தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் நேற்று (19.09.2010) நடை பெற்ற விநாயகர் ஊர்வலத்தின் போது சங்பரிவார் கும்பலின் சகிக்க முடியாத கோஷங்களினால் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதனால் ஊரில் கலவரம் அபாயம் வெடித்தது. பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இச்சம்பவத்தால் முப்பதிற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து மக்கள் கடையடைப்பு, மறியல் போன்ற போராட்டங்கள் நடத்த முடிவு செய்தனர். இதனை அறிந்த காவல்துறை கைது செய்யபட்டவரில் த.மு.மு.க, இ.த.ஜ.,எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட இயக்கத்தை சேர்ந்த 8சகோதரர்களை மட்டும் கைது செய்தனர். இயக்கம் சாராத மற்ற சகோதரர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மதுக்கூரின் புதிய நிலவரம்..........
.jpg)
ருடன் மதுககூருக்குள் புகுந்த அதிரடி படையினர் கண்ணில் பட்ட ஆட்டோக்களைஎல்லாம் அடித்து நொறுக்கினர். ஏராளமான முஸ்லிம்கள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டனர்.
இதற்க்கு பதிலளித்த அதிகாரிகள் இன்னும் யார் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார். பதற்றம் குறைய ஓத்துழைப்பு தரும்படியும் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து இரவு 12 மணியளவில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், தமுமுக,பாப்புலர் பிரண்ட் உள்ளிட்ட 8 நிர்வாகிகளை தவிர ஏனைய முஸ்லிம்களை காவல்துறை விடுதலை செய்தனர். வழக்கம்போல் காவல்துறை பேலன்ஸ் போக்கைத்தான் மதுக்கூரிலும் காட்டிஉள்ளது. முஸ்லிம்கள் தரப்பில் 8 பேர் மீதும்,எதிர் தரப்பில் 5 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளது. பிரச்னைக்கு காரணமானவர்களை விட்டுவிட்டு களத்திலே நிற்கும் சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் மீது வழக்குகள் போடப்பட்டிருப்பது அந்த பகுதியின் அமைதிக்கு வழிவகுக்காது அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தஞ்சை மாவட்ட தலைவர் ரசூல் முஸ்தஃபா, செயலாளர் ஷாஜித் தலைமையிலான 8 பேர் அடங்கிய குழு இன்று (20/09/10) காலை மதுக்கூர் சென்றது அங்கு காவல்துறை அதிகாரிகளை சந்தித்து பேசினர். பாதிக்கபட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.
-மதுக்கூரிலிருந்து நமது செய்தியளார்:மொய்தீன்
0 comments:
Post a Comment