Thursday, September 16, 2010

இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் ஆய்வுகள்!




ஒழுங்காக பல் துலக்கவேண்டும். இல்லையேல் வாயில் துர்நாற்றம் ஏற்படுத்தி பல் வழியை உண்டாக்கும் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒழுங்காக பல் துலக்காவிட்டால், வாயில் பாக்டீரியாக்கள் ஏற்பட்டு இதயநோயை ஏற்படுத்தும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மற்றும் அயர்லாந்து ராயல் அறுவைச்சிகிச்சை கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டனர். சரிவர பல் துலக்காதவர்களின் வாயில் ஸ்டெப்ரோ காகங் என்ற பாக்டீரியா உருவாகிறது. அது ஈறுகளில் ரத்தக் கசிவை ஏற்படுத்தி அதன் வழியாக ரத்தத்தில் கலக்கிறது.
பின்னர் ரத்தத்தை உறையவைத்து மாரடைப்பு போன்ற இதய சம்மந்தப்பட்ட நோய்களை ஏற்படுத்துகிறது என கண்டறிந்துள்ளனர். ஆகவே இதய நோயிலிருந்து தப்பிக்க ஒழுங்காக பல் துலக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

இத்தகைய பல் துலக்குதலை அன்றே வலியுறுத்தியுள்ளது வல்ல நாயனின் மார்க்கமான இஸ்லாம்;
ஒவ்வொரு தொழுகைக்கும்;

  • இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"

"என் சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்று இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன்." [புஹாரி எண் 887 ]

ஜும்மா நாளன்று;
  • அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்கள்;.

"ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவருக்கும் கடமையாகும். மேலும் பல் துலக்குவதும் கிடைக்குமானால் நறுமணம் பூசுவதும் கடமையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். [புஹாரி எண் 880 ]

உறங்கி விழித்தவுடன்;
  • ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழும்போது பல் துலக்குவார்கள்.[புஹாரி எண் 1136 ]

இறக்கும் தருவாயிலும்;
  • ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் என்னுடைய (முறை வரும்) நாளில் என்னுடைய நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் என் நெஞ்சுக்குமிடையே (சாய்ந்திருந்த நிலையில்) இறந்தார்கள். (அவர்களின் துணைவியரான) எங்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்கள் நோயுற்றுவிடும்போது பிரார்த்தனையின் மூலம் (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோருவது வழக்கம். (அவ்வாறே இம்முறையும்) நான் அவர்களுக்காகப் பிரார்த்தித்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரிக்கொண்டே சென்றேன். அப்போது அவர்கள் தம் தலையை வானத்தை நோக்கி உயர்த்தி, '(இறைவா!) சொர்க்கத்தில் உயர்ந்த தோழர்களடன் (என்னைச் சேர்த்தருள்)'' என்று பிரார்த்தித்தார்கள். (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) தம் கரத்தில் பச்சைப் பேரீச்ச மட்டை ஒன்றை எடுத்துக் கொண்டு (அப்பக்கமாகச்) சென்றார். நபி(ஸல்) அவர்கள் அவரைக் கூர்ந்து பார்க்கலானார்கள். அப்போது நான், அது அவர்களுக்குத் தேவைப்படுகிறது என்று எண்ணி, அதை வாங்கி அதன் நுனியை மென்று, அதை உதறி நபி(ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். நபி(ஸல்) அவர்கள் இதுவரை பல் துலக்கியதிலேயே மிக அழகான முறையில் அதனால் பல் துலக்கினார்கள். பிறகு அதை என்னிடம் கொடுத்துவிட்டார்கள். பிறகு 'அவர்களின் கரம் விழுந்துவிட்டது' அல்லது 'அ(க்குச்சியான)து அவர்களின் கரத்திலிருந்து விழுந்துவிட்டது' இவ்விதம் நபி(ஸல்) அவர்களின் எச்சிலையும் என்னுடைய எச்சிலையும் (அவர்களின்) உலக வாழ்வின் இறுதி நாளில், மறுமை வாழ்வின் முதல் நாளில் அல்லாஹ் ஒன்று சேர்த்தான். [புஹாரி எண் 4451 ]

பல் தூக்குவதை தூய்மைக்காக சிலர் செய்யலாம்; ஆனால் அதையும் மார்க்கத்தின் அமலாக்கி ஊக்கப்படுத்தி செய்யச்சொன்ன ஒரே மார்க்கம் இஸ்லாம். எனவேதான் இஸ்லாம் முக்காலமும் அறிவியலாலும், ஆய்வாலும் மெய்ப்படுத்தப்படுகிறது.

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே!

0 comments:

Post a Comment