Saturday, September 24, 2011

தஞ்சை புதுப் பட்டினத்தில் பள்ளிவாசல் சூறை! சம்பவ இடத்தில INTJ நிர்வாகிகள்.

தஞ்சை  புதுப் பட்டினத்தில் பள்ளிவாசல் சூறை!
சம்பவ இடத்தில INTJ நிர்வாகிகள்.










அதிராம் பட்டினதிர்க்கும் மல்லி பட்டினத்திற்கும் இடையில் உள்ள முஸ்லிம்கள் வசிக்கும் கிராமமான புது பட்டினத்தில் ஏற்கனவே பலமுறை  இந்துத்வாவினர் வம்பு சண்டையில் ஈடு பட்டு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ள நிலையில் அதன் தொடச்சியாக கிரிகெட் விளையாட்டின் போது ஏற்பட்ட பிரச்னை ஒன்றில் அங்கே  உள்ள பள்ளிவாசலை நேற்று முன் தினம் இந்துத்வா கூட்டத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் பள்ளிவாசலில்  உள்ளே நுழைந்து அங்கிருந்த பொருள்களை உடைத்து நொறுக்கியுள்ளனர். மேலும் இமாம் மற்றும் மோதினாரையும் தாக்கி உள்ளனர்.

விஷயம் அறிந்த எஸ். எம் பாக்கர் மற்றும் இந்திய தவ்ஹீத் ஜாமத்தின் தஞ்சை 
மாவட்ட நிர்வாகிகள் அதிரை நகர நிர்வாகிகள் அனைவரும சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றனர் .ஆனால் காவல் துறையினர் புதுப் பட்டினம் உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.

எங்களது சமுதாயம் பாதிக்கப் பட்டுள்ளது நாங்கள் ஆறுதல் சொல்லவும் என்ன நடந்தது என விசரிக்கவுமே செல்கிறோம் .எங்களை தடுக்க என்ன 144 தடை உத்தரவு அவர்களோடு இ.த.ஜ.நிர்வாகிகள் விவாதம் செய்தனர். எங்களுக்கு மேலிடத்து  உத்தரவு நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது.என கூறியதும் உங்கள் உயர் அதிகாரிகள் வரும் வரை நாங்கள் போக முடியாது என உறுதியாக நின்றதும் உயர் அதிகாரிகள் வந்து எஸ்.எம்.பாக்கரோடு பேச்சு நடத்தினர்.





 பேச்சு வார்த்தையின் போது உயர் அதிகாரிகள் ' உங்களை உள்ளே அனுமதித்தல் எதிர் தரப்பை சேர்ந்த இந்துத்வா தலைவர்களும் அனுமதி கேட்பார்கள் அது நிலைமையை மேலும் மோசமாக்கும் ! எங்கள் நிலையை புரிந்து எங்களோடு ஒத்துழையுங்கள் ! நாங்கள் அவர்களில் பத்து பேரை கைது செய்துள்ளோம்! உங்களில் எவரையும் கைது கைது செய்யவில்லை. என கூறினார்.

 இறுதியில் ஜமாஅத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் ஊருக்கு வெளியே வந்து பாக்கரிடம்  நடந்த சம்பவங்களை நேரில் விவரித்தனர். மேலும் பள்ளிவாசலை படம் பிடிக்க நமது மீடியா வேல்ட் குழுவினரை அனுமதித்ததோடு அவர்களது வாகனத்திலேயே ஏற்றி சென்று பேட்டி வாங்க அனுமதித்தனர். இந்த பேட்டி மற்றும் விபரங்கள் இன்ஷா அல்லா வின் டிவி யில் ஒளிபரப்பாக உள்ளது.    





0 comments:

Post a Comment