Tuesday, January 4, 2011

பஞ்ச் பட்டிக்காட்டான்[12]



செய்தி; சீனப்பிரதமர் வருகை பாதுகாப்பு கெடுபிடி: பிரதமர் வீட்டிற்கு நடந்து சென்ற சோனியா.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; இப்பவாவது இவங்களைப்போல அரசியல்வாதிகள் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு வரும்போது பாதுகாப்பு என்ற பெயரில்  மக்கள் படுற அவஸ்தை புரியுதான்னு பார்ப்போம்.
 
பாஜக தமிழகத்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்; தேர்தலில் ஓட்டுக்காக தி.மு.க.,வினர் தரும் பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள். ஏனெனில், அது கொள்ளையடிக்கப்பட்ட பொதுமக்களின் பணம். ஆனால், அப்பணத்தை கோயில் உண்டியலில் போட்டுவிடுங்கள்.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; உங்கள மாதிரி ஆளுக இப்பிடி தவறா வழிகாட்டுறதுனாலதான் திருடிட்டு கொஞ்சம்  கோயில் உண்டியல்ல போட்டுட்டா  பாவமில்லன்னு சிலர் நினைக்கிறாங்க.
 
முதல்வர் கருணாநிதிஆ.ராசாவுக்கு சி.பி.ஐ. நோட்டீசு வழக்கமான ஒன்றுதான். 
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; ராசா  ராஜினாமா பண்ணி பத்துநாளைக்கு பிறகு சாவகாசமாக சோதனை போடும்போதே பாமரனும் விளங்கிக்குவான் இது ஒரு கண்துடிப்பு சோதனைதான்னு. இதுல  தனியா நீங்கவேற சொல்லனுமாக்கும்..?
 
செய்தி; மதுபானத்தில் தண்ணீர் கலந்து விற்ற பார் உரிமையாளர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; 'நாட்டுல தாய்ப்பாலைத் தவிர எல்லாத்துலயும் கலப்படம் பண்றான்; அவனைஎல்லாம் விட்டுட்டு, 'தண்ணீ'ல தண்ணீர்  கலந்த என்ன வந்து புடிக்கிறீங்களேன்னு  அந்த ஆளு சொல்றமாதிரி தெரியுதே?
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் தா.பாண்டியன் பேச்சு: நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களுக்கு, நினைவாற்றல் குறைவு. இது ஆள்பவர்களுக்கு தெரிந்திருக்கிறது. வேறு ஒரு நிகழ்ச்சி நடந்தால், இப்போது நாம் வேகமாக பேசிக்கொண்டிருக்கும் ஸ்பெக்ட்ரம் பற்றிக் கூட மறந்துவிட்டு, அதைப் பற்றி பேசத் தொடங்கி விடுவர்.
பஞ்ச் பட்டிக்காட்டான்; வாஸ்தவமான பேச்சுங்க! மக்களுக்கு மறதியிருக்குற காரணத்துனாலதான், 'ஜனவரில போராட்டம் பன்னுனா, ''ஏன்டா கிறுக்குப் பயலே; ஜனவரிக்கும் பாபர் மஸ்ஜிதுக்கும் என்ன சம்மந்தம்னு மக்கள் கேட்பான்''ன்னு சொன்னவங்களே இப்ப அதே ஜனவரில போராட்டம் நடத்துறாங்கண்ணா  பாத்துக்கங்க.
அமைச்சர் பொன்முடி பேச்சு; இப்படி என்னால் அனைத்து சீரியல் நிகழ்ச்சிகளையும் பட்டியலிட்டு கூறமுடிகிறது என்றால், எனக்கும் இதை பார்ப்பது தான் வேலை'.
பஞ்ச் பட்டிக்காட்டான்; சபாஷ்! தலைவர் புதுப்படத்தை 'பிரிவியூ' பாக்குறது; ஆடியோ வெளியீடு, சினிமா விழான்னு பிசியா இருக்குறாரு; நீங்க சீரியல்ல பிசியா இருங்க. நாடு உருப்பட்டமாதிரித்தான்.
செய்தி; வெங்காயம் ஒரு கிலோ ரூ.100 வரை விற்பதால் மக்கள் அவதி.
 பஞ்ச் பட்டிக்காட்டான்; ''வெங்காய விலை ஏற்றத்தை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் பண்ணுகிறார்கள்; நாங்கள் ஏன் இந்த அளவு வெங்காய விலை உயரும்வரை கண்டுகொள்ளாமல் இருந்தோம்னா அதிலும் ஒரு காரணம் இருக்கிறது. ஏற்கனவே தாய்மார்கள், சீரியல பாத்து கண்ணுல உள்ள கண்ணீர்  எல்லாம்  காலியாகி உள்ள நிலையில், சில கொடுமைக்கார கணவர்கள், வெங்காய போண்டா செய்; வெங்காய பச்சடி செய் என்று வெங்காயத்தை நறுக்க வைத்து தாய்மார்களை கண்ணீர் வடிக்க வைக்கிறார்கள். எனவேதான் தாய்மார்களை காக்கவே இந்த வெங்காய விலை ஏற்றம் என்பதை எதிர்கட்சிகளுக்கு சொல்லிக்கொள்கிறோம்'ன்னு பிரதமரோ அல்லது முதல்வரோ சொன்னாலும் சொல்லலாம்.
மத்திய தொலைத் தொடர்புத்  துறை அமைச்சர் கபில்சிபல்; 1999- ம் ஆண்டில் உரிமம் வழங்குவதில் கடைப்பிடிக்கப்பட்ட தவறான  நடைமுறையால் அரசுக்கு  1.43 லட்சம் கோடி  இழப்பு ஏற்பட்டுள்ளது.
 பஞ்ச் பட்டிக்காட்டான்; இதனால் தாங்கள் சொல்லவருவது என்ன? அவர்கள் நாட்டுக்கு நஷ்டத்தை  உண்டாக்குனாங்க. அதனாலதான் நாங்க  எங்க பங்குக்கும் நஷ்டத்தை  உண்டாக்குனோம்னு சொல்றீங்களா..?
ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசுவாமி; மதுரை பாராளுமன்ற தொகுதியில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளில் எனது கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவேன். 3 பேர் ஜெயித்தாலே எனக்கு போதும்.
 பஞ்ச் பட்டிக்காட்டான்; ஜெயிக்குறதெல்லாம் பின்னாடி பார்ப்போம். மொதல்ல வேட்பாளர் ரெடியான்னு சொல்லுங்க?
கிறிஸ்துமஸ் விழாவில் அண்ணாதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பேச்சு; அவரவர் பட்டா நிலத்தில் தேவாலயம் கட்ட தற்போது தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இங்கு வைக்கப்பட்டுள்ளது. அவரவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் யார் எதை வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம். இதில் தேவாலயம் கட்ட யார் தடை சொல்வது? அவர்களுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார்? நிச்சயமாக கழக ஆட்சி அமைந்தால் இந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படும்.
பஞ்ச் பட்டிக்காட்டான்; அவரவர் நிலத்துல மட்டுமல்ல. அவரவர் நெனச்ச இடத்துல கோயில் வேணும்னா கட்டமுடியும். ஆனால் ஒரு தேவாலயமோ, பள்ளிவாசலோ பட்டா நிலத்தில் கூட கட்டுறதுக்கு உள்ள ஓராயிரம் தடைகள் இம்புட்டு நாளா உங்களுக்கு தெரியாதாக்கும்..?


0 comments:

Post a Comment