Friday, September 23, 2011

திருச்சி இடைத்தேர்தல்; திருந்தாத ஜெயலலிதா!



டந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதி அ.தி. மு.க. வேட்பாளராக மரியம் பிச்சை போட்டியிட்டு வெற்றி பெற்று சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஆனார். அமைச்சராக பதவியேற்ற  அவர், எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பதற்கு முன்பே கார் விபத்தில் மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 13-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.   இந்த தொகுதியில் முஸ்லிம் ஒருவருக்கே வாய்ப்பளிக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. மு.பரஞ்ஜோதி அறிவிக்கப்பட்டு உள்ளார். அதுமட்டுமன்றி பத்து மாநகராட்சி மேயர் வேட்பாளர்களில் முஸ்லிம்களில் ஒருவருக்கு கூட ஜெயலலிதா வாய்ப்பளிக்கவில்லை. இதன் மூலம்  ஜெயலலிதா, முஸ்லிம்கள் விசயத்தில் நான் என்றைக்குமே மாறமாட்டேன் என்பதில் தெளிவாக உள்ளார் என்பது தெரிகிறது.
 
அதோடு, தேர்தல் வாக்குறுதிகளை பரவலாக நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தும் ஜெயலலிதா, அதற்காக பல்லாயிரம் கோடிகளை ஒதுக்கி நிறைவேற்றி வருகிறார். ஆனால் எந்த நிதி ஒதுக்கீட்டிற்கும் அவசியமில்லாத ஒரே ஒரு அறிவிப்பு மட்டுமே செய்யவேண்டிய முஸ்லிம்களின் இடஒதுக்கீடு அதிகரிப்பு பற்றி மட்டும் கண் திறக்க மறுக்கிறார்.
 
நாடெங்கிலும் நிலமோசடி குறித்து நடவடிக்கை எடுக்க தனி பிரிவை உண்டாக்கி, பல்லாயிரம் கோடி நிலங்களை மீட்டு, கோலோச்சிய பல முன்னாள்'களை சிறையில் தள்ளிய ஜெயலலிதா, முஸ்லிம்களுக்கு சொந்தமான பல்லாயிரம் கோடிவக்பு சொத்துக்கள்  ஆக்கிரமிக்கப்பட்டதை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. வக்பு வாரியத் தலைவர் பதவி நாமறிந்தவரை கவிக்கோவின் ராஜினாமாவுக்குப் பின் காலியாக உள்ளது. இவ்வாறான ஜெயலலிதாவின் முஸ்லிம் விரோத நடவடிக்கைகளை அவர் மாற்றிக் கொள்ளாவிட்டால், முஸ்லிம்களின் வாக்கு ஆயுதம் அவரை மாற்றும் வல்லமை கொண்டது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.  

0 comments:

Post a Comment