Monday, September 27, 2010

வேளச்சேரி, தரமணி கபரஸ்தான் பிரச்சனை


வேளச்சேரி, தரமணி பகுதியில் முஸ்லிம்களின் "மையத்தை' (பிரேதத்தை) அடக்கம் செய்ய அடக்கஸ்தலம் இல்லாததைப் பற்றியும், அப்பகுதி முஸ்லிம்களின் குமுறல்களைப் பற்றியும் நாம் கடந்த இதழ்களில் நேரடிச் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.
அரசும், மாநகராட்சியும் முஸ்லிம்களின் அடக்கஸ்தல விஷயத்தில் அலட்சியம் காட்டி வரும் காரணத்தால், வேளச்சேரி, தரமணி, மேற்கு வேளச்சேரி முஸ்லிம் ஜமாஅத்தார்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ""முஸ்லிம் பரியல் கிரவுண்ட் ஜமாஅத் கமிட்டி'' என்று ஒரு கூட்ட மைப்பை உரு வாக்கி யுள்ளனர். இக் கூட்ட மைப்பில் வேளச்சேரி, தரமணி பகுதியில் இருக்கும் பள்ளி வாசல்களின் நிர் வாகி கள், அப்பகுதி முஸ் லிம் பிரமுகர்கள், சமு தாய அமைப்பின் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.
முஸ்லிம் பரியல் கிரவுண்ட் ஜமாஅத் கமிட்டி உருவாக்கிய பிறகு கமிட்டியின் சார்பாக முஸ்லிம்களுக்கு அடக்கஸ்தலம் அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி கமிட்டி நிர்வாகிகள் அப்பகுதியின் மாமன்ற உறுப்பினரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் அவர் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முஸ்லிம் பரியல் கிரவுண்ட் ஜமாஅத் கமிட்டியினர் சென்னை மாநக ராட்சி மேயர் மா. சுப்பிரமணியத்தை அவருடைய இல்லத்திற்கும், ரிப்பன் மாளிகைக்கும் சென்று 9 முறை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர். ஆனால் இன்று வரை எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை. மேயரிடம் வேளச்சேரி, தரமணி பகுதி முஸ்லிம்களுக்காக தரமணி லிங்க் ரோட்டில் 100 அடியில்சென்னை மாநகராட்சி சுடுகாட்டில் ஒதுக்கப்படுவதாகக் கூறப்படும் இடத்தை ஒதுக்கித் தரும்படியும், அல்லது மாற்று இடத்தைத் தரும்படியும் மனு அளித்தனர்.
மேயரோ, மாநகராட்சி மண்டலம் 10-ன் உதவி ஆணையாளரின் உதவி யுடன் புறம்போக்கு இடங்களை இனம் கண்டு, அவ்விடத்தை தானே நேரில் வந்து ஆய்வு செய்து, மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி முஸ் லிம்களுக்கு அடக்கஸ்தல இடத்தை அமைத்துத் தருகிறேன்'' என்பதையே முஸ்லிம்கள் மனு அளிக்கும் ஒவ்வொரு முறையும் கூறுகிறாரே தவிர, அதற்கான வெளிப்படையான முயற்சிகள் எதையும் இதுவரை அவர் செய்ததாகத் தெரியவில்லை என்கின்றனர் அப்பகுதி முஸ்லிம்கள்.
""முஸ்லிம்கள் மேயரை சந்தித்து எங்களுக்கு வேளச்சேரி, தரமணி பகுதி யில் அடக்கஸ்தலம் அமைத்துத் தாருங்கள் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்தால், கோரிக்கையை நிறைவேற்றுவதை விடுத்து ""நீங்கள் எல்லாம் இப்போ மரணிக்க மாட்டீர்கள், அதனால் அடக்கஸ்தலத்தை பற்றி மெது வாக யோசிப்போம்'' என்று மேயர் நையாண்டி செய்கிறார் என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத ஏரியாவாசி ஒருவர்.
மாநகராட்சி அடக்கஸ்தல விஷயத்தில் அலட்சியம் காட்டுவதால், அடக்கஸ்தலம் பெறும் முயற்சிகளை இன்னும் வீரியப்படுத்தியுள்ளது. முஸ்லிம் பரியல் கிரவுண்ட் ஜமாஅத் கமிட்டி இதற்காக தன்னுடன் இப்போராட்டக் களத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாத், தமுமுக, விடுதலைச் சிறுத்தையின் சிறுபான்மை பிரிவான இஸ்லாமிய ஜனநாயக பேரவையை சேர்த்துக் கொண்டு உள்ளது. அவர்களை வைத்து ஒரு ஆலோசனை கூட்டத்தையும் நடத்தி முடித்து உள்ளது பரியல் கிரவுண்ட் ஜமாஅத் கமிட்டி.

0 comments:

Post a Comment