Wednesday, September 15, 2010

இதஜ முயற்சியால் முத்துப்பேட்டையில் கலவர முயற்சி முறியடிப்பு


!

திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை நகரத்தில் நடைபெறும் விநாயகர் ஊர்வலத்தின் போது ஆண்டு தோறும் கலவரம் ஏற்பட்டது.இது குறித்து மாற்றுபாதை கேட்டு சென்ற ஆண்டு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் முஹம்மது ஷிப்லி தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மாற்றுபாதையை தீவிரமாக பரீசிலித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு ஆலோசனை வழங்கியது.

அதன் அடிப்படையில் சென்ற ஆண்டு மாற்றுபாதையில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.இந்த மாற்றுபாதையில் ஊர்வலம் நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிடுவதற்கு தடை ஆணை விதிக்க கோரி இந்து முன்னணி சார்பாக நேற்று உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டது.இந்த வழக்கு இன்று (08.0.9.10) தலைமை நீதிபதி இக்பால் மற்றும் டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதலாம் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

நமக்கு நோட்டீஸ் வழங்காத போதிலும், விசாரணையின் போது தங்களையும் ஒரு தரப்பாக இணைக்க வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் முஹம்மது ஷிப்லியின் சார்பாக வழக்கறிஞர் காசிநாத பாரதி மற்றும் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகினர்.இவர்கள் தடை ஆணை வழங்க கூடாது என்று வாதிட்டனர்.

இதை அடுத்து தடை ஆணை விதிக்க மறுத்த நீதிபதிகள் மாவட்ட ஆட்சியர் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என்றும் இது குறித்த ஆலோசனை கூட்டதின் போது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் முஹம்மது ஷிப்லி அழைக்கபடவேண்டும் என்றும் உத்தரவு வழங்கி தீர்ப்பளித்தனர்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சரியான நேரத்தில் எடுத்த நடவடிக்கையால் இந்து முன்னணியின் முயற்சி முறியடிக்கப்பட்டது.எல்லாப் புகழும் இறைவனுக்கே

0 comments:

Post a Comment