Monday, September 5, 2011

தமுமுக ஆம்புலன்ஸ் நாடகத்தில் நடித்ததை கண்டு கொள்ளவில்லையே?


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்....
 
கேள்வி; டி.என்.டி.ஜே செய்யும் எல்லா செயல்களையும் விமர்சிக்கும் நீங்கள், தமுமுக ஆம்புலன்ஸ் நாடகத்தில் நடித்ததை பல மாதங்கள் கடந்தும் கண்டு கொள்ளவில்லையே? இது பாரபட்சமில்லையா?
-மு. முஹம்மது. நெல்லை ஏர்வாடி.  

பதில்; அண்ணன் ஜமாஅத் செய்தால் தவறு; மற்றவர்கள் செய்தால் சரி என்பது எமது நிலைப்பாடல்ல. இதே தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் சாய்பாபா சாமியாருக்கு இரங்கல் கடிதம் எழுதிய போதும் கண்டித்துள்ளோம். அதே போன்று யார் தவறு செய்தாலும் நாம் விமர்சித்துள்ளோம். அந்த வகையில் நீங்கள் குறிப்பிடும் ஆம்புலன்ஸ் விஷயம் கண்டிக்கத்தக்கதே! அதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த சம்பவம் வெளியான பின்பு தமுமுக மாநிலத் தலைமை சம்மந்தப்பட்ட கிளையை கண்டித்துள்ளார்கள். அதே நேரத்தில் ஒரு உயிரற்ற ஆம்புலன்ஸ் நாடகத்தில் நடித்ததை பூதாகரமாக காட்டி குய்யோ-முறையோ என கூவிய அண்ணன் ஜமாத்தினர், ஒரு நாடகத்தை தயாரித்துள்ளார்கள். நாடகம் தயாரிப்பது கூடுமா என்பது ஒருபுறமிருந்தாலும், அந்த நாடகத்தில் ஒரு மனிதனின்  காலில் இருவர் விழுகின்ற காட்சியும், ஒரு அந்நியப் பெண்ணை ஒரு அந்நிய ஆண் தடவுவது போன்றும் காட்சியை அமைத்துள்ளார்கள். அந்த வீடியோவை நீங்கள் பார்ப்பதற்கு முன்னால், ஒரு மனிதனின் காலில் விழுவது  சரியா என்று அண்ணன் ஜமாத்தின் ஆதரவு வலைத்தளமான இஸ்லாமிக் டிவிடி மாய்ந்து மாய்ந்து எழுதியுள்ளவைகளை ஒரு முறை படித்து விடுங்களேன்.

ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிடுவது, அவர்களின்கால்களைக் கழுவி,கழுவப்பட்ட தண்ணீரை பக்தியுடன் அருந்துவதுஎன்றெல்லாம் ஆன்மீகத் தலைவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
காலில் விழலாமா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ் நாளில் ஒருக்காலும் தமதுகால்களில் விழுந்து மக்கள் கும்பிடுவதை விரும்பவில்லை. அறியாத சிலர்அவ்வாறு செய்ய முயன்ற போது கடுமையாக அதைத் தடுக்காமலும்இருந்ததில்லை.நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியைப்பாருங்கள்!
 
நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமதுதலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். 'இவ்வாறு சிரம்பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்' என்று (எனக்குள்)கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'நான் ஹியராஎன்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக்கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்' என்றுகூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் '(எனது மரணத்திற்குப் பின்)எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம்
பணிவீரோ?' எனக் கேட்டார்கள். 'மாட்டேன்'என்று நான் கூறினேன். அதற்கு நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் 'ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால்கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்யிருப்பேன்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி)
நூல்: அபூதாவூத் 1828
 
