Wednesday, September 15, 2010

பஞ்ச் பட்டிக்காட்டான்-4


பட்டிக்காட்டான்; உஷ்ஷ்.. இப்பவே கண்ணக்கட்டுதே!
  • செய்தி; லாரி மோதியதால் சேதமடைந்த பயன்படுத்தப்படாத குடிநீர்க் குழாயில் இருந்து பணம் கொட்டியது.
பட்டிக்காட்டான்; வழக்கமாக பைப்ப தெறந்தா காத்துதான் வரும்; பரவாயில்லையே! இப்ப பணமெல்லாம் வருதே!! இப்பிடியே எல்லா குழாய்களிலும் பணம் வந்துச்சுன்னா மக்கள் குடிநீர் பிரச்சினைக்காக போராடமாட்டாங்க; ஏன்னா பைப்புல வர்ற பணத்துல மினரல் வாட்டர் வாங்கிக்குவாங்க.
  • பாஜகவின் தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்; வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, சட்டமன்றத்திற்குள் நுழைவோம்.
பட்டிக்காட்டான்; நெனப்புதான் பொழப்ப கெடுக்கும்னு பழமொழி சொல்வாக; அதுமாதிரி நீங்க ஜெயிக்கிறது அப்புறம் பார்ப்போம்; மொதல்ல எல்லா தொகுதிகளிலும் போட்டியிட வேட்பாளர் வேண்டாமா..?
  • முதல்வர் கருணாநிதி; இவ்வாறு ஒரு நூலை [ கலைஞர் 87 ] தொகுத்த வசந்திஸ்டான்லியின் பணி போற்றத்தக்கது; அவர் இதன் மூலம் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்.
பட்டிக்காட்டான்; அதாவது வசந்திஸ்டான்லி அவர்களைப் போல், இதுவரை விடுப்பட்ட கலைஞர் 86 , கலைஞர் 85 இப்பிடியாக உங்கள் மொத்த பொது வாழ்க்கையையும் நூலாக தொகுக்குமாறு உடன்பிறப்புகளுக்கு சொல்றமாதிரி தெரியுதே..!
  • மாநில ஜெயலலிதா பேரவை தீர்மானம்; ஜெயலலிதாவின் பாதுகாப்பிற்காக, ஒவ்வொரு தொகுதிக்கும் 100 பேரை தேர்வு செய்வோம்.
பட்டிக்காட்டான்; ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்ந்தெடுக்கும் 100 பேர் அந்த தொகுதிக்கு மட்டும்தானா? அல்லது மாநிலம் முழுக்க செல்வார்களா..? ஏன் கேட்கிறோம்னா இந்த கூட்டமே மாநாடு போலத் தெரியுமே அதுனாலதான்.
  • அ.இ.கா.கமிட்டி உறுப்பினர் கார்த்திசிதம்பரம்; பாஜகவுடன் கூட்டணி அமைக்காத ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி மட்டுமே. இதை முஸ்லிம்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
பட்டிக்காட்டான்; ஆமாமா! நீங்க வெளிப்படையா பாஜகவோட தேர்தல் கூட்டணிதான் வச்சுக்கலையே தவிர, மறைமுகமா 'மசோதா' கூட்டணி வச்சுக்கிட்டதெல்லாம் மக்களுக்கு தெரியாதாக்கும்..?

0 comments:

Post a Comment