Thursday, September 16, 2010

ஹிந்துக்கள் கோவில் கட்டலாம் என்றால் ஏன் முஸ்லீம்கள் மசூதி கட்ட கூடாது? - ஓபாமா

E-mailஅச்செடுக்க
வாஷிங்டன் : செப்டம்பர் 11 அன்று இரட்டை கோபுர தாக்குதல் நடந்த இடத்தில் மசூதி கட்ட திட்டமிட்டுள்ளதற்கு தீவிர கிறித்துவ, யூத குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதும் மசூதி கட்ட வேண்டும் என்று முஸ்லீம் குழுக்களும் போராடி வருவதும் வாசகர்கள் அறிந்ததே.
இச்சூழலில் அமெரிக்க அதிபர் ஒபாமா செப்டம்பர் 11 தாக்குதலின் 9வது நினைவு தினத்தை முன்னிட்டு அமெரிக்க மக்களுக்கு ஆற்றிய உரையில் செப்டம்பர் 11 தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தின் வலியை தாம் உணர்வதாகவும் அவர்களுக்காக தாம் பிராத்திப்பதாகவும் கூறினார்.
அதே சமயத்தில் அமெரிக்காவில் வாழும் எம்மதத்தவரும் தாங்கள் விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்கு முழு உரிமை உள்ளது என்று தான் நம்புவதாகவும் இரட்டை கோபுர தாக்குதல் நடந்த இடத்தில் கிறிஸ்துவர்கள் சர்ச் கட்டும் போது, யூதர்கள் சினாகாக் கட்டும் போது, இந்துக்கள் கோவில் கட்டும் போது முஸ்லீம்கள் மசூதி கட்டுவதில் எத்தவறும் இல்லை என்றும் ஓபாமா கூறியுள்ளார். ஏற்கனவே ஒபாமா முஸ்லீமா எனும் சர்ச்சை ஓயாத நிலையில் ஒபாமாவின் இப்பேச்சு பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது.
வாஷிங்டன் : செப்டம்பர் 11 அன்று இரட்டை கோபுர தாக்குதல் நடந்த இடத்தில் மசூதி கட்ட திட்டமிட்டுள்ளதற்கு தீவிர கிறித்துவ, யூத குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதும் மசூதி கட்ட வேண்டும் என்று முஸ்லீம் குழுக்களும் போராடி வருவதும் வாசகர்கள் அறிந்ததே.

இச்சூழலில் அமெரிக்க அதிபர் ஒபாமா செப்டம்பர் 11 தாக்குதலின் 9வது நினைவு தினத்தை முன்னிட்டு அமெரிக்க மக்களுக்கு ஆற்றிய உரையில் செப்டம்பர் 11 தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தின் வலியை தாம் உணர்வதாகவும் அவர்களுக்காக தாம் பிராத்திப்பதாகவும் கூறினார்.

அதே சமயத்தில் அமெரிக்காவில் வாழும் எம்மதத்தவரும் தாங்கள் விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்கு முழு உரிமை உள்ளது என்று தான் நம்புவதாகவும் இரட்டை கோபுர தாக்குதல் நடந்த இடத்தில் கிறிஸ்துவர்கள் சர்ச் கட்டும் போது, யூதர்கள் சினாகாக் கட்டும் போது, இந்துக்கள் கோவில் கட்டும் போது முஸ்லீம்கள் மசூதி கட்டுவதில் எத்தவறும் இல்லை என்றும் ஓபாமா கூறியுள்ளார். ஏற்கனவே ஒபாமா முஸ்லீமா எனும் சர்ச்சை ஓயாத நிலையில் ஒபாமாவின் இப்பேச்சு பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது.-inneram.com

0 comments:

Post a Comment