Saturday, September 4, 2010

பஞ்ச் பட்டிகாட்டான் -3


  • தி.க. தலைவர் வீரமணி; சென்னை பொது மருத்துவமனையை அதிகம் பயன்படுத்தியவர் பெரியார். எனவே அவரது பெயரை மருத்துவமனைக்கு சூட்டவேண்டும்.
பெரியாரின் பேரனும், முன்னாள் அமைச்சருமான இளங்கோவன்; ராஜிவ்காந்தி கொல்லப்பட்டபோது, அவரது உடல் அரசு பொது மருத்துவமனையில்தான் வைக்கப்பட்டிருந்தது. எனவே மருத்துவமனைக்கு ராஜீவ் பெயர் சூட்டவேண்டும்.
பட்டிக்காட்டான்; நிறுத்துங்க! இப்பிடியே அந்த மருத்துவமனையில வைத்தியம் பாத்தவங்க; உடலை வைச்சிருந்தவங்க எல்லாரும் உங்கள மாதிரி உரிமை கொண்டாட ஆரம்பிச்சா, அந்த ஆஸ்பத்திரிக்கு தினமும் ஒரு பேருல வைக்கவேண்டியதிருக்கும்..?
  • முதல்வர் கருணாநிதி; மாநில அரசுகளின் உரிமைகளை எடுத்துக்கொள்ளும் விதத்தில் மத்திய அரசு செயல்பட்டால், அதற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
பட்டிக்காட்டான்; ஆமாமா! ரெம்ப வருத்தமா இருந்தா பிரமருக்கு ஒரு கடிதம் எழுதுறதோட நிறுத்திக்கணும்; அவங்க என்னதான் மாநில அரசின் உரிமைகளை பறிச்சாலும் நாம அவசரப்பட்டு ஆதரவு 'வாபஸ்' ன்னு சொல்லமுடியுமா..? நம்ம ஆட்சியையும் பாக்கணுமா இல்லையா..?
  • யாதவ மகாசபைத் தலைவர் தேவநாதன்; குர்ஆனில் குறிப்பிட்டுள்ளது போல், நிச்சயமாக! தீர்ப்புக்குரிய நாள் என்பது நேரம் குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது. அதை அடைவதற்கான போராட்டத்தைத்தான் நாம் இப்போது மேற்கொண்டிருக்கிறோம்.
பட்டிக்காட்டான்; குர்ஆனில் குறிப்பிட்டுள்ள 'தீர்ப்புக்குரிய நாள்' என்பது யுகமுடிவு நாளைக் குறிப்பதாகும். அதை அடையுறதுக்கு எதுக்கு போராடனும்; அதுதான் தானாக நடக்குமே..?
  • பத்திரிக்கை செய்தி; கூச்சல் குழப்பத்தை முன்னிட்டு ஒத்திவைக்கப்பட்ட மக்களவையில், அரசை பரிகசிக்கும் வகையில் நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் லாலுபிரசாத் யாதவ் பிரதமராக செயல்பட்டார்.
பட்டிக்காட்டான்; நெசத்துல பிரதமாகிற பாக்கியம் கெடைக்குமோ என்னவோ தெரியல; இப்பிடியாச்சும் பிரதமர் கனவை தீர்த்துக்குவோம் அப்பிடின்னு நெனச்சிருப்பாரோ!
  • செய்தி; தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் பெண் கவுன்சிலர்கள கைகலப்பு; வெளிநடப்பு செய்தனர்.
பட்டிக்காட்டான்; சபாஷ்! ஆண்களைப்போல பதவிக்கு வருவது மட்டுமல்ல; அவர்கள் செய்யக்கூடிய 'சாகசங்களை' நாங்களும் செய்வோம்னு காட்டி, ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம்[!] அப்பிட்டீன்னு நிரூப்பிச்சுட்டீங்க!
  • விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்; அடுத்த சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நாற்பது இடங்களில் வெற்றிபெறும்.

பட்டிக்காட்டான்; நல்லவேளை! நாடாளுமன்றத் தேர்தலில் என்று சொல்லாமல் விட்டீங்களே! ஆமா பேச்சோட பேச்சா எங்களுக்கு நாப்பது தொகுதி வேணும்னு கூட்டணித் தலைவருக்கு சேதி சொல்றமாதிரி தெரியுதே.

0 comments:

Post a Comment