Thursday, September 23, 2010

தாமதிக்கப்படும் நீதி-மறுக்கப்பட்ட நீதியே!

பாபர் மஸ்ஜித் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் நாளை வழங்கவிருந்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

முன்னதாக அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரி ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது இன்று பிற்பகலில் விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் முடிவு செய்திருந்தது.

பின்னர் பிற்பகல் 2 மணியளவில் நீதிபதி ரவீந்திரன் தலைமையிலான பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது. அப்போது அயோத்தி தீர்ப்பை ஒத்திவைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் பெஞ்ச், எப்போது தீர்ப்பு வழங்குவது என்பது குறித்து செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறும் அடுத்தகட்ட விசாரணையின்போது முடிவு செய்யப்படும் என அறிவித்தது.
எனவே நாளை வழங்கவிருந்த அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்புக்கு இன்னும் ஒரு வார காலம் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளை அயோத்தி தீர்ப்பு வெளியாகும் என்ற சூழலில், நாடு முழுவதும் அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தன.

0 comments:

Post a Comment