Monday, September 27, 2010

காஷ்மீர்: சமரசங்கள் தீர்வாகாது



காஷ்மீர் பிரச்சனைப் பற்றி பத்திரிகைகளில் ஆக்கப்பூர்வமான ஆலோசனை களை மத்திய அரசுக்குச் சொல்லி எழுத்தாளர் களும், சமூக நீதி ஆர்வலர்களும், சிந்தனையாளர் களுக்கும் எழுதி, எழுதி ஓய்ந்து விட்டார்கள். ஆனாலும் மத்திய அரசு கண்ணுக்கு முன் தெரியும் தீர்வை விட்டுவிட்டு தனது நிலையி லேயே தொடர்ந்து கொண்டிருப்பது காஷ்மீர் நிலவரத்தை மேலும் சிக்கலாகவே வைத்திருக்கிறது.
எந்த கோரிக்கைகளை முன் வைத்து காஷ்மீர் மக்கள் போராடுகிறார்களோ அந்தக் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்ப்பதாக இல்லை.
காஷ்மீரிலிருந்து ஆயுதப் படைக்கு வழங்கி யுள்ள சிறப்பு அதிகாரத்தை ரத்துச் செய்ய வேண் டும் என்பதை மையப் பிரச்சனையாக வைத்து காஷ்மீரிகள் போராட்டங்களை நடத்தும்போது அந்தப் போராட்டக்காரர்கள் அந்த ராணுவத் தினராலேயே சுட்டுக் கொல்லப்படுவது அம்மக் களை வீரியம் கொள்ளச் செய்கிறது மத்திய அரசின் மீது மேலும் சினம் கொள்ளவே வைக்கி றது.
போராட்டங்களும், வன்முறைகளும் நீடித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும், மாணவர்களின் கல்வியும் பெருமளவில் பாதிக் கப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாவதோடு, வெறுப்படையும் மாணவச் சமுதாயமும் போராட்டக் களத்தை நோக்கி விரையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
""ஆண்களுக்கு ஆதரவாக பெண்களும், குழந்தைகளும் கூட வீதியில் இறங்கி கலவரத்தில் ஈடுபடுவது கவலை கொள்ள வைக்கிறது'' என்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். ஆனால் அதற்கான தீர்வை நோக்கி அவரது அரசு நகர்ந்ததாகத் தெரியவில்லை.
காஷ்மீர் விவகாரத்தையொட்டி பல கட்ட ஆலோசனைகள், பிரதமர் தலைமையிலான பல்வேறு அமர்வுகள், எதிர்க் கட்சியினரை அழைத்து ஆலோசனைக் கூட்டம், அனைத்துக் கட்சிக் கூட்டம் என பல முயற்சிகள் செய்தும் உருப்படியான எந்த முடிவையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்பது சமூக ஆர்வலர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிஜமான கவலை.
மக்களுக்காகத்தான் சட்டங்கள் என்பதுதான் அரசியல் தத்துவம். காஷ்மீரில் மட்டும் சட்டத்திற் காக மக்கள் என்ற நிலையை அம்மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. காஷ்மீர் மக்கள் மட்டுமல்ல... இது போன்ற சட்டங்களை எந்த மாநில மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் பிரிவின் 370வது சட்டப்படியான சிறப்பு அந்தஸ்து ஏட்டளவில்தான் இருக்கிறதே தவிர, உண்மையில் அது நீர்த்துப் போயுள்ளது.
இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போல காஷ்மீர் மாநிலமும் மத்திய அரசால் நடத்தப்பட வேண்டும். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது என்று உலகை நம்பச் செய்து விட்டு அங்கே ராணுவப் படையை குவித்து, அதற்கு வரம்பற்ற அதிகாரத்தைக் கொடுத்து காஷ்மீரை ராணுவ மயமாக்க மத்திய அரசு விரும்புகிறது என்கிற எண்ணம் ஒவ்வொரு காஷ்மீரியின் உள்ளத்திலும் ஆழப் பதிந்துள்ளது.
காஷ்மீரிகள் இந்தியாவை வெறுக்கவில்லை என்பதை அவர்களின் கோரிக்கைகளே வெளிப்ப டுத்துகின்றன.
காஷ்மீர் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்து அவர்கள் அமைதியாக வாழ வழி செய்யப்பட்டால், அவர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால் அவர்கள் பிரிவினை வாதம் பேச மாட்டார்கள். மத்திய அரசின் அணுகுமுறைதான் அவர்களை வன்முறையை நோக்கித் தள்ளுகிறது. எந்த ஒரு சமுதாயமும் தம் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பில்லை என்று உள்ளபடியே உணருகிறபோது எதிர்ப்புணர்வுதான் மேலோங்கும். அதுதான் காஷ்மீரிலும் நடந்து கொண்டிருக்கிறது.
இதுதான் தீர்வு என்று தெளிவாக தெரிந்த பின்பும் ராணுவத்திற்கான சிறப்பு அதிகாரத்தை ரத்துச் செய்யாமல், பேச்சுவார்த்தை, சமரசம் என்று இன்னும் காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.
கடந்த புதன்கிழமை கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மக்கள் ஜன நாயகக் கட்சியின் தலைவி மெஹபூபா முஃப்தி, ""ஆயுதப் படை விஷயத்தில் சிறு மாறுதலை (பதட்டம் நிறைந்த காஷ்மீர் பகுதிகளில மட்டும் ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம் அளிப்பது) ஏற்படுத்த முனையும் மத்திய அரசின் செயல் தீர்வாகாது. இது போன்ற வண்ணப் பூச்சுகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இது ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நிவாரணமாக அமையாது'' எனத் தெரிவித்திருக்கிறார்.
காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் உட்பட இளைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு முதல் வேளையாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
இரண்டாவதாக அனைத்து பிரிவு மக்கள் மற்றும் ஹுரியத் மாநாட்டுக் கட்சியிலுள்ள மிதவாத, தீவிரவாத குழுக்களுடன் நிபந்தனை யற்ற பேச்சு வார்த்தைக்கு முன் வர வேண்டும்.
இவற்றை ஆரம்பகட்ட நடவடிக்கையாக மத்திய அரசு மேற்கொண்டால்தான் பேச்சு வார்த்தையில் பலன் ஏற்படும் என்றாலும் ராணுவத்திற்கான சிறப்புச் சட்டத்தை மத்திய அரசு ரத்துச் செய்தே ஆக வேண்டும்'' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
ஆனால் மத்திய அரசோ, இப்பொழுதும் காஷ் மீருக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழுவை 39 உறுப்பினர்கள் அடங்கிய அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவைச் சந்திக்க மெஹ்பூபா முஃப்தியும், ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவர் மீர்வாய்ஸ் உமரும் மறுத்துள்ளனர். இதே போன்று பிரிவினைவாதத் தலைவர் அலி ஷா ஜீலானி, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன் னணி தலைவர் யாசின் மாலிக் ஆகியோரும் இந் தக் குழுவை புறக்கணித்திருக்கின்றனர். இந்நிலை யில் காஷ்மீருக்குச் சென்றுள்ள பிரதிநிதிகள் குழு எதைச் சாதிக்கப் போகிறது என்று தெரியவில்லை.
மக்களின் பிரச்சனைகளை யாரும் எதிரொலிக் கப் போவதில்லை மீண்டும், மீண்டும் சமரசங்கள் எதற்கும் உதவாது. காஷ்மீர் மக்களின் கோரிக் கைக்கு மத்திய அரசு செவிசாய்க்காத வரை...
- ஃபைஸ்

0 comments:

Post a Comment