தமது காலில் விழுவதற்கு அனுமதி கேட்கப்பட்ட போது 'எந்த மனிதரும் எந்த மனிதரின் காலும் விழக் கூடாது' என்று பொதுவான விதியைநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரணம் காட்டுகிறார்கள்.
காலில் விழுபவரும், விழப்படுபவரும் இருவருமே மனிதர்கள் தான் என்று கூறி சிரம் பணிதல் கடவுளுக்கு மட்டுமே உரியது எனக்கூறுகிறார்கள்.
உலகம் முழுவதும் கணவர் காலில் மனைவியர் விழுவது அன்றைக்கு வழக்கமாக இருந்தது. அதையே நான் அனுமதிக்காத போது என்காலில் எப்படி விழலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
'உங்கள் கால்களில் நாங்கள் விழுகிறோமே' என்று மக்கள் கேட்கும் போது தமது மரணத்திற்குப் பிறகு தனது அடக்கத்தலத்தில் விழுந்துபணிவார்களோ என்று அஞ்சி அதையும் தடுக்கிறார்கள்.'எனது மரணத்திற்குப் பின் எனது அடக்கத்தலத்தில் கும்பிடாதீர்கள்' என்று வாழும்போதே எச்சரித்துச் சென்றனர். எனவே தமது கால் விழுமாறு மக்களுக்கு வழி காட்டுவோர் கயவர்களாவர்.
 
எழுந்து நின்று மரியாதை செய்தல்
வயதில்பெரியவர், ஆசிரியர், தலைவர்கள், முதலாளிகள், நிர்வாகிகள், மேலதிகாரிகள் போன்றோருக்காக மற்றவர்கள் எழுந்து நின்றுமரியாதை செய்வதை உலகமெங்கும் காண்கிறோம்.
மேல் நிலையில் உள்ளவர்கள் இந்த மரியாதையை உளமாற விரும்புவதையும் நாம் காண்கிறோம். ஆனால் இஸ்லாத்தில் இதற்கு அனுமதிஇல்லை.
எந்த மனிதரும் எந்த மனிதருக்காகவும் மரியாதை செய்யும் விதமாக எழுந்து நிற்கக் கூடாது என்று நபிகள் நாயகம் கட்டளைபிறப்பித்தார்கள்.
 
நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போதுஅவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களும், இப்னு சஃப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி)அவர்கள்'அமருங்கள்' என்றனர். 'தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில்ஏற்படுத்திக் கொள்கிறார்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றும் முஆவியா (ரலி) கூறினார்கள்.
நூல்கள்: திர்மிதீ 2769 அபூதாவூத் 4552
 
மன்னருக்காகக் கூட மக்கள் எழக் கூடாது. அவ்வாறு எழ வேண்டும் என்று எந்த முஸ்லிமும் எதிர்பார்க்கக் கூடாது என்பதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்துச் சென்றதை இந்த வரலாற்றிருந்து நாம் அறிகிறோம்.
உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போதுநாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: அஹ்மத் 12068, 11895 திர்மிதீ 2678
 
தமக்காக மக்கள் எழக் கூடாது என்பதை எந்த அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) வெறுத்தார்கள் என்பதற்கு பின்வரும் நிகழ்ச்சிசான்றாகவுள்ளது.
ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள்அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகைமூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். தொழுகையைமுடித்தவுடன் 'பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே! அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே! இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள்! அவர்கள் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்றுதொழுங்கள்! அவர்கள் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்' என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 701
 
மேற்கண்டவாறு காலில் விழுவதை கூடாது என்று கூறியவர்கள் எடுத்த விழ்ப்புணர்வு[!] நாடக வீடியோவை இப்போது பாருங்கள்;
 
இப்படி சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக திகழும் அண்ணன் ஜமாஅத், அடுத்தவர்களை பற்றி  குறை கூறுவது சாத்தான் வேதம் ஓதுகின்ற செயலல்லவா? ஒருவேளை உயிரற்ற ஆம்புலன்ஸ் நடித்தால் தவறு; உயிருள்ள மனிதன் நாடகத்தில் நடித்தால் தவறில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார்களோ? விழிப்புணர்வுக்காகத் தான் நாடகம் எடுத்தோம் என்று அண்ணன் ஜமாஅத் சொல்லுமானால், விழிப்புணர்வுக்காக நாடகம்-சினிமா எடுக்கலாம் என்பதற்கும்  அதில் இஸ்லாம் தடுத்துள்ள காட்சிகளிளெல்லாம் நடிக்கலாம் என்பதற்கும் அண்ணன் ஜமாஅத் ஆதாரம் தருமா? உதாரணத்திற்கு எயிட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, எயிட்ஸ் எதனால் உருவாகிறது என்பதை 'ப்ராக்டிகல்'லாக நடித்துக் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தலாமா? என்றும் அண்ணன் ஜமாஅத் விளக்கினால் நல்லது.

-முகவை அப்பாஸ்.


0 comments:

Post a Comment