Wednesday, September 15, 2010

களை கட்டிய கடையநல்லூர் பொதுக்கூட்டம்




.

குறுநில மன்னர்களை போல் தங்களின் கோட்டை என பீற்றி கொண்டிருந்த மவ்லவிகளின் கோட்டைகளில் எல்லாம் ஓட்டை விழுந்து வருவதை மேலப்பாளையம் பொது கூட்டமும், தற்போது நடை பெற்ற கடைய நல்லூர் பொது கூட்டமும் நிரூபித்தன.
நெல்லை மாவட்ட எல்லையில் நுழையும் போதே ஆயுதம் தாங்கிய காவல் துறை அதிகாரிகள் நால்வர் அடங்கிய குழு நம்மை வரவேற்றது! மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் இந்த மாவட்டத்தில் நீங்கள் எங்கு சென்றாலும் எங்களின் பாதுகாப்பு தொடரும் என பின்தொடர்ந்தனர். இது என்ன புது செய்தியாக உள்ளதே ஒரு வேளை திருவிடசெரி சம்பவத்தை தொடர்ந்து துப்பாக்கி ஜமாத்தின் அச்சுறுத்தல் எதிரொலியா?அல்லது தென்காசி ஹிந்துத்வா அச்சுறுத்தல் எதிரொலியா ? என தெரியாமல் நாம் மறுத்த போதும் நம்மை பின் தொடர்ந்தனர்!

காலையில் தென்காசி பத்திரிக்கையாளர் சந்திப்பு ! பிரஸ் கிளப்-ல் நடை பெற்றது. சந்திப்பின் போது மத்தியில் இட ஒதுக்கீடு, மற்றும் பாபர் மசூதி குறித்த தீர்ப்பு பற்றிய நிலைப்பாடு போன்றவை பற்றி விவாதிப்பதற்காக வரும் அக்டோபர் ௩ அன்று சேலத்தில் கூட உள்ளதை பாக்கர் தெரிவித்தார் மேலும் சிறைவாசிகள் விடுதலை , முஸ்லிம்களுக்கு வட்டியில்லா கடன் , மற்றும் உள்ளூர் வரிவிதிப்பு போன்றவை குறித்தும் பேசினார்.அடுத்ததாக தென்காசி அரசு மருத்துவ மனையோடு இனைந்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த ரத்த தான முகாமில் பங்கேற்ற மாநில நிர்வாகிகள் ரத்ததானம் செய்த வர்களை உற்சாகபடுத்தினர்.
மேலும் ஜாக் மர்க்ஸ் சென்று லுஹர் தொழுத நம் நிர்வாகிகளிடம் த.த.ஜ.வினரிடம் மஸ்ஜிதுல் முபாரக்கை பறிகொடுத்து விட்டு அதே தெருவில் வாடகை வீட்டில் தொழுகை நடத்தி வரும் தங்களின் நிலை குறித்து குமுறினர். மேலும் இது குறித்து மாலை பொது கூட்டத்தில் பேசுமாறும், பள்ளி மீட்பில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் உதவியையும் கோரினர்.
மாலை மழையின் காரணத்தால் சற்று தாமதமாக துவங்கிய பொது கூட்டத்தின் முதல் பேச்சாளர் சகோதரர்.அப்துல் காதிர் மன்பயி 'இஸ்லாத்தில் இன்றைய இளைஞர்களின் நிலை ' எனும் தலைப்பில் அன்றைய சஹாபாக்களின் நிலையோடு ஒப்பிட்டு பேசியது மக்களை ஈர்த்தது.
அடுத்து பேசிய மாநில செயலாளர் செங்கிஸ் கான் 'தவ்ஹீத் வாதி யார் ? எனும் தலைப்பில் தவ்ஹீத் எனும் பெயரில் மக்களிடம் பிரிவினையை தூண்டி கலவரம் விளைவித்த த.த.ஜ .தலைமை தற்போது 'கொலை கூட செய்யலாம்' எனும் நிலை எடுத்து திருவிடசெரி விசயத்தில் நடந்து வருவதையும் மனிதாபிமானமின்றி கொலையை நியாயபடுத்தி பேசுவதையும் சாடினார்.
அடுத்து பேசிய பாக்கர் 'யார் தீவிரவாதி? எனும் தலைப்பில் ஆப்கன் ஈராக் போன்ற நாடுகளில் நடத்தி வரும் அமரிக்க பயங்கர வாதத்தையும், காந்தி முதல் மலேகோன் வரை உள்ள ஹிந்துத்வா பயங்கர வாதத்தையும் எடுத்துரைத்தார்.
'எங்களுக்கு கூடும் கூட்டத்தை இனி இவர்கள் ஒரு போதும் காணப்போவதில்லை 'என்று இறைவனை மறந்து 'ஏகத்துவத்தில் கொக்கரித்த கோமாளிகளின் கொட்டத்தை அடக்கும் முகமாக கூட்டத்தில் கடும் காற்றையும் பொருட்படுத்தாது [கடந்த பொது கூட்டத்தை விட மும்மடங்கு கூட்டம் + வாகனம் கொடுத்து திரட்டப்படாத கூட்டம் ] எராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டது அல்லாஹ்வின் மிகபெரும் அருளாக அமைந்தது.

0 comments:

Post a Comment