையைக் கொண்ட இவர்கள் ஒரு சிலராக உள்ளே வந்து தற்போது இளையங்குடியில் தன்கள் வழி பாட்டுக்கென ஒரு வீட்டை எடுத்து தற்போது அதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சேர்த்து வழிபாட்டுக் கூட்டங்களை ரமளானில் நடத்தியுள்ளார்கள். அறியாமையிலும் வறுமையிலும் உள்ள முஸ்லிம்கள் பலர் இவர்களின் சூழ்ச்சியை அறியாமல் வீழ்ந்து தங்கள் ஈமானை இழந்து கொண்டுள்ளனர்.


இது பற்றி இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் இளையான்குடி நகர நிர்வாகிகள்  இவர்களைப் பற்றிய எச்சரிக்கை நோட்டிஸ் ஒன்றை வெளியிட்டது. 
இந்த நோட்டிஸ் இளையான்குடியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது நோட்டிஸ் கிடைக்காதவர்கள் செராக்ஸ் எடுத்து பரபரப்பாக படிப்பதை பார்க்க முடிந்தது! மேலும் இந்தக் 19 கூட்டத்தின் முக்கிய நபர்கள் சமுதாய ஆர்வலர் கேப்டன்.அமீர் அலியின் மகன்கள் என்பது குறிப்பிடத்  தக்கது . தற்போது இந்த நோட்டிஸ் ஏற்படுத்திய விளைவால் கேப்டன் அமீர் அலி அவர்கள் இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. எனது முதுமையினால் எனது மகன்கள் என்னை மீறி எனது வீட்டை தவறாக் பயன் படுத்துகிறனர். எனவே இந்த தவறான வழி கேடர்களிடம் இருந்து   எனது வீட்டை மீட்டு தரவேண்டும் என காவல் துறையை அணுகி உள்ளதாக அறிகிறோம்.  அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.    
                                               
                                          இந்திய  தவ்ஹீத்  ஜமாஅத் நோட்டிஸ்   

 
இன்ஷா அல்லாஹ் வரும் 10.9.11 சனியன்று இதற்கென ஒரு விளக்க கூட்டத்தையும் நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் இவர்கள் பற்றி உலக அளவில் மற்றும் இந்திய அளவில் ஆலிம்களும்  மதரசாக்களும்  வெளியிட்டுள்ள    பத்வாக்கள்   குறித்தும்  மகால்லஹ்வின்   ஜமாஅத்துகள் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்தும் கலந்தாவ்சித்து முடிவெடுக்க ஆலோசனைக் கூட்டம் ஒன்றும் நடக்க உள்ளது!   

   -இளையான்குடி பாவா.


0 comments:

Post a Comment