Sunday, September 25, 2011

அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் INTJ தலைவர்கள் !

                          அணு உலை எதிர்ப்பு  போராட்டத்தில் INTJ  தலைவர்கள் !
 





 கடந்த சில தினங்களாக தமிழகத்தை பரபரப்புக்குள்ளாகிய கூடங்குளம் அணு மின் நிலைய போராட்டம் அந்த பகுதி மக்களின் வாழ்வுரிமை போராட்டமாகும். அங்கே அணு உலை அமைந்தால் பல்லாயிரக்கணக்கான  மக்களின் பாதுகாப்பு  கேள்விக்  குறியாகி  விடும்  எனும்  நிலையில்  இடிந்த  கரை  கிராமத்தில்  நடந்த  உண்ணா  விரத  போராட்டம் என்பது  மத்திய  மாநில  அரசுகளை  இறுதியில்   பணிய  வைத்த  மக்கள்  சக்திப்  போராட்டமாக  அமைந்தது .

பல  மொழி  இன  மக்களைக்  கொண்ட  நமது  நாட்டில்  ஒரு  கூட்டத்தாரின்  உரிமைகளுக்காக  இன்னொரு  சாரார்  குரல்  கொடுப்பது  என்பது  ' நன்மையிலும்  இறை  அச்சத்திலும்  ஒருவருக்கொருவர்  உதவிக்  கொள்ளுங்கள்  ' எனும்  இறை  வசனத்தின்  படியும், 'தங்களோடு  வாழ்ந்த  யூதக்  குழுக்களோடு  பரஸ்பரம்  உதவிக்  கொள்ள  வேண்டும் ' எனும்   நபி  ஸல்  அவர்களின் ஒப்பந்த நடை  முறை  நமக்கு  தெரிந்தும்  பெரும்பாலான  இஸ்லாமிய  அமைப்புகள்  வெகுஜன  பிரச்சனைகளுக்காகவோ , அல்லது  முஸ்லிம்களோடு  இணக்கத்தை   விரும்பும்  தாழ்த்தப்பட்ட  பிற்படுத்தப்  பட்ட  மக்களின் பிரச்சனைகளிலோ பெரும்பாலும்  தலையிட்டு   குரல்  கொடுப்பதில்லை! ஏற்கனவே    முஸ்லிம்கள்  இந்த  நாட்டின்  பிரச்சனைகளில்  அக்கறையில்லை ! அவர்கள்  பிரச்னை  மட்டுமே  முக்கியம்  ! என்ற  கருத்தாக்கம்  உள்ளது . இந்த  கருத்தாக்கத்தை   மாற்றும்  வனம்  இந்திய  தவ்ஹீத்  ஜமாஅத்  
பல்வேறு  மக்கள்  போராட்டங்களில்  கலந்து  கொள்வதோடு      அந்த போராட்டக்    களங்களை  தஃவா  விற்கான  களங்கள் ஆக்கி அந்த இடங்களில்  மார்க்கத்தை  சொல்லும் வாய்ப்பை பயன்படுத்தி      வருகிறது . 

அந்த வகையில்  இடிந்த  கரை  போராட்டத்திற்கு  சென்ற  எஸ் .எம் .பாக்கர்,   'உண்ணாவிரதம்  என்பது  இறைவனுக்கு  செய்யும்  வழிபாடு  என்பதையும்  அதை  இது  போன்ற  போராட்டங்களுக்கு  பயன்  படுத்துவது  கூடாது  எனும்  கொள்கை  உடையவர்கள்  நாங்கள் , நாம்  ஏன்   ஆட்சியாளர்கள்  செய்யும்  தவறுக்காக  நம்மை   வருத்திக்  கொள்ளவேண்டும்  ஆட்சியாளர்களை  வருந்தச்  செய்யம்  போராட்டங்களை  முன்னெடுப்போம்  வாருங்கள்   என   அழைப்பு  விடுத்தார் . அது  மட்டுமல்லாமல்  மக்களுக்கு  தீங்கு  தரும்  அணு உலை போன்ற  விசயங்களில்   இஸ்லாத்தின்  நிலைப்பாட்டையும்  எடுத்துரைத்தார் . மதுரை மாவட்ட நிர்வாகிகள் , நெல்லை மாவட்ட நிர்வாகிகள் இ.த.ஜ  துணைத்தலைவர் முனீர் உள்ளிட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்,

0 comments:

Post a Comment