Saturday, September 4, 2010

சென்னையில் நள்ளிரவில் முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற முஸ்லிம்கள் !


சென்னை திருவல்லிக்கேணி மற்றும் ராயப்பேட்டை பகுதிகள் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதி நோன்பு நேரங்களில் பெரும்பாலும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு மக்கள் அவதிக்கு உள்ளானர்.அதிலும் குறிப்பாக ரமளானின் கடைசி பத்து இரவுகளில் இரவெல்லாம் விழித்திருந்து வணக்க வழிபாடுகள் நடத்தும் நேரத்தில் மின்தடை ஏற்பட ,மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்தும் பலனின்றி , அவர்களின் பொறுப்பற்ற பதிலில் வெறுப்படைந்த மக்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மர்கசில் பயானில் இருந்த நிர்வாகிகளிடம் முறையிட , அனைவரும் அருகில் உள்ள காவல் நிலையம் சென்று 'இரவு மின்சாரம் வரவில்லையெனில் நாங்கள் மறியல் செய்வோம்' என்று கூற அவர்களும் 'செய்யுங்கள் எங்களுக்கு கவலையில்லை' எனக்கூற மக்கள் அனைவரும் வேறு வழியின்றி கொட்டும் மழையில் ஊர்வலமாக கோபாலபுரம் சென்றனர்.விஷயமறிந்த எஸ்.எம். பாக்கர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மக்களிடத்தில் 'முன்னறிவிப்பின்றி முதல்வர் வீட்டை முற்றுகையிடுவது முறையல்ல' என எடுத்து கூறி மக்களை சமாதானப்படுத்தினர்.இதற்கிடையில் மீடியாக்களுக்கும் அதிகாரிகளுக்கும் செய்தி கிடைத்து முதல்வர் வீடு இருக்கும் கோபாலபுரம் பகுதி நள்ளிரவு இரண்டு மணிக்கு பரபரத்தது! கொட்டும் மழையில் உறுதியாக நின்ற முஸ்லிம்களிடத்தில் பேசுமாறு அதிகாரிகள் பாக்கரிடம் பேச உடனடியாக மின்சாரம் வர ஏற்பாடு செய்கிறோம் என அதிகாரிகள் கூறினார். மீடியாக்கள் பாக்கரை சூழ்ந்து கொள்ள பாக்கர் அளித்த பெட்டியில் அதிகாரிகள் மெத்தனப்போக்கை ஒரு பிடி பிடித்தார் இரண்டு காவல் நிலையங்களை தாண்டி முதல்வர் வீடு வரை மக்களை வரவைத்த அதிகாரிகளின் அலட்சியத்தையும் ,முதவர் வீடு பாதுகாப்பு குறை பாட்டை இச்சம்பவம் எடுத்து காட்டுவதை கூறி நிலைமையை சாதுர்யமாக கையாண்டார்.சற்று நேரத்தில் பகுதியில் மின்சாரம் பழுது சரி செய்யப்பட்டு சீரடைந்ததை அடுத்து மக்கள் கலைந்தனர்.இப்படியாக நள்ளிரவு முற்றுகை நடந்தேறியது. .

0 comments:

Post a Comment