Tuesday, September 20, 2011

மஸ்ஜிதுல் முபாரக் ததஜவிற்கு சொந்தமானதல்ல; பீஜே திட்டவட்டம்!


 மஸ்ஜிதுல் முபாரக் ததஜவிற்கு சொந்தமானதல்ல; பீஜே திட்டவட்டம்!

கடையநல்லூரில் அமைந்துள்ள ஜாக்கிற்கு சொந்தமான மஸ்ஜிதுல் முபாரக் பள்ளியை, மறைந்த சகோதரர் அப்துல்ஜலீல் மதனி அவர்கள் நோய்வாய்ப் பட்டதை பயன்படுத்தி, சைபுல்லாஹ் ஹாஜா  மூலமாக காய் நகர்த்தி, அப்பள்ளியை அண்ணன் ஜமாத்திற்கு ஆக்கிரமிக்க செய்த  முயற்ச்சியின் விளைவாக பள்ளி சில மாதம் பூட்டப்பட்டது. வழக்குக்காக முஸ்லிம்களின் பணம் விரையமாக்கப் பட்டது. அன்றைக்கு அதிமுக கூட்டணியில் இருந்ததால் அமைச்சர் வரை சென்று ஜாக்கிடமிருந்து கைப்பற்றும் காரியத்தை அண்ணன் ஜமாஅத் செய்தது. இதெற்கெல்லாம் காரணமான அண்ணன் ஜமாஅத், 'மஸ்ஜிதுல் முபாரக் தவ்ஹீத் சகோதரர்களின் பணத்தில் ஜாக் பெயரால் வாங்கப்பட்டது. எனினும் அது ஜாக்கிற்கு சொந்தமானதல்ல என்று காரணம் கூறியது.

மேலும், ''தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களின் உதவிகள் அனைத்தையும் பெற்றுத் தான் பல்லாண்டுகளாக முபாரக் பள்ளிவாசல் இயங்கி வருகிறது. மேலும் மாநிலத் தலைமையின் மூலம் அளிக்கப்படும் ஃபித்ரா போன்றவைகளையும் இந்தக் கமிட்டி மூலம் விநியோகித்தனர். ஜாக்கினர் பள்ளியினை ஆக்கிரமிக்க வந்தபோது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் தான் அதனை எதிர்த்து நின்றனர். வசைமொழிகளைத் தாங்கிக் கொண்டனர். இஸ்லாமியக் கல்லூரி பணத்தைத் தான் (கடனாக) முபாரக் பள்ளிவாசல் வழக்கு வகைக்காக ஸைஃபுல்லாஹ் பயன்படுத்தினார். மேலும் முபாரக் வழக்கு வகைக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரில் பல்வேறு செலவினங்களைச் செய்துள்ளனர். அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத் இல்லையென்றால் முபாரக் பள்ளிவாசலை ஜாக்கினர் ஆக்கிரமித்திருப்பர். இது உலகிற்கே தெரிந்த உண்மை. அனைத்திற்கும் தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு முபாரக் கமிட்டி என்பது தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உட்பட்டதல்ல. என்று ஸைஃபுல்லாஹ் கூறுவது மாபெரும் மோசடியாகும்...'' என்று சைபுல்லாஹ்வை நீக்கும் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் சொன்னது.

இப்படி மஸ்ஜிதுல் முபாரக்கோடு தங்களுக்கு சொந்தம் உள்ளதுபோல் உலகுக்கு கட்டிக்கொண்ட அண்ணன், ''மஸ்ஜிதுல் முபாரக் ததஜவில் உள்ளது கிடையாது' என்று சொல்லியுள்ளார். சைபுல்லாஹ் நீக்கப்படுவதற்கு முன்பாக மஸ்ஜித் விரிவாக்கத்திர்க்காக சைபுல்லாஹ் வாங்கிய இடம் குறித்து விசாரணை நடத்திய பீஜே, சைபுல்லாஹ்விடம் தனது முடிவை சொல்லும்போது,

''முபாரக் பள்ளியைப் பொருத்த வரைக்கும் அது வந்து ஏற்கனவே தவ்ஹீத் ஜமாத்தில் உள்ளது கிடையாது.

''நீங்கள் வாங்கிய இடத்தை  பொருத்தவரைக்கும் அந்த இடம் வாங்க பணம் கொடுத்தவர்களுக்கும்- உங்களுக்கும் உள்ள விவகாரம். அந்த இடம் ஜமாஅத்துக்கு இல்லன்றதால நாங்க ஒதுங்கிக் கொள்வோம்...' என்கிறார்.

பார்க்க வீடியோ; http://vimeo.com/29150432

அதாவது அண்ணனின் வாக்குமூலப்படி, மஸ்ஜிதுல் முபாரக் எந்த காலத்திலும் ததஜவுக்கு உரிமையுடையதல்ல என்பதுதான். அப்படி ததஜவுக்கு உரிமையில்லாத இந்த பள்ளியை கைப்பற்ற, ஜாக்கோடு மல்லுக்கு நின்று அடிதடி- கோர்ட்டு- கேசு- பள்ளி மூடல்-மந்திரியை கைக்குள் போட்டு காரியம் சாதிக்க முயற்ச்சித்தல் ஆகியவற்றை அண்ணன் ஜமாஅத் செய்தது ஏன்? ததஜவுக்கு சம்மந்தமில்லாத  பள்ளிக்கு ததஜவின் பணம் கொட்டப்பட்டது ஏன்? அபகரிக்கும் நோக்கமன்றி வேறென்ன?

மேலும் கடையநல்லூரில் பெருநாள் உரையாற்றிய அண்ணன் ஜமாஅத்தின் மேலாண்மையான  அல்தாபி, ''தனிநபர் ஆதிக்கத்தில் உள்ள மஸ்ஜிதுல் முபாரக், தக்வா பள்ளிவாசல் ஆகியன விரைவில் மீட்கப்படும் என்றாரே! அண்ணனோ மஸ்ஜிதுல் முபாரக் ததஜவுக்கு சம்மந்தமில்லாதது என்கிறார். ஆனால் அல்தாபியோ, அபகரிப்போம் என்கிறார்.

மேலும் தனிநபர் ஆதிக்கம் என்கிறாரே அல்தாபி. மஸ்ஜிதுல் முபாரக், சைபுல்லாஹ் ததஜவில் இருக்கும்போதும் சரி- இப்பவும் சரி மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டியின் நிர்வாகத்தில் தானே இயங்கி வருகிறது? சைபுல்லாஹ் ததஜவில் இல்லை என்றவுடன் அது தனிநபர் ஆதிக்கமாகி  விட்டதா? என்னே அளவுகோல்? சரி! இவ்வளவு பேசும் அல்தாபி, ததஜவுக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டு இன்று பூட்டப்பட்டு பாழடைந்து வரும் எஸ்.பி. பட்டினம் பள்ளிவாசலை மீட்டிவிட்டு, பிறகு முபாரக் பள்ளிக்கு வரட்டும்.

ஆக, இவர்களது வேலையே தங்களுக்கு சொந்தமில்லாத பள்ளியை ஆக்கிரமிப்பதும்- பூட்டுவதும் தான் போல தெரிகிறது. என்றைக்குத் தான் திருந்துவார்களோ?
--அப்துல்முஹைமீன்

0 comments:

Post a Comment